கீரை

மணத்தக்காளி கீரை பயன்கள்

manathakkali keerai benefits in tamil மணத்தக்காளி கீரை பயன்கள்

manathakkali keerai benefits in tamil மணத்தக்காளி கீரை பயன்கள் மணத்தக்காளிக் கீரையின் இயல்பு குளிர்ச்சியை உண்டுபண்ணக் கூடியது. இக்கீரையில் புரதச்சத்துப் பொருள்களும், இரும்புச் சத்துப் பொருள்களும் மிகுதியாக அடங்கியுள்ளன.

மணத்தக்காளிக் கீரையினால் அதிகப் பலன்களைப் பெறலாம். இதில் சில உயிர்ச்சத்துக்களும், புரதச் சத்துக்களும், இரும்புச் சத்தும் அடங்கி உள்ளது.

கீரையில் அதிக அளவில் நீர்விட்டு சுண்டக்காய்ச்சி மிளகு, சீரகம், உப்பு போட்டு எண்ணெய் விட்டு தாளித்து குழம்பு போலத் தயார்செய்து உணவில் கலந்து உண்ணலாம்.

மணத்தக்காளிக் காயை தயிரில் ஊற வைத்து வெயிலில் காயவைத்து வறுத்து உணவுடன் கலந்து சாப்பிடலாம். இதனுடன் துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, தேங்காய் சேர்த்து தாளித்தும் உண்ணலாம்.

இதனை உணவுடன் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் வாய்ப்புண், குடற் புண் குணமாகும். மூலச் சூட்டையும் தணிக்கும். மணத்தக்காளிக் காயுடன் – கீரையும், பாசிப்பருப்பும் கலந்து உண்ணும் போது உடல் காங்கை என்னும் உடல் சூட்டைத் தணிக்கும். ஆசனக் கடுப்பு, நீர்க் கடுப்பு முதலிய நோய்கள் நீக்கும் .

மணத்தக்காளி கீரை பயன்கள் (manathakkali keerai benefits in tamil )

manathakkali keerai benefits in tamil மணத்தக்காளி கீரை பயன்கள்

வாய் புண்கள்

மணத்தக்காளி கீரை பச்சைப் பயிறுடன் சேர்த்து சமைத்துண்ணின் வாயில் ஏற்படும் புண்களும், குடலில் உண்டாகும் புண்களும் ஆறி குணமாகும்.

இக்கீரையில் சாற்றைப் பிழிந்து தெடுத்து வாயில் ஊற்றிக் கொண்டு சிறிது நேரம் அடக்கி வைத்திருந்து பிறகு உமிழ்ந்தாலும் வாயில் உண்டான புண்கள் விரைவில் ஆறிவிடும்.

வாய்ப் புண்ணால் வேதனைப்படுபவர்கள் இதன் சாறை எடுத்து வாய் கொப்பளித்து வரும் போது விரைவில் வாய்ப்புண் அகன்றுவிடும்.

இதய பலவீனம் குணமாக

இக்கீரையைப் பக்குவம் செய்து சாப்பிட்டு வர மிகுதியான உடற்சூடு தணியும். மேலும், இருதய பலவீனத்தைப் போக்கி நல்ல வலிவூட்டும்.

குடல் புண் குணமாக

வாயு தொல்லை நீங்க

மணத்தக்காளி செடியில் காய்க்கும் காய்களும் மருத்துவ பலன் தரக்கூடியது எனலாம். பச்சையாகவோ, உப்புடன் சேர்த்து வெய்யிலில் காயவைத்து வற்றலாக்கியோ வைத்துக் கொண்டு குழம்பு தயாரித்து சாப்பிட்டு வர குடற்புண் ஆறும். கல்லீரல் சூடு தணியும். நீரடைப்பு நீங்கும்.

மூல நோய் குணமாக

மூல நோயால் வேதனைப்படுகிறவர்கள் கீழ்கண்டவற்றின்படி தயார் செய்து பயன்படுத்தினால் மூல நோய் தீரும்.

