மூலிகைசெடி மரம்

கீழாநெல்லி மருத்துவ பயன்கள்

keelanelli uses in tamil கீழாநெல்லி மருத்துவ பயன்கள் கீழாநெல்லி என்பது நெல்லி போன்ற இலை அமைப்பும், இலைக் காம்பின் அடியில் வரிசையாக நெல்லிக் காய்களைப் போன்ற சிறிய காய்களை உடையதால் இப்பெயர் உண்டாயிற்று எனக் கூறலாம்.

இது ஆறு அங்குலம் முதல் பன்னிரெண்டு அங்குலம் வரையில் இலைகளோடு வளரும் ஒரு சிறு தாவரமாகும். இது தன்னிச்சையாகவும், வேலியின் ஓரங்களிலும் வளரக்கூடியது. இதனைக் கீழ்காய் நெல்லி, பக்ஷபத்ரம் என்றும் அழைக்கப்படும்.

கீழா நெல்லி தைலம்

keelanelli uses in tamil கீழாநெல்லி மருத்துவ பயன்கள்

கீழா நெல்லி இலையில் தயாரிக்கப்படுகின்ற தைலம். கை, கால் எரிச்சல், கண்களில் உஷ்ணம், தலைச் சுற்றல், மயக்கம், பித்தம், கிறுகிறுப்பு ஆகிய குறைபாடுகளை குணமாக்கும் ஆற்றல் உண்டு.

கீழாநெல்லி மருத்துவ பயன்கள் – keelanelli uses in tamil

உடல் சூடு தணிய

கணச்சூட்டைத் தணிப்பதற்கு நாமே தைலம் தயாரித்து உபயோகித்து நலம் பெறலாம். கீழா நெல்லி இலையை நிழலில் உலர்த்தி தூள் செய்தும் அல்லது இலையை இடித்துச் சாறு பிழிந்தும் தைலம் தயாரித்துக் கொள்ளலாம்.

கீழாநெல்லி இலையைக் கொண்டு வந்து சுத்தமாகக் கழுவி நன்றாக நைந்து 500 கிராம் சாறு எடுத்துக் கொள்ளவும் keelanelli uses in tamil கீழாநெல்லி மருத்துவ பயன்கள் .

அந்தச் சாறுடன் 1 கிலோ வழக்கமாக தலைக்குத் தேய்த்துக் தலை முழுகும் எண்ணெயை சேர்த்துக் காய்ச்சவும்.

நீர் சுண்டியதும் ஆறவிட்டு வடித்துப் பத்திரப்படுத்திக் கொண்டு தலைக்குத் தேய்த்து கால் மணி நேரம் ஊறவிட்டு பாசிப்பயறு மாவு தேய்த்துக் குளிக்கவும்.

இது போன்று தலை முழுகி வந்தால் எப்பேற்பட்ட கணச்சூடும் தணிந்து உடல் குளிர்ச்சி பெறும்.

வெள்ளை வெட்டை – மூத்திர வியாதிகளுக்கு

மேற்கண்ட வியாதிகளுக்குக் கீழா நெல்லி இலை நல்ல மருந்தாகப் பயன்பட்டுக் குணமாக்குகிறது. கீழாநெல்லியைக் கொண்டு வந்து சுத்தமாகக் கழுவி காரமில்லாத அம்மியில் வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

மேற்கண்ட நோய் கண்டவர்கள் இதில் ஒரு எலுமிச்சம் பழம் அளவு எடுத்து மோரில் கலந்து காலை ஒரு வேளை சாப்பிடவும். இது போன்று மூன்று நாட்கள் சாப்பிட்டாலே போதும் நோய் குணமாகிவிடும்.

காமாலை நோய்க்கு கைக்கண்ட கஷாயம்

மஞ்சள் காமாலைக்கு

காமாலை நோய் கண்டவர்களுக்குக் கைகண்ட மருந்தாக இருந்து குணமாக்குகிறது கீழாநெல்லிக் கஷாயம். ஆதலால் கீழ்க்காணும் முறைப்படி கஷாயம் தயாரித்துக்குணம் பெறலாம் keelanelli uses in tamil கீழாநெல்லி மருத்துவ பயன்கள் .

கீழாநெல்லி இலை 30 கிராம். வில்வ இலை 30 கிராம். முற்றிய வேப்பிலை 30 கிராம் ஆகியவைகளை எடுத்து மட்பாண்டத்தில் போட்டு நீர்விட்டு அடுப்பில் ஏற்றிக் காய்ச்சவும்.

நீர் பாதியாகச் சுண்டியதும் மஞ்சள் தூள் 10 கிராம் சேர்த்துக் கீழே இறக்கி வடிகட்டிப் பத்திரப்படுத்திக் கொள்ளவும். அதிலிருந்து காலை 6 மணிக்கு 75மில்லி அளவுகஷாயம் எடுத்துக் குடிக்கவும்.

அதன் பின்னர் ஒரு நேரம் கழித்துதான் காலை உணவு உட்கொள்ள வேண்டும். மாலை 7 மணிக்கு 75 மில்லி அளவு கஷாயம் குடிக்கவும்.

இது போன்று தினசரி இரண்டு வேளை குடிக்கவும். உணவில் காரம், உப்பு சேர்த்துக் கொள்ளக் கூடாது. பலாப்பழம் தவிர மற்ற பழங்கள் சாப்பிடலாம். தினமும் வெள்ளாட்டுப்பால் 100மில்லி காய்ச்சிக்குடிக்கவும்.

மூலத்தில் இருந்து இரத்தம் வடிந்தால்

மூல நோய் குணமாக

மூலத்திலிருந்து இரத்தம் வடிந்து கஷ்டப்படுகிறவர்கள் கீழ்க்காணும் முறையை அனுசரித்து நிவாரணம் பெறலாம். கீழாநெல்லி வேரைக் கொண்டு வந்து சுத்தமாகக் கழுவி அதனை அரிசி கழுவிய நீர்விட்டு விழுது பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த விழுதிலிருந்து கழற்சிக்காய் அளவு எடுத்துத் தினசரி இரண்டு வேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டாலே மூலத்திலிருந்து இரத்தம் வடிவது நின்றுவிடும்.

நெல்லிக்காய் பயன்கள்

சிறுநீரில் சுக்கிலம் கலந்து வந்தால்

சிறுநீரில் சுக்கிலம் கலந்து வந்தால் உடல் நலம் மிகவும் பாதிக்கப்படும். ஆதலின் உடனடியாக இதற்கு வைத்தியம் செய்து கொள்ள வேண்டும்.

கீழாநெல்லி வேர் 200 கிராம் எடுத்து அதனுடன் விரளி மஞ்சள் 125 கிராம் சேர்த்து நெய்விட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு லிட்டர் பாலில் அரைத்த விழுதைப் போட்டு காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும்.

தினசரி காலை, மாலை இருவேளை வேளைக்கு ஒரு ஸ்பூன் அளவு வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரண்டு வாரங்களில் இந்த நோய் குணமாகும். காரமும், உப்பும் இல்லாத இலேசான உணவு உட்கொள்ள வேண்டும் keelanelli uses in tamil கீழாநெல்லி மருத்துவ பயன்கள் .

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button