கீரை

கரிசலாங்கண்ணி கீரை பயன்கள்

கரிசலாங்கண்ணி கீரை பயன்கள் karisalankanni keerai benefits

கரிசலாங்கண்ணி கீரை பயன்கள் karisalankanni keerai benefits கரிசாலங்கண்ணிக் கீரை கரிசலாங்கண்ணிக் கீரை மருத்துவக் குணம் கொண்டது. இதில் இருவகை உண்டு. ஒன்று மஞ்சள் பூ பூக்கும் கரிசாலங்கண்ணி, மற்றொன்று வெள்ளைப்பூ பூக்கும் கரிசலாங்கண்ணி. மஞ்சள் பூ பூக்கும் கரிசலாங்கண்ணி கிடைப்பது அரிது. எங்காவது ஒரு இடத்தில்தான் கிடைக்கும். ஆனால் வெள்ளை கரிசலாங்கண்ணி எப்போதும் கிடைக்கும். இதை அதிகமாகப் பயன்படுத்துவார்கள்.

கரிசலாங்கண்ணியில் இரண்டு சத்துகள் உள்ளன. ஒன்று தங்கச் சத்து, மற்றொன்று இரும்புச் சத்து. இது போன்று அபூர்வமான சத்து இந்த கீரையில் மட்டும்தான் உள்ளது.

இந்தக் கீரையைப் பொரியல், கடைதல், கூட்டு, சட்னி ஆகியவைகள் செய்து பயன்படுத்துவார்கள். நோயற்று ஆரோக்கியமாக வாழவேண்டுமாயின் ஒவ்வொருவரும் இந்தக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் கரிசலாங்கண்ணி கீரை பயன்கள் karisalankanni keerai benefits.

கரிசலாங்கண்ணி கரிசலாங்கண்ணி காடுகளிலும், தோட்டங்களிலும், வேலி ஓரங்களிலும் தன்னிச்சையாக வளரும் சிறு தாவரமாகும்.

நீர்வளம் மிகுந்த ஈரமான இடத்தில் படந்து வளரும். ஆறு அங்குலம் முதல் ஒன்பது அங்குலம் வரை, கம்பிபோல் புத்தண்டு வளர்ந்து நுனியில் சிறுசுண்டைக்காய் அளவில் ஒற்றைப்பூ பூத்திருக்கும்.

கரிசலாங்கண்ணி இலையைப் பச்சையாகவும், பருப்புடன் சேர்த்துக் கூட்டாகவும், எலுமிச்சம்பழம் சேர்த்து பச்சடியாகவும் சமைத்து உண்ணலாம்.

இதனால் உடலிலுள்ள கழிவுகள் சிறு நீரகத்தின் வழியாக வெளியேறும். இரத்தம் சுத்தமடைந்து ஆரோக்கியத்தை அளிக்கும்.

கரிசலாங்கண்ணி இலையைப் பயன்படுத்தும் போது பழுத்த இலைகளையோ, கொழுந்துகளையோ பயன்படுத்தாமல் நல்ல தரமான இலைகளையே பயன்படுத்த வேண்டும்.

கரிசலாங்கண்ணி கீரையில் மஞ்சள் பூ பூக்கும் வகை ஒன்று உண்டு, வெள்ளைப் பூ பூக்கும் வகை ஒன்று உண்டு. இருவிதமான கரிசலாங்கண்ணி இருந்தாலும் இரண்டின் பலனும் ஒன்றே.

கரிசலாங்கண்ணி கீரை பயன்கள் (karisalankanni keerai benefits)

கரிசலாங்கண்ணி கீரை பயன்கள் karisalankanni keerai benefits

காமாலை நோய்

கரிசலாங்கண்ணியிலைத் தட்டிச் சாறு எடுத்து, அந்தச் சாத்தில் தேக்காண்டியளவும், அதே அளவு தேனும் கூட்டிக் காலை, மாலையாக 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் காமாலை நோய் பூரணமாகக் குணமாகும்.

காமாலை நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கீரையைச் சுத்தமான அம்மியில் வைத்து மைபோல் அரைத்துக் கொள்ளவேண்டும்.

பசும்பாலைக் காய்ச்சி அதில் அதனை கரைத்து தினசரி காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் 15 நாட்களில் காமாலை நேய் அகன்றுவிடும்.

பல் வியாதி

பல சம்பந்தமான வியாதியினால் கஷ்டப் படுகிறவர்கள் காலை வேளையில் கரிசலாங்கண்ணி இலையை வாயில் போட்டு நன்றாக மென்று.

அதைக் கொண்டே பல் துலக்கி வந்தால், பல் நோய் பூரணமாகக் குணமாகும். பல் சம்பந்தமான வியாதி ஏதும் இல்லாதவர்கள் கூட இதைக் கொண்டு பல் துலக்கி வந்தால் பல் வியாதி வராது. பற்கள் முத்தைப் போல வெண்மையாகவும், மினுமினுப் பாகவும் இருக்கும்.

