கீரை

கொத்தமல்லி கீரை மருத்துவ பயன்கள்

கொத்தமல்லி கீரை மருத்துவ பயன்கள் kothamalli keerai benefits

kothamalli keerai benefits கொத்தமல்லி கீரை பயன்கள் கொத்தமல்லி தனியா என்று சொல்லக்கூடிய ஒரு வகையான வாசனை விதையின் இளஞ்செடியினை கொத்துமல்லிக் கீரை என்று சொல்லப்படுகிறது. இரண்டங்குல உயர முதல் 12 அங்குல உயரம் வரை வளர்ந்துள்ள செடிகளின் கீரைகளையே சமையலுக்கு உபயோகப்படுத்துகின்றனர். நல்ல செழிப்பான பூமியில் இரண்டடி உயரம் வளர்ந்த இளஞ்செடிகளின் இலை களையும் உபயோகப்படுத்துவதுண்டு.

பொதுவாக ரசம், சாம்பார், குழம்பு, கூட்டு, பொரியல் இவைகளுடன் இதை வாசனைக்காகச் சேர்க்கின்றனர். இதைத் தனியே புளியை வைத்துத் துகையலாகச் செய்வதும் உண்டு.

இதை வாசனைக்காகச் சேர்க்கிறார்களே தவிர, இதில் அடங்கியுள்ள உயிர்சத்து மனித உடலுக்கு எந்த வகையில் பயன்படும் என்பதை அறிவதேயில்லை.

கொத்துமல்லிக் கீரையில் உள்ள வைட்டமின் ‘A’ உயிர்சத்துப் போல வேறு எந்த வகைக் கீரையிலும் கிடையாது.

20 கிராம் எடையுள்ள கொத்தமல்லி கீரை

கொத்தமல்லி கீரை மருத்துவ பயன்கள் kothamalli keerai benefits

வைட்டமின் ‘A’ உயிர்சத்து 2970 முதல் 3580 மில்லி கிராம் வரை இருக்கிறது. கொத்துமல்லிச் செடி வளரும் இடத்தைப் பொறுத்து உயிர்ச்சத்துக் கூடுதல் குறைவாக இருக்கும். கொத்து மல்லிக் கீரையில் மேலும் உயிர்ச்சத்துக்கள் உண்டு.

  • 20 கிராம் எடை அளவுள்ள கொத்துமல்லிக் கீரையில்
  • வைட்டமின் B1 உயிர்ச்சத்து 14 மில்லிகிராமும்,
  • வைட்டமின் B2 உயிர்ச்சத்து 17 மில்லிகிராமும்,
  • C வைட்டமின் உயிர்ச்சத்து 38 மில்லிகிராமும்,
  • சுண்ணாம்புச் சத்து 140 மில்லிகிராமும்,
  • இரும்புச்சத்து 28 மில்லிகிராமும் இருக்கிறது.

வேறு எந்தக் கீரையிலும் இல்லாத அதிக அளவு உயிர்ச்சத்து இந்த கொத்துமல்லிக் கீரையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கொத்தமல்லி கீரை பயன்கள் (kothamalli keerai benefits)

மனிதன் பெற்று உயிர் வாழ்வதற்குத் தேவையான அத்தனை உயிர்ச்சத்துக்களும் இந்தக் கொத்துமல்லிக் கீரையில் இருக்கிறது. இந்தக் கொத்துமல்லிக் கீரையில் பல வியாதிகளைக் குணப்படுத்தும் மருந்தாகவும் இருக்கிறது.

சிறு வயது முதலே கொத்துமல்லிக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்கள் வயிற்றில் வளரும் சிசு, நல்ல திடகாத்திரத்துடன் வளரும்.

  • குழந்தைப் பிறந்த பின் அதற்கு சொறி, சிரங்கு மற்றும் எந்தவிதமான நோயும் வராது.
  • குழந்தையின் எலும்புகளும், பற்களும் உறுதியுடன் இருக்கும்.
  • கண் சம்பந்தப்பட்ட உறுப்புக்கள் பலம் அடைந்திருக்கும்.

