மூலிகைசெடி மரம்

கொன்றை மரம் பயன்கள்

கொன்றை மரம் பயன்கள் kondrai poo benefits in tamil மஞ்சள் நிறப் பூங்கொத்துகளுடன் நீண்ட உருளை வடிவக் காய்களையுடைய மரமாகும். இதனைச் சரக் கொன்றை என்றும் கூறுவார்கள். இயற்கையாய் வளரும் மரத்தின் பூ, வேர், பட்டை, காய் ஆகியவை எல்லாம் மருத்துவப் பயன் உடையதாகும்.

கொன்றை மரம் பயன்கள் – kondrai poo benefits in tamil

ஆஸ்துமா நோய் தீர

தூதுவளை கீரை இளைப்பு நோய் குணமாக

ஆஸ்துமா நோய்க்கு இதன் சூரணம் நல்ல பலனை அளிக்கும். கொன்றைப் பட்டை, தூதுவளை சமூலம் இரண்டையும் நிழலில் உலர்த்தி சம அளவு எடுத்து நன்றாக இடித்துத் தூளாக்கி சலித்து பாட்டிலில் வைத்துக் கொள்ளவும்.

இந்த சூரணத்தை வேளைக்கு அரைத் தேக்கரண்டி எடுத்து தேனில் குழைத்துக் காலை, மாலை என இருவேளையும் தினசரி சாப்பிட்டு வந்தால் நோய் குணமாகும்.

நீரிழிவு நோய்க்கு

சர்க்கரை வியாதி எனப்படும் நீரிழிவுக்கு இதன் பூவை 500 கிராம் கொண்டு வந்து மெழுகாக அரைத்து மோரில் கலக்கிக் குடித்துவந்தால் நோய் அகலும்.

துளசி மருத்துவ பயன்கள்

உடல் மெலிந்தவர்கள் நன்கு தேற

உடல் மெலிந்து பலஹீனமானவர்கள் இதன் பூவைப் பயன்படுத்திப் பலன் பெறலாம். இதன் பூவிதழ்களைக் கொண்டு வந்து அதன் எடைக்குச் சமமாக கற்கண்டு சேர்த்து இடித்து தினசரி வெயிலில் வைத்து எடுக்கத் தேனூறலாகும். அதாவது குல்கந்து என்றும் கூறலாம். இதனை சுத்தமான பாட்டிலில் பத்திரப் படுத்திக் கொள்ளவும்.

இதிலிருந்து வேளைக்கு 3 கிராம் எடுத்துப் பசும்பாலுடன் சாப்பிடவும். இதுபோன்று காலை, மாலை என தினசரி சாப்பிட்டுவந்தால் உடல் மெலிவு அகன்று உடல் திடமாகும்.

காமாலைக்கு மருந்து

மஞ்சள் காமாலைக்கு

காமாலைக்கு இதன் பூவும் கொழுந்தும் மருந்தாகப் பயன்படுகிறது. கொன்றைப் பூவையும் கொழுந்தையும் சம எடை எடுத்து அம்மியில் வைத்து அரைத்தெடுத்து அதில் கொட்டைப்பாக்கு அளவு எடுத்துப் பசும்பாலில் கலக்கிக் குடித்துவந்தால் காமாலை குணமாகும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button