தூதுவளை பயன்கள் 

கல்லீரல்

கல்லீரல் வீக்கத்தால் இரத்தத்தில் கலந்துள்ள சிவப்பு அணுக்கள் குறைந்து, உடலும், கண்களும் சக்திக் குன்றிப் போய் வெளுத்து விடுவதுண்டு. இதனையே இரத்த சோகைநோய் என்பர். இந்நோயினை பூரண குணமாக்கும்.

சக்தி கரிசலாங்கண்ணிச் சாற்றுக்கு உண்டு. மூத்திரகோசம் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக கல்லீரலும் சீர்கேடு அடைவதால் ஏற்படும் நோய்க்குப் பாண்டுரோகம் என்று பெயர்.

இக்கொடிய நோயும் கரிசலாங்கண்ணிச் சாற்றை அருந்திவரின் நிவர்த்தியாகும். உடலினுள் உள்ள உறுப்புகளில் ஏற்படும் பல வகையான அழற்சிகளுக்கு கரிசலாங்கண்ணி சாறு நல்ல மருந்தாக உதவக்கூடியது.

கரிசலாங்கண்ணி லேகியம்

இந்தக் கீரையில் சித்த வைத்தியர்கள் கரிசாலை லேகியம் தயாரிக்கின்றனர். இதனைச் சாப்பிட்டால் கல்லீரல் கோளாறுகள், மலச்சிக்கல் ஆகிய நோய்கள் நீங்கி இரத்தத்தைச் சுத்தமும் செய்கிறது.

இரத்த சோகை, பாண்டு போன்ற நோயாளிகள் இந்தக் கீரையை அடிக்கடி உணவுடன் சேர்த்துக் கொண்டால் இந்நோய் அகன்றுவிடும்.

மஞ்சள் கரிசலாங்கண்ணி பயன்கள் (manjal karisalankanni keerai)

மஞ்சள் கரிசலாங்கண்ணி பயன்கள் (manjal karisalankanni keerai)

மஞ்சள் கரிசலாங்கண்ணி பயன்கள் கொண்டு வந்து நன்றாக உலர்த்தி இடித்துத் தூளாக்கி சுத்தமான துணியில் சலித்து எடுத்துப் பாட்டிலில் பத்திரப் படுத்திக் கொள்ளவும்.

இதனை இரவு படுக்கப் போகும்முன் ஒரு டீஸ்பூன் பவுடரை எடுத்து அந்த அளவில் கற்கண்டுத் தூள் சேர்த்துப் பாலில் கலந்து சாப்பிட வேண்டும். இது போன்று தினசரி சாப்பிட்டால் உடலில் எந்த நோயும் அணுகாது. ஆரோக்கியத்துடன் இருக்கலாம்.

வெள்ளை கரிசலாங்கண்ணி பயன்கள்

வெள்ளை கரிசலாங்கண்ணி கீரையை இடித்து சாறு எடுத்து முறையாகத் தைலம் தயாரித்து தினசரி தலையில் தடவி வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். மூனைவலுப்பெறும்.

குழந்தைகள்

சில குழந்தைகள் மண் தின்று வயிற்றில் கட்டி இருந்து வயிறு பெருத்து கெட்டியாகிவிடும். அதனால் ஜீரண சக்தி சரியாக இல்லாமல் அவதிப்படும்.

இதற்கு இந்தக் கீரையை மைபோல அரைத்து தினசரி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கொடுத்தால் நாளைடைவில் குணமடையும் கரிசலாங்கண்ணி கீரை பயன்கள் karisalankanni keerai benefits.

கரிசலாங்கண்ணியின் சாறைவீணாக்காதீர்

கரிசலாங்கண்ணியின் ஒவ்வொரு சொட்டு மூலிகைச் சாறும் தங்கத்திற்கு நிகரானது. ஆகையினால் சமையலுக்குப் பயன்படுத்தும் போது தண்ணீரும் சேர்த்துக் கொதிக்க வைக்கும் போதும் நீர் சுண்டும்படி செய்து தண்ணீரைக் கீழேக் கொட்டாமல் அதிலேயே சுண்டி கடைந்து தயார் செய்து பயன்படுத்த வேண்டும்.

நோய்கள் வராமல் இருக்கதுவையல் முறை

கரிசலாங்கண்ணி இலையுடன் பூண்டு, வெங்காயம், புதினா, கொத்துமல்லி, மிளகாய், புளி ஆகியவைகளை சட்டியில் போட்டு எண்ணெய் வாற்றிவதக்கித் துவையலாக அரைத்துக் கொள்ளவும் கரிசலாங்கண்ணி கீரை பயன்கள் karisalankanni keerai benefits.

இதனை சூடு சோறில் போட்டு நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஆயுள் முழுக்க நோய் அண்டாது.

காமாலை நோய்

காமாலை நோயினால் அவதிப்படுகின்றவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த இலையைச் சுத்தமான அம்மியில் வைத்து மெழுகாக அரைத்து சிறிய எலும்மிச்சம் பழம் அளவு எடுத்து பசும்பாலில் கலக்கிக் குடிக்கவும். தொடர்ந்து 15 நாட்கள் இவ்வாறு குடித்து வந்தால் காமாலை நோய் குணமாகும்.

