செடி மரம்மூலிகை

குன்றிமணி பயன்

குன்றிமணி பயன் kundumani uses in tamil rosary pea in tamil தோட்டப் பகுதிகளில் கொடியாகப் படர்ந்து வளரக் கூடியதாகும். காட்டுப் பகுதிகளிலும் அதிகமாக வளர்ந்திருக்கும். குன்றிமணியின் வேர்தான் அதிமதுரம் என்பதாகும். இது மருத்து வத்திற்கு மிகவும் பயன்படக் கூடியதாகும். அதிமதுரம் இல்லாமல் வைத்தியம் இல்லையென்றே கூட கூறலாம். அந்த அளவுக்கு அது உபயோகமுள்ளது.

இது மலத்தை இளக்கும் வெப்பத்தை அகற்றும், வீக்கம், அழற்சி போன்றவற்றையும் போக்கும். குன்றிமணி விதை உடலில் உண்டாகும் வலிகள், தசைப்பிடிப்பு, கை கால் மறத்துப் போதல் ஆகியவற்றிற்கு நிவாரணியாக உள்ளது. முடி உதிர்ந்து தலையில் சொட்டை விழுவதாக இருந்தால் இதனையே களிம்பு போன்று தடவி வந்தால் நல்ல பலனைக் காணலாம்.

தோலில் வெண்ணிறமா? ஒரு சிலருக்கு தோலின் நிறம் மாறி வெண்ணிறமாக மாற்றம் அடையும். இதுபோன்று தோலின் நிறமாற்றத்தைத் தடுத்து நல்ல பலனைக் கொடுப்பது குன்றிமணியாகும்.

குன்றிமணியின் இலை சாறு எடுத்து வெண்கொடி வேலி வேருடன் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதனை வெண்ணிறப் பகுதியில் தடவி வரவும். இதுபோன்று 40 நாட்கள் தொடர்ந்து தடவி வந்தால் தோலின் வெண்ணிறம் மாறி பழைய நிலை அடையும்.

குன்றிமணி பயன் – kundumani uses in tamil

கணவன் – மனைவி சந்தோஷத்திற்கு அதிமதுரம்

இளம் தம்பதியர்களிடையே உடல் இன்பத்தில் பிணக்கு வராமல் தாது பலத்தை உண்டு பண்ணும் வீரிய சக்தி குன்றிமணியின் வேர்ப்பகுதியான அதிமதுரத்திற்கு உண்டு. அதிமதுரத்தை நன்றாக இடித்துத் தூள் செய்து அதில் ஒரு தோலா அளவு எடுத்துக் கொண்டு, தேவையான வெண்ணெயும் தேனும் சேர்த்துக் குழப்பிக்கொள்ளவும். கணவன், மனைவி இன்பம் அனுபவிப்பதற்கு மூன்று மணி நேரம் முன்னதாகவே இதனைச் சாப்பிட்டு ஒரு கிளாஸ் பசும்பால் குடிக்கவும். அதன் பின் உடலுறவில் ஈடுபட்டால் நல்ல சந்தோஷத்தைக் கொடுக்கும்.

பிரண்டை மருத்துவ குணங்கள்

தாது பலம் பெற குன்றிமணி பயன்

காய்ந்து போன குன்றிமணிகளைக் கொண்டு வந்து நீர்விட்டு வேக வைத்து நிழலில் உலர்த்திக் கொள்ளவும். நன்றாக உலர்ந்ததும் தூள் செய்து எடுத்துப் பத்திரப்படுத்திக் கொள்ளவும். தினசரி இரண்டு கிராம் அளவு இதில் எடுத்து பசும் பாலில் கலந்து குடித்து வரவும்.

இதனால் தாது பலம் பெறும். மருந்துண்ணும் நாட்களில் உணவில் புளி, புளித்தமோர், எலுமிச்சம்பழம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. கண் எரிச்சல், கபால உஷ்ணமா? மேலே கண்ட பிணிகளுக்குக் குன்றிமணி தைலம் நல்ல பலனைக் கொடுக்கும்.

இந்தக் கொடியின் இலைகளைப் பறித்து வந்து நன்றாகக் கசக்கி சாறு எடுத்துக் கொள்ளவும். ஒரு அவுன்ஸ் சாறுக்கு இரண்டு அவுன்ஸ் கரிசலாங்கண்ணிச் சாறும், இரண்டு அவுன்ஸ் நல்லெண்ணெயும் சேர்த்துக் காய்ச்சி இறக்கி ஆறவிடவும். பிறகு வடிகட்டி தலைக்குத் தேய்த்துக் கொள்ள வேண்டும். இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால் கண் எரிச்சல் கபால உஷ்ணம் போன்ற பிணிகள் அகன்றுவிடும் குன்றிமணி பயன் kundumani uses in tamil rosary pea in tamil.

குன்றிமணி இலை

குன்றிமணி இலை பருவமடைய வேண்டிய வயது வந்தும் பருவமடையாத பெண் பருவ மடைய இந்த குன்றிமணி இலை பயன்படுகிறது. சுத்தம் செய்து கழுவி எடுத்த குன்றிமணியிலைபோடு ஒரு கைப்பிடி அளவு எள்ளு, சிறிதளவு வெல்லம் என இம்மூன்றையும் உரலில் போட்டு மைபோல இடித்து, எலுமிச்சை அளவு இம்மருந்தை காலை ஆகாரத்திற்கு முன் ஒரே வேளை மட்டும் கொடுக்கவும்.

24 மணி நேரத்தில் பூப்படைவாள். சில பெண்களுக்கு இரத்தம் அளவுடன் வெளியேறி நின்றுவிடும். சில பெண்களுக்கு இரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். இதற்காகப் பயப்படத் தேவையில்லை. பச்சை வாழைக் காயின் தோலைச் சீவிவிட்டு துண்டுகளாக்கித் தின்னும்படிச் செய்தால் அதிக இரத்தப் போக்கு குறைந்து அளவாக வெளியேறும். பிறகு மாதாமாதம் ஒழுங்ககாக ருது வெளியேறும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button