செடி மரம்மூலிகை

கண்டங்கத்திரி மருத்துவ குணங்கள்

kandankathiri uses in tamil கண்டங்கத்திரி மருத்துவ குணங்கள் கண்டங்கத்தரி சாதாரணமாக தமிழகமெங்கும் வளர்ந்திடும் செடியாகும். இது தரையில் பயர்ந்து வளரும். மருத்துவத்திற்குப் பயன் அளிக்கின்றன.

கண்டம் என்றால் முள். இது முள்ளுடன் இருப்பதால் இந்த பெயர் உண்டாயிற்று. இதனுடைய காய்கள் கத்தரிபோல இருக்கும்.

இதன் இலை, காய், வேர், விதை ஆகியவைகள் அனைத்தும் கண்டங்கத்தரி போன்றே முள் உள்ள வேறு ஒரு செடியும் இருக்கிறது.

அதனை கறிமுள்ளி என்று கூறுவார்கள். இதனை கண்டகாரி என்றும் கூறுவார்கள். ஆகையினால் இதைச் சரியாக இனம் கண்டு கண்டங் கத்தரியை மட்டும் மருத்துவத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.

கண்டங்கத்திரி மருத்துவ குணங்கள் – kandankathiri uses in tamil

ஓயாத இருமல் ஓய

இருமல் குணமாக

ஒரு சிலர் ஓயாது இருமிக்கொண்டே இருப்பார்கள், இதனால் பெரும் கஷ்டம் உண்டாகும்.

ஆதலின் ஓயாத இருமலை ஓயவைக்க ஒரு மருந்து, கண்டங்கத்தரி வேரை ஒரு தோலா எடுத்து நன்றாக நைத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

அதில் ஒரு அவுன்ஸ் எடுத்து சிறிது திப்பிலி தூளும் சிறிது தேனும் சேர்த்து காலைவேளை மட்டும் சாப்பிடவும். இதுபோன்று தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் ஓயாத இருமல் ஓய்ந்து சரியாகிவிடும்.

கை கால்களில் வெடிப்பு

கை, கால்களில் வெடிப்பு ஏற்பட்டால் கஷ்டப்பட வேண்டாம். இருக்கவே இருக்கிறது கண்டங்கத்தரி. கண்டங்கத்தரி இலையைக் கொண்டுவந்து சாறுபிழிந்து அந்த சாறை தேங்காய் எண்ணெயோடு சேர்த்துக் காய்ச்சி எடுத்து வெடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் வெடிப்புகள் மறைந்துவிடும்.

உஷ்ணத்தினால் சிறுநீர் தாராளமாக இறங்காவிட்டால்

கோடைக் காலத்தில் உடலில் கடுமையான உஷ்ணம் ஏற்படும் போது சிலருக்கு சிறுநீர் தாராளமாக இறங்காமல் வலி ஏற்படுவதுண்டு. இதனை உடனடியாகக் கவனிக்காவிட்டால் பின்னாளில் பெருந்தொல்லை ஏற்படுத்திவிடும்.

இதுபோன்ற குறையைப் போக்கிக் கொள்ள கண்டங்கத்தா இலையை நன்றாக நசக்தி சாறு பிழிந்து அந்த சாறோடு சம அளவு தேன் கலந்து அரை அவுன்ஸ் சாப்பிட்டால் போதும். நல்ல குணம் ஏற்படும் kandankathiri uses in tamil கண்டங்கத்திரி மருத்துவ குணங்கள்.

நரம்பு சிலந்தி, கண்டமாலை, விஷக்கடி, பாண்டு, சுவாசகோஷம் நீங்க கண்டங்கத்தரியுடன் வேப்பம்பட்டை வட்டத்திருப்பி, மரமங்கள், பேய்பீர்க்கு, ஆடாதொடை சிறு வழுதளை இவைகளை 350 கிராம் எடுத்து நன்றாக இடித்து நீர்விட்டு கண்டக் காய்ச்சவும்.