ஈரல் தொடர்பான நோய் அகல

ஈரல் சம்பந்தப்பட்ட வியாதிகள் தோன்றினால் கேன்சர் வியாதி தோன்றக் கூடும். ஆதலின் ஈரல் சம்பந்தமான எந்த நோயும் வராமல் பாது காத்துக் கொள்ள வேண்டும்.

நோயில்லாத ஆட்டு ஈரல் கொண்டு வந்து ஒரு சட்டியில் போட்டு மஞ்சள் பூ கரிசலாங்கண்ணியின் இலையின் சாறு பிழிந்துவிட்டு, அதில் உப்பு, புளி, மிளகாய், கொத்துமல்லி, பூண்டு, சீரகம் மேலும் மசால் போட்டுச் சமைத்துச் சாப்பிட்டால் ஈரல் சம்பந்தமான நோய்கள் அணுகாது.

பார்வை விருத்திக்குப் பயனளிப்பது கரிசலாங்கண்ணி

கண் சம்பந்தமான கோளாறுகள் குணமாக.

கண்களுக்கும், மூளைக்கும் குளிர்ச்சி அளித்து பார்வையை விருத்திசெய்திட கரிசலாங்கண்ணி மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

கரிசலாங்கண்ணி இலையைப் பறித்து வந்து அதில் கால்படி சாறு பிழிந்து அதே அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சவும்.

நீர் சுண்டியதும் கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொண்டு  தினசரி தலைக்குத் தேய்த்துவந்தால் கண்கள் குளிர்ச்சி பெற்றுப் பார்வை விருத்தியாகும்.

கண்களைப் பாதுகாக்க கண்மை

பெண்கள் பலவித கண்மைகளை வாங்கிப் பயன்படுத்துவதினால் கண்கள் கெட வாய்ப்பு உண்டு. ஆதலின் கரிசலாங்கண்ணியின் மூலம் கண்மை தயாரித்து உபயோகித்தால் கண்கள் பாதுகாப்புடன் இருப்பதுடன், கண் எரிச்சல், கண் கட்டி மற்றும் கண் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.

இதன் இலையைத் தண்ணீர் விடாமல் சாறு எடுத்துக் கொண்டு அதில் நீண்ட சுத்தமான வெள்ளைத் துணியை ஊறப்போடவும் கரிசலாங்கண்ணி கீரை பயன்கள் karisalankanni keerai benefits.

ஊறிய துணியை எடுத்து உலர்த்தவும்; உலர்ந்த துணியை எடுத்து மீண்டும் சாறில் ஊறப்போடவும்; மீண்டும் உலர்த்தவும். இவ்வாறு ஐந்தாறு முறைகள் ஊறவைத்து உலர்த்திக் கொள்ளவும்.

விளக்கில் விளக்கெண்ணெய் ஊற்றி அந்த விளக்கிற்கு கரிசலாங் கண்ணி சாறில் ஊறவைத்து உலர்திய துணியை திரியாக்கி எரியவிடவும்.

எரியும் போது அதன் புகைபடும்படி ஒரு பீங்கான் தட்டைவைக்கவும். பீங்கான் தட்டில் படியும் புகையை பத்திரமாக சிறு புட்டியில் சேகரித்து அதனைக் கண்மையாக தீட்டிக் கொள்ளுங்கள். உண்மையில் இதுதான் கண்களைப் பாதிக்காதகண்மை ஆகும்.

வள்ளல் அடிகள் பாராட்டிய கரிசலாங்கண்ணி

வாழ்க்கயிைல் ஒவ்வொருவரும் கரிசலாங்கண்ணியைப் பயன் படுத்திப் பலன் பெறவேண்டும் என்கிறார் வள்ளலார். இதைப் பயன் படுத்தினால் அழுகிப் போன உடல் கூட பரிசுத்தமாகும்” என்றும் கூறுகிறார்.

ஆகையினால் அன்றாட உணவில் கரிசலாங்கண்ணியைச் சேர்த்து ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.

இரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவாக இருந்தால் இரத்த சோகை, பாண்டு போன்ற பல கொடிய நோய்கள் உருவாகிறது.

இந்தக் கீரையைத் தினசரி உபயோகித்தால் இதுபோன்ற வியாதிகள் நட்மைத்தீண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

கரிசலாங்கண்ணி இலையின் சாறு, பித்தநீரைப் பெருக்கச் செய்யம், கல்லிரலில் தோன்றும் வீக்கத்தைக் குறைக்கக் கூடியது.

இதனுடைய வேர் உடல் பலத்தைத் தரவல்லது. மேனியைப் பளபளப்புடன் இருக்கச் செய்ய வல்லது. மலமிலக்கி, மலச்சிக்கலைப் போக்க வல்லது. மொத்தத்தில் கரிசலாங்கண்ணி பல வகையிலும் பயனளிக்கும் மருத்துவ மூலிகையாகும். கரிசலாங்கண்ணி கீரை பயன்கள் karisalankanni keerai benefits

karisalankanni keerai for hair in tamil

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button