சிறு வெங்காயத்தையும், மணத்தக்காளிக் கீரையையும் பொடியாக நறுக்கிக் கொண்டு சட்டியில் போட்டு கொஞ்சம் விளக்கெண்ணெய் விட்டு அடுப்பில் வைத்துக் கிண்டி சூடாக்க வேண்டும்.

சூடானதும் சட்டியைக் கீழே இறக்கி, சூட்டோடு அதனை எடுத்து ஒரு பெரிய வெற்றிலையில் வைத்து மூலம் கண்ட இடத்தில் வைத்துக் கட்டும் போது இதமாக இருக்கும், தொடர்ந்து கட்டும் போது மூலம் நீங்கிவிடும்.

காமாலை

காமாலை நோய்க்கு இந்தக் கீரையை நன்றாக இடித்து சாறு எடுத்து அந்த சாற்றுடன் பசுவின் பால் கலந்து தினசரி காலையில் வெறும் வயிற்றில் கொடுக்கும் போது ஒரு வாரத்தில் காமாலை நோய் அகன்று விடும். இது போன்றே பாண்டு மகோதரம் போன்ற நோயாளிகளுக்கும் கொடுக்கும் போது நோய் மட்டுப்படும்.

வல்லாரை கீரை பயன்கள்

வெள்ளை படுதல் தீர்வு

பெண்களுக்கு வெட்டைச் சூட்டினால் வெள்ளைப்படும். அது போன்றவர்கள் மணத்தக்காளிக் கீரையை நன்றாக உலர வைத்து நன்கு உலர்ந்ததும் ஒரு சட்டியில் நீர் நிறைய ஊற்றி இதனைப் போட் சுண்ட கஷாயமாகக் காய்ச்சி எடுத்து ஆறவிடவேண்டும்.

ஆறியதும் அந்த கஷாய நீரை பெண்களின் மர்ம ஸ்தானத்தில் தடவி அதனை அடிக்கடி சுத்தம் செய்து வரும்போது வெள்ளைப்படுவது நின்றுவிடும்.

மணத்தக்காளிக் கீரையில் உடல் நலத்தைக் காக்கும் பல பலன்கள் உள்ளமையால் அனைவரும் இதனைப் பயன்படுத்தி பலன்களைப் பெறலாம் manathakkali keerai benefits in tamil மணத்தக்காளி கீரை பயன்கள்.

 

மணித்தக்காளி இதன் காயும், பழமும் மணிமணியாக இருப்பதால் மணித்தக்காளி எனப்படுகிறது. கீரை வகைகளில் மணித்தக்காளியும் ஒன்றாகும்.

மணித்தக்காளி சிறு செடி இனத்தைச் சேர்ந்ததாகும். இதன் இலைகள் பச்சை நிறமாக தக்காளி இலையைப் போல இருக்கும்.

பூக்கள் கொத்துகொத்தாக வெள்ளை நிறத்தில் இருக்கும். இதன் காய்கள் பச்சை நிறத்தில் மிளகு போன்று காணப்படும். பழுத்ததும் கறுப்பு நிறமாக மாறிவிடும்.

மணித்தக்காளி இலையைக் கீரைபோல் கடைந்து உணவில் சேர்த்து உண்டுவந்தால் சளித் தொந்தரவு இருப்பின் நீங்கிவிடும். இருமல், இரைப்பு குணமாகும்.

வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் ஆற்றல் இதற்கு உண்டு.

மணித்தக்காளி கீரை , காய், பழம், வேர் இவைகள் அனைத்தும் பயன்படும். காயை வற்றலாகவும், ஊறுகாயாகவும் பயன்படுத்தலாம். நோய்களை அகற்றி உடலுக்கு வலிமையைத் தரும்.

விரை வீக்கத்திற்கு

விரை வீக்கத்தினால் அவதிப்படுவோர் மணித்தக்காளி கீரை கொண்டு வந்து வதக்கி இளம் சூட்டுடன் அதில் வைத்துக் கட்டி வந்தால் விரை வீக்கம் குணமாகும்.

மணித்தக்காளி வற்றல்

மணித்தக்காளியை வற்றல் செய்து உட்கொண்டால் சுவை யின்மையை நீக்கிப் பசியைத் தூண்டும். அத்துடன் பலவித நோய்களும் குணமாகும்.