இரத்தம் சுத்தம் செய்ய

அகத்திக்கீரை நன்மைகள் தீமைகள் agathi keerai benefits in tamil

கொத்து மல்லிக் கீரையைத் தினசரிச் சாப்பிட்டு வந்தால், இரத்தம் சுத்தம் அடையும். புதிய இரத்தம் உற்பத்தியாகும். அதன் காரணமாக தாது விருத்தி அடையும். சந்தான விருத்தி ஏற்பட ஏதுவாகும்.

வயிற்று புண் குணமாக

அகத்திக்கீரை நன்மைகள் தீமைகள் agathi keerai benefits in tamil

வயிற்றில் புண் இருந்து அதன் காரணமாக அடிக்கடி வலி ஏற்பட்டு வருமானால், கொத்துமல்லிக் கீரையைத் தினசரி சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண் ஆறிவிடும். வயிற்று வலி குணமாகும்.

மூக்கு சம்பந்தமான வியாதிகள்

மூக்கு சம்பந்தமான வியாதிகள் குணமாக பீனிசம், மூக்கடைப்பு, மூக்கில் புண், மூக்கில் சதை வளர்தல் போன்ற கோளாறினால் கஷ்டப்படுகிறவர்கள், கொத்துமல்லிக் கீரையைத் துகையல் செய்து, சாதத்துடன் கொட்டைப் பாக்களவாகத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூக்கு சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும்.

அச்சரம் என்றால் என்ன

வாய்ப்புண் உள் உதடு, நாக்கு, உள் கன்னம் இவைகளில் அச்சரம் என்ற ஒரு வகைப் புண் உண்டாவதுண்டு.

அச்சரம் குணமாக

இது சாதாரணமாக சிறு புண் போல் தோன்றி பிறகு அது துவரம் பருப்பு அளவாக அகன்று விடும். இந்தப் புண்ணின் மையத்தில் கொழுப்பு போன்ற ஒரு வெண்ணிறப் பொருள் வட்டமாகப் படிந்திருக்கும்.

அதைச் சுற்றிலும் சதை மேடாக அணை போல உயர்ந்திருக்கும். இந்த வெண்ணிற பொருள் எக்காரணம் கொண்டாவது புண்ணை விட்டு வந்து விடுமானால், அந்தப் புண்ணில் இரத்தம் வரும்.

இவ்வாறு அச்சரம் தோன்றினால் சாப்பிடக் கஷ்டமாக இருக்கும். அந்தயிடத்தில் காரம் பட்டால் எரியும். மற்ற நேரத்தில் அந்தப் புண்ணுள்ள இடத்தில் வலி இருந்துக் கொண்டே இருக்கும்.

இந்த சமயம் கொத்து மல்லிக் கீரையை ஆய்ந்து எடுத்து அத்துடன் துவரம் பருப்பு, தேங்காய்ச் சேர்த்து கடையல் செய்து தினசரி சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வாய் அச்சரம் குணமாகும் kothamalli keerai benefits கொத்தமல்லி கீரை பயன்கள்.

முருங்கை கீரை பயன்கள்

வாய்ப்புண்

வாய்ப்புண்

வாயில் புண் ஏற்பட்டிருந்தால், அதே சமயம் வயிற்றிலும் புண் ஏற்பட்டிருக்கும். இந்த சமயம் மேலே சொன்னபடி கொத்துமல்லிக் கீரையைப் பருப்புச் சேர்த்துக் கடைந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆறும்.

உடல் பலம்

உடல் பலம் பெற உடலில் புதிய இரத்தம் உண்டாகி, உடல் நல்ல பலம் பெற வேண்டுமானால் கொத்துமல்லி கீரையை நெய்யில் வதக்கித் துவையல் அரைத்துத் தினசரி தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும். விலை உயர்ந்த டானிக்கில் கிடைக்கும் உயிர்ச்சத்துக்களை விட கொத்துமல்லிக் கீரையில் அதைப் பெறலாம்.

