கீரை

manjal karisalankanni keerai | மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை

Manjal karisalankanni keerai மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை வகைகளில் மஞ்சள் கரிசலாங்கண்ணியும் ஒன்று. இதைக் குழம்பாகவும், பருப்புடன் சேர்த்துக் கூட்டாகவும் செய்து சாப்பிடலாம். இதைச் சாப்பிடுவதால் உடலுக்கு நல்ல பலத்தைத் தரும்; இரத்த விருத்தியை உண்டு பண்ணும், தோல் உஷ்ணத்தைத் தணிக்கும்.

கரிசலாங்கண்ணியில் இருவகை உண்டு. ஒன்று சாதாரண கரிசலாங்கண்ணி மற்றொன்று மஞ்சள் கரிசலாங்கண்ணி. இரண்டுக்கும் ஒரே குணமிருந்தாலும் மஞ்சள் கரிசலாங்கண்ணிக்கு சக்தி கொஞ்சம் அதிகம்.

மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை – manjal karisalankanni keerai

மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை - manjal karisalankanni keerai 

மஞ்சள் கரிசலாங்கண்ணி மஞ்சள் காமாலைநோயைக் குணப்படுத்தும் சக்திவாய்ந்தது. காசம், இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.

மஞ்சள் காமாலை ஆரம்பிக்கும் முன் நகம், கண், உதடுகளில் லேசாக மஞ்சள் படரும். பிறகு காய்ச்சல் ஆரம்பமாகும். 102, 103 டிகிரி வரை காய்ச்சல் இருக்கும்.

பிறகு கண்ணிலுள்ள வெள்ளைபாகம் மஞ்சள் நிறமாக மாறும். கால், கை, நகங்கள் மஞ்சளாக மாறும். சிறுநீரும் மஞ்சளாக இருக்கும். உடல் முழுவதும் கூட மஞ்சளாக மாறிவிடும்.

மஞ்சள் காமாலை நோய்க்கு

மஞ்சள் காமாலைக்கு

மஞ்சள் காமாலை நோய்க்கு அநேகவிதமான மருந்துகள் உண்டு, ஒருவருக்குப் பிடிக்கும் மருந்து மற்றவருக்குப் பிடிக்காது. இது தேகவாசியைப் பொருத்தது.

சிலருக்கு மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரையே மஞ்சள் காமாலையைப் போக்கி இருக்கிறது. எனவே மஞ்சள் காமாலைக்கு மஞ்சள் கரிசலாங்கண்ணியை உபயோகப்படுத்தும் முறையைக் காணலாம்.

மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்து கொடுக்கும் முன் பேதிக்குக் கொடுக்க வேண்டும். இதற்கு ஏதோ ஒரு பேதி மருந்தைக் கொடுக்கக் கூடாது.

மணத்தக்காளிக் கீரையைக் கொண்டு வந்து நைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து அந்த சாறில் ஒரு அவுன்ஸ் அளவு எடுத்து அதை மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டவருக்குக் காலையில் வெறும் வயிற்றில் கொடுத்து விடவேண்டும்.

இதைச் சாப்பிட்ட ஒரு மணி நேர்திற்குப் பின் வயிற்றுப் போக்கு ஆரம்பிக்கும். 4-5-6 முறை சுகமான பேதியாகும்.

மேலும் வயிற்றில் அசடு இருக்குமானால் கொஞ்சம் வெந்நீர் குடித்தால் மேலும் கொஞ்சம் பேதியாகும். வயிறு சுத்தமாகிவிட்டது என்று தெரிந்தவுடன் மோர் சாப்பிட்டால் பேதி நின்றுவிடும்.

அதன் பிறகு குறைந்த அளவு சாதத்தில் மிளகு ரசம் சாப்பிடலாம். பேதிக்குக் கொடுத்த தினத்திற்கும் மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்து கொடுக்கும் தினத்திற்கும் இடையே ஒருநாள் இருக்க வேண்டும்.

பிறகு 16 மஞ்சள் கரிசலாங்கண்ணி இலையை எடுத்து அம்மியில் வைத்து அத்துடன் எட்டு மிளகு வைத்து மைபோல் அரைக்க வேண்டும். தேவையானால் சிறிதளவு வெந்நீர் தெளித்து அரைக்கலாம்.

இதை வழித்து எடுத்து சரி பாகமாகப் பிரித்து ஒரு பாகத்தை வெற்றிலையில் வைத்து அதில் அரைத் தேக்கரண்டி அளவு சுத்தமான தேனைவிட்டுக் குழப்பி காலையில் கொடுத்துவிட வேண்டும். அரைமணி நேரம் கழித்து ஆகாரம் கொடுக்கலாம்.

மறு பாதியை மாலை ஆறுமணி அளவில் முன்போல அரைத் தேக்கரண்டி தேன் சேர்த்துக் குழப்பி கொடுத்துவிட வேண்டும். இவ்விதமாக மூன்று நாளிலிருந்து ஒன்பது நாள்வரையிலும் தொடர்ந்து கொடுத்து வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.

மேலும் மஞ்சள் நிறம் லேசாக இருந்தால் மேலும் ஏழு நாள் வரை கொடுக்கலாம். பூரண குணமேற்படும்.

இந்த மருந்தைச் சாப்பிட்டு வரும்போது பித்தம் சம்பந்தமான எந்த ஒரு பொருளையும் சேர்க்கக் கூடாது. முக்கியமாக வேர்க்கடலை, எண்ணெய், பீர்க்கங்காய், கொத்தவரை போன்ற அதிக பித்தமுள்ள ஆகாரங்களை விலக்கிவிட வேண்டும்.

கூடுமானவரை பத்தியக் காய்கறிகளுடன் பத்தியம் போல் சாப்பிட்டு வந்தால் வெகு சீக்கிரம் மஞ்சள் காமாலை குணமாகும்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button