மணித்தக்காளிக் காயைப் பறித்து சுத்தம் செய்து மோருடன் சிறிது உப்பு சேர்த்து இக்காய்களைப் போட்டு ஊறுவைத்து காலையில் எடுத்து வெய்யிலில் நன்கு காயவைத்து, மாலையில் மீண்டும் மோரில் ஊறவைத்து, அடுத்தநாள் காயவைத்து தொடர்ந்து இவ்வாறு செய்து நன்கு காய்ந்ததும் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.

இந்த வற்றலை எண்ணெய்யில் வறுத்து பொடிசெய்து சோறுடன் கலந்து மூன்று உருண்டைகள் சாப்பிட்டு வரவும். இதனால் மலச்சிக்கல் வயிற்றில் பூச்சித் தொல்லை நீங்கும்; உடல் பலஹீனம் அகலும்; காசம் போன்ற குறைபாடுகள் நீங்கும்; நீரிழிவு நோய் மட்டுப்படும்.

நெஞ்சில் கோழை

நெஞ்சில் கோழை கட்டிக் கொண்டு தொந்தரவு கொடுத்தால் மணித்தக்காளிக் காய்களை சமைத்து உண்வுடன் சேர்த்து உண்டால் கோழையை நீக்கும்.

இரத்த மூலத்திற்கு

இரத்த மூலத்தினால் கஷ்டப்படுகிறவர்கள் மணித்தக்காளி கீரை கீழ்க்காணும் முறையில் பயன்படுத்தி நலம் பெறலாம்.

மணித்தக்காளி கீரை , சிறு வெங்காயத்தையும் சன்னமாக நறுக்கிக் கொள்ளவும். மட்பாண்டத்தை அடுப்பில் வைத்து சிறிது விளக்கெண்ணெய் ஊற்றி நறுக்கியுள்ளவற்றை அதில் போட்டு லேசாக வதக்கிக் கொள்ளவும்.

இதனைச் சூட்டோடு ஒரு பெரிய வெற்றிலையில் வைத்து நோயுள்ள இடத்தில் வைத்துக் கட்டவும். மூலநோயினாலும், இரத்த மூலத்தினாலும் கஷ்டப்படுகிறவர்களுக்கு இதமாக இருக்கும். விரைவில் மூலம் குணமாகும்.

அஜீரண கோளாறுக்கு

அஜீரணக் கோளாறுக்கு மணித்தக்காளி ரசம் நல்ல நிவாரணம் அளிக்கும். மணித்தக்காளி இலையைச் சட்டியில் போட்டு அதிக அளவு நீர்விட்டு சுண்டக் காய்ச்சி நீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்.

இந்த வடி நீரில் மிளகு, சீரகம், உப்பு சேர்த்து எண்ணெயில் தாளித்து ரசத்தைச் சோற்றில் தளர ஊற்றி சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு அகன்று உடல் நலமாக இருக்கும் manathakkali keerai benefits in tamil மணத்தக்காளி கீரை.

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளை குணமாக

மணித்தக்காளி கீரை பறித்து வந்து கஷாயம் செய்து அந்த நீரை ஆறவைத்து பெண்களின் மர்மப் பகுதியில் தடவி அதனை அடிக்கடி சுத்தம் செய்து வந்தால் வெட்டைச் சூட்டினால் உண்டான வெள்ளை குணமாகும்.

காமாலை நோய்க்கு

காமாலை நோய்க்கு இதனை இடித்துப் பசும் பாலில் கலக்கி தினசரி காலையில் கொடுக்க வேண்டும்.

இதனைத் தொடர்ந்து கொடுப்பதினால் சிறுநீர், மலம் சுத்தமாக வெளியேறும், இரத்தத்தைச் சுத்தம் செய்து பித்தத்தை வெளியேற்றும், ஒன்பது நாட்களில் காமாலை நோய் குணமாகும் manathakkali keerai benefits in tamil மணத்தக்காளி கீரை.

 

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button