செடி மரம்மூலிகை

மருதாணி மருத்துவ குணங்கள்

maruthani uses in tamil மருதாணி மருத்துவ குணங்கள் மருதோன்றி ஒரு புதர்த் தாவரம். இதனைச் சில இடங்களில் மருதாணி என்றும் கூறவார்கள். சில இடங்களில் இது செழித்து சிறு மரம் போல் வளர்வதுண்டு. இதற்கு அழவணம், ஐவனம், சரவணம் மருதோன்றி என்று வேறு சிறப்புப் பெயர்களும் உண்டு.

இதன் இலைகளில் இருபது சதவிகித சிவப்பு நிறமுடைய பொருள் அடங்கியுள்ளது. அதனால் சிறுவர், சிறுமியர், பெண்கள், சில ஆண்களும் கூடி கையில் மருதோன்றி இலையை அரைத்து கை, கால், உள்ளங்கை என்றுவைத்து அழகுபடுத்திக் கொள்கிறார்கள். இது கொத்துக் கொத்தாகப் பூத்துக் காய்க்கும். இதன் பூவின் மணம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்.

இதன் பூ, இலை, வேர்ப்பட்டை ஆகியவைகள் மருத்துவத்திற்குப் பயன்படுகிறது. தவிர இதன் விதைக்குப் பில்லி சூன்யத்தையும் அகற்றும் ஆற்றல் உண்டு என்பதை, “மருத்தோன்றியின் விதைக்கு மாபில்லி சூன்யம் விருதாண்ட பேய்பூதம் மேவும்” என்னும் இப்பாடலின் மூலம் உணரலாம். இதனுடைய விதையை நெருப்பிலிட்டு புகையை உண்டாக்கி வீடு முழுவதும் புகையைக் காட்டி வந்தால் மேற்கண்ட பில்லி சூன்யங்கள் விலகும்.

மருதாணி மருத்துவ குணங்கள் – maruthani uses in tamil

பெண்கள் நீண்ட முடியைப் பெற

Green-tea-benefits-for-hair-in-tamil

சில பெண்களுக்கு முடி வளராமல் குட்டையாக இருக்கும். இதனால் இவர்களது அழகையே கெடுத்துவிடும். ஆதலின் இதுபோன்ற பெண்கள் நீண்ட முடியினைப் பெற்று அழகாகத் திகழ கீழ்க்காணும் முறையினைப் பின்பற்றலாம்.

மருதோன்றி இலையைக் கொண்டு வந்து அரைத்துச் சிறுசிறு அடைகளாகத்தட்டி நிழலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.

தலைக்குப் பயன்படுத்தும் சுத்தமான எண்ணெயில் இவைகளைப் போட்டு சில நாட்கள் அப்படியே ஊறவிட்டு அதன் பின்னர் அதனை அடுப்பிலேற்றி காய்ச்சி பத்திரப்படுத்திக் கொண்டு, தினசரி தலைக்குத் தேய்த்து வந்தால் முடி நீளமாக வளரும் அத்துடன் கண்கள் நல்ல குளிர்ச்சி பெறும்.

மேக தழும்புகள் மறைய

மேக தழும்புகள் மறைய

ஐந்து கிராம் மருதாணி இலையுடன் ஐந்து மிளகு ஒரு பூண்டுப்பல் சேர்த்து அம்மியில் வைத்து அரைத்தெடுத்துக் கொள்ளவும். அதனை காலையில் மாத்திரம் சாப்பிடவும். இதுபோன்று ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் மேகத் தழும்புகள் மறைந்துவிடும். மருந்துண்ணும் நாட்களில் உப்பு இல்லா பத்தியம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

அம்மைநோயின்போது கண்களைப் பாதுகாக்க

அம்மைப் போட்டக் காலத்தில் சிலருக்குக் கண்களுக்குப் பாதிப்பு உண்டாகலாம். இதனை வருமுன் காக்க ஒருவழி. அம்மை நோய் கண்டவருக்கு மருதாணி இலையைக் கொண்டு வந்து அரைத்துக் கால் பாதங்கள் இரண்டிலும் வைத்துக் கட்டலாம். இதனால் அம்மை நோயினால் கண்களுக்குப் பாதிப்பும் கெடுதியும் ஏற்படாமல் பாது காத்துக் கொள்ளலாம்.

ஆரம்பகால தொழு நோய்க்கு

சிலருக்கு சதா உடலில் அரிப்பு உண்டாகி அதனால் இலேசாக தொழுநோய் ஆரம்பமாகலாம். இது போன்ற நிலையில் உள்ளவர்களுக்கு மருதோன்றி நல்ல பலன் அளிக்கும்.

