நாட்டு மருந்து

கிராம்பு பயன்கள்

Kirambu benefits in tamil cloves benefits in tamil கிராம்பு பயன்கள் கிராம்பு இதை லவங்கம் என்று சொல்வார்கள். இதில் ஒருவகை வாசனை உண்டு, அரை அங்குல நீளத்தில் மரமல்லிகைப் பூவின் வடிவத்தைப் போலிருக்கும். காப்பித்தூள் நிறத்திலிருக்கும். ஒருவகை மரத்தில் உண்டாகும் பூ இது.

வாசனைக்காக இதைச் சமையல் வகையில் சேர்க்கின்றனர். வாசனைப்பாக்கு மற்றும் சில பொருள்களுடன் இதையும் சேர்ப்பார்கள். இந்தக் கிராம்பிலிருந்து எண்ணெய் எடுக்கின்றனர். இந்த எண்ணெய் ஆங்கில வைத்திய முறையில் நிறைய பயன்பட்டு வருகிறது. கிராம்பு சில வியாதிகளைக் குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்பட்டு வருகிறது.

கிராம்பு பயன்கள் – Kirambu benefits in tamil

cloves benefits in tamil கிராம்பு பயன்கள் krambu benefits in tamil

தலைவலி நீங்க

தலைவலி குணமாக

ஆறு கிராம்பை எடுத்து மைபோல அரைத்து தலைப் பொட்டில் கனமாகப் பற்றுப் போட்டால் கொஞ்ச நேரத்தில் தலைவலி குணமாகும்.

பல்வலி குணமாக

பல்வலி குணமாக

மூன்று கிராம்பை எடுத்து அதை நைத்து வலி இருக்கும் பல்லின் மேலும் பக்கத்திலும் இருக்கும்படி வைத்து வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும்.

கிராம்பின் காரம் போனவுடன் உமிழ்ந்துவிட்டு வெந்நீரில் வாய் கொப்பளித்தால் வலி குணமாகும் cloves benefits in tamil கிராம்பு பயன்கள் Kirambu benefits in tamil

கர்ப்ப ஸ்திரீகளுக்கு ஏற்படும் வாந்தி நிற்க

அரைக்கீரை பயன்கள் arai keerai benefits in tamil

30 கிராம்பை எடுத்து நைத்து ஒரு சட்டியில் போட்டு ஆழாக்குத் தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து அரை ஆழாக்காகச் சுண்டக்காய்ச்சி இறக்கி வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் எடுத்து சர்க்கரைச் சேர்த்து, மூன்று வேளை சாப்பிட்டால் வாந்தி நின்றுவிடும்.

ஓமம் மருத்துவ பயன்கள்

சகல காய்ச்சலும் குணமாக

காய்ச்சல் குணமாக

எந்த வகையான காய்ச்சலானாலும் இந்தக் கிராம்புக் கஷாயம் குணப்படுத்திவிடும். கிராம்பு, கோஷ்டம், சுக்கு, தேவதாரு, சிற்றரத்தை, பேய்ப்புடலை, அதிமதுரம் இவற்றில் வகைக்குக் 21 கிராம் எடுத்து,

அம்மியில் வைத்துத் தட்டி ஒரு சட்டியில் போட்டு ஆழாக்குத் தண்ணீர் விட்டு அரை ஆழாக்காகச் சுண்டவைத்து வடிகட்டி, காலை, பகல், மாலை ஆக மூன்று வேளைக்கும், வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டுவந்தால் சகலக் காய்ச்சலும் குணமாகும். காய்ச்சல் குணமாகும்வரை தினசரி கஷாயம் தயார் செய்து இளஞ்சூடாகக் கொடுக்க வேண்டும் cloves benefits in tamil கிராம்பு பயன்கள் krambu benefits in tamil .

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button