நாட்டு மருந்து

இலவங்கப்பட்டை பயன்கள்

இலவங்கப்பட்டை பயன்கள் lavanga pattai medicinal uses in tamil  cinnamon benefits in tamil இலவங்கப்பட்டை இதைக் கருவாப்பட்டை என்றும் கூறுவர். இதற்கு ஒருவித வாசனை உண்டு, இதிலிருந்து எண்ணெய் எடுக்கின்றனர். இந்த எண்ணெய் ஆங்கில வைத்திய முறையில் நிறைய பயன்பட்டு வருகிறது. சமையல் வகைக்கு இந்த பட்டை உபயோகப்பட்டு வருகிறது. இந்தப்பட்டை சில வியாதிகளைக் குணப்படுத்தக் கூடியதாக இருக்கிறது.

இலவங்கப்பட்டை பயன்கள் – Lavanga pattai medicinal uses in tamil

விக்கலுக்கு

இலவங்கப்பட்டை, திப்பிலி, சுக்கு இவைகளை வகைக்கு 5 கிராம் வீதம் எடுத்து. அம்மியில் வைத்து நைத்து ஒரு சட்டியில் போட்டு ஆழாக்குத் தண்ணீர் விட்டு அரை ஆழாக்காகச் சுண்டக் காய்ச்சிய கஷாயத்தை வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் காலை, பகல், மாலை கொடுத்து வந்தால் விக்கல் நிற்கும் இலவங்கப்பட்டை பயன்கள்

ஜீரண சக்தி உண்டாக

பசியின்மை நீங்க

இலவங்கப்பட்டை, கரியபோளம், அன்னபேதி வகைக்கு 5 கிராம் எடுத்து தேன்விட்டு மைபோல அரைத்து ஒரு சீசாவில் வைத்துக் கொண்டு, சாப்பிட ஒரு மணிநேரம் இருக்கும் பொழுது, ஒரு பட்டாணியளவு மருந்தை எடுத்து வாயில் போட்டு விழுங்கிவிட வேண்டும். இப்படி பகல் இரவு சாப்பிடுமுன் தொடர்ந்து மூன்றுநாள் சாப்பிட்டால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும் cinnamon benefits in tamil.

மஞ்சள் மருத்துவ பயன்கள்

சீதபேதி குணமாக

இலவங்கப்பட்டை பயன்கள் கடுக்காய்ப்பூ இவைகளில் வகைக்கு 5 கிராம் எடுத்து, நெய்யில் வறுத்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு, சுண்டைக்காயளவு தூளை எடுத்து வெண்ணெயில் கலந்து, காலை, பகல், மாலை ஆக மூன்று வேலை சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும். இந்த மருந்தைச் சாப்பிடும் பொழுது மிளகாய்க் காரத்தை நீக்க வேண்டும்.

பிரசவ காலத்தில் ஏற்படும் வலிப்பு குணமாக

அரைக்கீரை பயன்கள் arai keerai benefits in tamil

சில கர்ப்பவதிகளுக்குப் பிரசவ காலம் நெருங்கும்போது திடீரென ஒருவித வலிப்பு ஏற்படும். இது எல்லோருக்கும் வருவதில்லை. ஒரு சிலருக்கு மட்டும் ஏற்படும் cinnamon benefits in tamil.

இந்த வலிப்பு ஏற்பட்டால் அதைக் குணப்படுத்த இலவங்கப்பட்டை நன்கு பயன்பட்டு வருகிறது. இலவங்கப்பட்டையைப் பொடி செய்து துணியில் சலித்து வைத்துக் கொண்டு, வெங்காரத்தை நெருப்பில் போட்டால் அது நெற்பொரி போல பெரியதாகப் பொரியும்.

அதை எடுத்துத் தூள் செய்து துணியில் சலித்து, இரண்டு தூளையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொண்டு, இரண்டு உளுந்தளவு தூளை எடுத்து, தேனில் குழைத்துக் கொடுக்க வேண்டும். இந்த விதமாக ஆறுமணி நேரத்திற்கு ஒருமுறையாக ஒன்பது வேளை கொடுத்தால் வலிப்பு ஏற்படாது cinnamon benefits in tamil.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button