கண்டக் காய்ச்சியதும் அதில் நெய்சேர்த்து அத்துடன் திப்பிலிமூலம், மிளகு, செவியம், கோஷ்டம், கொடுவேலி வேர், அதிவிடையம் வட்டத்திருப்பி, வாய்விளங்கம், தேவதாரம், இந்துப்பு, சீரகம், ஓமம், அரத்தை, யானைத் திப்பிலி, மஞ்சிட்டி, வாலுளுவை, மஞ்சள், வெச்சாரம், பூதகரப்பான், கடசப்பாலை இவைகளை 10 கிராம் சேகரித்து அத்துடன் சுத்தி செய்த சுக்கு 500 கிராம் சேர்த்து அனைத்தையும் அரைத்துக் கரைத்து அதில் கலக்கிக் காய்ச்சவும்.

தினசரி காலை சிறிது இதில் எடுத்து சாப்பிட்டு வந்தால் பலவிதமான நோய்கள் தீரும். உடலும் பலம் பெறும். இது வீரியம் மிக்க மருந்தாகும். இதற்கு இச்சாப்பத்தியம் மிகவும் அவசியம்.

இதனை தினசரி சாப்பிடுவதனால் நரம்பு சிலந்தி, கண்டமாலை, பாண்டு, சுவாசக் கோஷம், விஷக்கடி, பீனிசம், மார்பு வலி, ஆறாத புண் போன்ற பலவிதமான நோய்கள் தீரும்.

பூவரசு மரம் பயன்கள்

சாதாரண சுரத்திற்கு

சாதாரண சுரமாக இருந்தால் கண்டங்கத்தரி வேரையும் சுக்கையும் சமமாக எடுத்து ஒன்றாகச் சேர்த்துக் கஷாயம் வைத்து சாப்பிடவும். இரண்டு வேளைகள் சாப்பிட்டாலே போதும் சாதாரண சுரம் நீங்கிவிடும்.

உடல் அலுப்புக்கு உகந்த மருந்து

உடல் அனுப்பினால் உற்சாமிழந்திருந்தால் கண்டங்கத்தரிக் காயைக் கொண்டுவந்து தட்டி உள்ளிருக்கும் விதைகளை அகற்றிவிட்டு குழம்பிலோ, சாம்பாரிலோ சமையலின் போது சேர்த்துச் சாப்பிட்டால் அனுப்பு அகன்று உற்சாகத்தை அளிக்கும்.

ஆஸ்துமா நோய்க்கு கண்டங்கத்திரி மருத்துவ குணங்கள்

தூதுவளை கீரை இளைப்பு நோய் குணமாக

ஆஸ்துமா நோய்க்கு சிறந்த பரிகாரமாகக் கண்டங்கத்தரி தைலம் விளங்குவதினால் இந்தத்தைலத்தைத் தயாரித்துப் பலன் பெறலாம். முதலில் கத்தரி சமூலத்தைக் (சமூலம் என்பது வேரொடு கொண்டு வருவது.

அதில் இலை, காய், பூ, வேர் ஆகிய அனைத்தும் அடங்கும்) கொண்டு வந்து நிழலில் உலர்த்தி துண்டுகளாக நறுக்கி இடித்துக் கொண்டு 1750 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை ஒரு பெரிய மட்பாண்டத்தில் போட்டு 12 லிட்டர் சுத்தமான தண்ணீர்விட்டுக் காய்ச்சவும்.

நன்கு காய்ச்சி ஒன்றரை லிட்டராகச் சுண்டியதும் கீழே இறக்கி மறுபாண்டத்தில் ஊற்றிக் கொள்ளவும்.

பின்னர் சிற்றரத்தை, சுக்கு, மிளகு, திப்பிலி, சிற்றாமுட்டி, நெருஞ்சி வேர் இந்த ஆறு சரக்குகளையும் வகைக்கு 70 கிராம் வீதம் எடுத்து நன்கு இடித்து சூரணமாக்கி வடிகட்டியுள்ள கஷாயத்தில் சேர்த்து அத்துடன் பசுவின் நெய் 1400 கிராம் சேர்த்து மீண்டும் அடுப்பில் ஏற்றிக் காய்ச்சவும்.

வண்டல் மெழுகு பதம் வரும்போது இறக்கி வடிகட்டி சுத்தமான கண்ணாடி பாட்டிலில் பத்திப்படுத்திக் கொள்ளவும். இந்தத் தைலத்திலிருந்து வேளைக்கு ஒரு ஸ்பூன் வீதம் காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காச நோய்கள் நீங்கும் kandankathiri uses in tamil கண்டங்கத்திரி மருத்துவ குணங்கள்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button