கீரை

kovai keerai Benefits in tamil கோவை கீரை பயன்கள்

kovai keerai Benefits in tamil கோவை கீரை பயன்கள் துவரம் பருப்புடன் சேர்த்துக் கூட்டு சமைத்து நெய்யுடன் சேர்த்து உண்ணலாம். மற்ற பயறு வகைகளுடன் சேர்த்து சமைத்தால் சுவையுடையதாக இருக்கும். கோவைக் கீரையுடன் துவரம்பருப்பு, பாசிப்பயறு, தட்டைப் பயறு முதலியவற்றை சேர்த்துக் கடையும் போது நாவிற்கு இதமாக, உடலுக்கு நலமாக இருப்பதோடு சுவையாகவும் இருக்கும்.

kovai keerai Benefits in tamil – கோவை கீரை பயன்கள்

கோவை இலையால் இருமல், வாதகோபம், பெருவிரணம், சிறு சிரங்கு, தேகசூடு, நீரடைப்பு முதலிய நோய்கள் குணமாகும்.

இக்கீரை கண்களுக்குக் குளிர்ச்சி கொடுக்கும். கோவை இலையை நெய்விட்டு அரைத்துச் சாதாரணமாகக் காணும் புண்களுக்கும், அம்மையினால் உண்டான ரணங்களுக்கும் மேலே பூச புண் குணமாகும்.

கோவை இலையைக் கொதிக்கின்ற வெந்நீரில் போட்டு பதினைந்து நிமிடம் சென்றபின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் கொடுக்க உடல்சூடு, சொரிசிரங்கு, நீரடைப்பு, இருமல் ஆகியவை நீங்கும். இலையைப் பொடித்து திரிகடி பிரமாணமாகக் கொடுத்தாலும் மேற்குறிப்பிட்ட நோய்கள் நீங்கும். இதனால் இரச வேக்காடும் சாந்தமாகும். இலையை எண்ணெயில் கொதிக்க வைத்துப் படை, சொரி, சிரங்கு இவைகளுக்குப் பூசலாம்.

இவ்விலை சாறுடன் வெண்ணெய் சேர்த்துச் சிரங்குகளுக்குப் பூசலாம். இதன் சாற்றை வியர்வை உண்டு பண்ணுவதற்கு உடலில் பூசுவது உண்டு, கோவை இலைச் சாற்றுடன் நல்லெண்ணெய் கூட்டிக் காய்ச்சி வடித்து படர்தாமரை புண்ணுக்குப் பூசலாம்.

ஆசன துவாரத்தில் காணும் எரிச்சல், இரணம் இவைகளுக்கு மேல் தடவிவர புண் ஆறி குணமாகும். உடல் மீது பூசுவதற்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு வண்ணமும், நிறமும் ஊட்டுவதற்கு இக்கீரை பயன்படுத்தப் படுகிறது.

இவ்விலையோடு நெய் சேர்த்து வாட்டி கட்டிகளுக்கு இடக் கட்டிகள் பழுத்து உடையும். வாய்ப்புண் நீங்குவதற்கு இலையை மென்று சுவைக்கலாம். அவ்வாறு சுவைப்பதினால் வாய்ப்புண் ஆறும்.

இக்கீரையை எண்ணெய் காய்ச்சிக் கொடுப்பதும் உண்டு. இவ்வெண்ணெய்க்கு மேக சஞ்சீவி எண்ணெய் என்று பெயர்.

முடக்கத்தான் கீரை பயன்கள்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button