மருதாணியின் இளந்தளர்களையும், பூக்களையும் நிறைய பறித்து வந்து கல்வத்திலிட்டு நன்றாக நைத்து சாறு பிழிந்து எடுத்துக் கொண்டு அதில் அரைத்தேக்கரண்டி அளவு காலை மாலை சாப்பிடவும்.

இதுபோன்று தினசரி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆரம்பகால தொழுநோய் காணாமல் போய்விடும். தவிர மேக வியாதியினால் பாதிக்கப்பட்டவர்களும் இதே மருத்துவ முறையைப் பயன்படுத்திப் பலன் பெறலாம்.

சிறுநீருடன் தாது வெளியேறினால்

ஒரு சிலருக்குத் தந்திமேகம் என்னும் நோய் உண்டாகும். இதனால் சிறுநீர் கழிக்கும் போது தாதுவும் சேர்ந்து வெளியாகும். இதனால் வேதனையோ எரிச்சலோ இல்லாவிட்டாலும் வெகு விரைவில் உடல் பலஹீனப்பட்டு மேலும் பலவித நோய்கள் வர வாய்ப்பளித்து விடும்.

ஆகையினால் இந்நோய்க்கண்டவர்கள் உடனடியாக கீழ்க்காணும் முறையில் சிகிச்சையை மேற்கொண்டு உடல் நலத்தைக் காத்தக் கொள்ள வேண்டும்.

மருதாணி இலையைக் கொண்டுவந்து சுத்தமாகத் கழுவி நன்றாகக் கசக்கிப்பிழிந்து அரை அவுன்ஸ் சாறு எடுத்துக் கொள்ளவும். இந்த அரை அவுன்ஸ் சாறுடன் இரண்டு அவுன்ஸ் பால் சேர்த்துச் சாப்பிடவும்.

வேண்டுமென்றால் சிறிது சர்க்கரையைச் சேர்த்துக் கொள்ளலாம். இதுபோன்று தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சில நாட்களிலேயே உடல் நலமாகிவிடும்.

உடல் வெப்பம் தணிய

உடலில் அதிகமாக சூடு இருந்தால் உடல் சூட்டினை தணிக்க இரவில் தலையணையின் கீழ் இதன் பூவை வைத்துப் படுக்கலாம். இதனால் உடல் வெப்பம் தணியும், சூட்டினால் உண்டாகும் களைப்பும் நீங்கும் maruthani uses in tamil மருதாணி மருத்துவ குணங்கள்.

உதிரச்சிக்கல் நீங்க

40 வயதுக்கு மேற்பட்ட சில பெண்களுக்கு உதிர சிக்கல் உண்டாவதுண்டு. இதனைப் போக்க ஒரு எளிய வழி. மருதாணியின் வேர்ப்பட்டையைக் கொண்டுவந்து சுத்தமான நீரில் நைத்துப் போட்டு அடுப்பில் ஏற்றிக் காய்ச்சி ஆறவிட்டு வடிகட்டி குடிநீராக கொடுத்துவந்தால் உதிரச் சிக்கல் நிவர்த்தியாகும்.

ஓமம் மருத்துவ பயன்கள்

தொண்டை கம்மலுக்கு

தொண்டை கம்மல், தொண்டை கரகரப்பு போன்ற தொந்தரவு இருந்தால் இதன் இலைகளை தண்ணீரில் ஊறவைத்து அந்தத் தண்ணீரில் வாய் கொப்பளித்து வந்தால் இதுபோன்ற குறைகள் நிவர்த்தியாகும்.

கால் வெடிப்புக்கு

கால் வெடிப்பு உண்டாகி கஷ்டப்படுபவர்கள், மருதாணி இலையைக் கொண்டுவந்து சுத்தம் செய்து எலுமிச்சம்பழச் சாறுவிட்டு மைய அரைத்துக் கால் வெடிப்புள்ள இடத்தில் தடவி வந்தால் கால் வெடிப்பு குணமாகும்.

தலைவலி குணமாக மருதாணி மருத்துவ குணங்கள்

தலைவலி குணமாக

தலைவலியினால் மண்டை “விண்விண்” என்று வலித்தால் மருதாணி இலையைக் கொண்டுவந்து சுத்தம் செய்து தாய்ப்பால் விட்டுமைய அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி உடனடியாகக் குணமாகும் maruthani uses in tamil மருதாணி மருத்துவ குணங்கள்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button