வீட்டு மருத்துவம்

Kovakkai health benefits in tamil | கோவைக்காய் பயன்கள்

Kovakkai health benefits in tamil கோவைக்காய் பயன்கள் கோவைக்காய் சமையலுக்கும் பயன்பட்டு மருத்துவத் துறைக்கும் நல்ல பலனை அளிக்கின்ற காயாகும். கோவைக்காயைக் கூட்டு, பொரியல், குழம்பு என சமைத்து உணவுடன் சேர்த்துக் கொள்வார்கள். இதனை சமையலில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் உடலில் உண்டாகும் கனசூடு குறையும்.

Kovakkai health benefits in tamil | கோவைக்காய் பயன்கள்

வாய்ப்புண், கண் எரிச்சல், சொறி சிரங்கு போன்றவை குணமாகும். இந்தக் காயின் சக்தியால் உடலின் உள்ளே இருக்கும் நீரை வெளியேற்று வதினால் சிறுநீர் அவயவங்களும் அதனைச் சார்ந்த உறுப்புகளும் நல்ல வலிமை பெறுகின்றன. ஆரம்ப நிலையில் உள்ள ஊது காமாலை நோய்க்கு கோவைக்காயைப் பயன்படுத்தினால் நல்ல பலன் அளிக்கும்.

கோவைக்காய், கீழாநெல்லி, நெருஞ்சிமுள் இம்மூன்றையும் சம எடை எடுத்து சட்டியில் போட்டு ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி சுண்டக்காய்ச்சி வடிகட்டி அதில் சர்க்கரை சேர்த்து தினசரி இரண்டு வேளை சாப்பிட்டால் காமாலை நோய் விரைவில் குணமாகும்.

கோவை இலையை அரைத்து வெண்ணெய்யுடன் குழைத்து சொறிசிரங்கில் பூசி அரைமணி நேரம் கழித்து சிகைக்காய்த் தூள் தேய்த்துக் குளித்தால் ஒருவாரத்தில் குணமாகும்.

குழந்தைகளுக்குச் சரியாக சிறுநீர் கழிவதில்லை என்றால் இந்தக் காயைச் சமைத்து சாதத்துடன் பிசைந்து கொடுத்தால் குணமாகும்.

கோவைக் காயை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி உணவுடன் பயன்படுத்தினல் எந்த நோயும் பிடிக்காமல் வாழலாம். இது நோய் தடுப்பு சக்திபடைத்தக் காயாகும்.

கறிவேப்பிலை பயன்கள்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button