சொறி, சிரங்கு, புண்

சொறி, சிரங்கு, புண் ஆற உடலில் தோன்றியிருக்கும் சொறி, சிரங்கு, புண் இவைகளுக்கு மருந்துப் போட்டு வரும் சமயம் தினசரி சாதத்துடன் கொத்து மல்லிக் கீரையையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இவைகள் சீக்கிரமாக ஆறிவிடும்.

நரம்பு தளர்ச்சி குணமடைய

அரைக்கீரை பயன்கள் arai keerai benefits in tamil

கொத்து மல்லிக் கீரையைத் தினசரி எந்த வகையிலாவது சாப்பிட்டு வந்தால் வாலிப காலத்தில் தகாத வழியில் சென்று சக்தியைப் பாழாக்கிய காரணத்தால் ஏற்பட்டிருக்கும் நரம்புத் தளர்ச்சியைப் போக்கி, நரம்புகளுக்கு முறுக்கேற்றும்.

உடலிலுள்ள இரத்தம் சுத்தமாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகும். இதன் காரணமாக ஆயுள் நீடிக்கும். ஆரம்ப முதலே கொத்துமல்லிக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயதான காலத்தில் நரம்புத் தளர்ச்சி ஏற்படாது. நரை, திரை இன்றி உடல் பலத்தோடு வாலிபனைப் போல் நன்றாக நடமாடித் திரிய முடியும். ஊன்று கோல் தேவையில்லை

கண் பார்வை

சிறுவயது முதலே கொத்து மல்லிக் கீரையைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் ஆயுள் வரை கண் பார்வை மங்காது. கடைசிவரை கண்ணுக்குக் கண்ணாடி போட வேண்டிய தேவையே இருக்காது.

சாதாரணமாக ஒரு சிலருக்கு மாலைக்கண் என்ற கண் பார்வைக்கோளாறு ஏற்படுவதுண்டு இவர்கள் கொத்தமல்லி கீரை எந்த வகையிலாவது சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் குணமாகும் kothamalli keerai benefits கொத்தமல்லி கீரை பயன்கள்.

பித்தத்தை போக்கும்

கொத்துமல்லிக் கீரைக்கு வாயுவை கண்டிக்கும் குணத்தோடு, பித்தத்தையும் போக்கும் சக்தி உண்டு kothamalli keerai benefits கொத்தமல்லி கீரை பயன்கள்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல், உடலில் ஏதேனும் காரணம் பற்றி ஏற்படும் வலி இவற்றையும் குணப்படுத்த வல்லது கொத்து மல்லிக் கீரை எனலாம். இக்கீரையோடு வெற்றிலையும் சேர்த்து நன்கு அரைத்து அவ்விழுதை நெல்லிக்காயளவு உட்கொள்ள மேற்கூறிய தொந்திரவுகள் நீங்கும்.

தோல் சுருக்கங்கள்

வயதான காலத்தில் தோலில் ஏற்படும் சுருக்கங்கள் ஏற்படாமல் தோல் வழுவழுப்பாக இருக்க, சிறு வயதிலிருந்தே இந்த கொத்துமல்லிக் கீரையைச் சாப்பிட்டு வரவேண்டும்.

தோல் சம்பந்தமான எந்த வியாதியும் வராமல் தடுக்க இந்த கொத்துமல்லிக் கீரை நன்கு பயன்படுகிறது.

பல் சம்பந்தமான எல்லா வியாதி

பல் சம்பந்தமான எல்லா வியாதிகளையும் குணப்படுத்தும் சக்தி இந்த கொத்துமல்லிக் கீரைக்கு உண்டு பல்வலி மற்றும் பல் சம்பந்தமான வியாதியின் போது கொத்துமல்லிக் கீரையைச் சாப்பிட்டு வந்தால் அவைகள் குணமாகும்.

தினசரி கொத்து மல்லிக் கீரையைச் சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் எந்த நோயினாலும் பாதிக்கப்படாமல் பலசாலியாக வாழலாம் kothamalli keerai benefits கொத்தமல்லி கீரை பயன்கள்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button