கீரை

கலவை கீரை | kalavai keerai benefits tamil

kalavai keerai benefits tamil கலவைக் கீரை இது ஒரு தனியான கீரையல்ல. எல்லா கீரைகளின் கலவைதான் கலவைக் கீரை எனப்படும். பொதுவாக சத்துக்கள் நிறைந்த முளைக் கீரை, மூக்கிரட்டை அரைக்கீரை, புளிச்சக்கீரை, பசலைக் கீரை போன்ற கீரைகள் பல கலந்து இருக்கும். உண்பதற்கு மிகவும் ருசியாக இருக்கும்.

அடிக்கடி உணவுடன் சேர்த்துக் கொண்டால் மூளைக்குப் பலம் தரும். இருதயத்தை வலிமைப்படுத்தும். வாத நோய் நீக்கும். பித்தம் தொடர்பான நோய்கள் அகன்றுவிடும்.

சிறுகீரை பயன்கள்

சத்துள்ள கீரைகள் பல கலந்துள்ளதால் இதை சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும். கல்லீரல், மண்ணீரல், ஜீரணப்பை போன்றவைகள் பலம் பெறும். ஜலதோஷத்தினால் உண்டாகும் கபக்கட்டு நீங்க இந்த கீரை பயன்படும்.

கலவை கீரைக் கூட்டு

கலவைக் கீரைக் கூட்டு என்பது பல கீரைகளின் சேர்க்கை ஆகும். இந்த தயாரிப்பு முறை கிராமங்களில் மிகப் பிரபலமாகும். இந்த கலவைக் கீரை கூட்டு முறையால் பல நன்மைகள் கிடைக்கின்றன. இந்த கலவைக் கீரை கூட்டு மற்ற சாதாரண கீரைகளைவிட அதிக காரச்சத்துடையாக இருக்கிறது.

ஏனெனில் இதில் சில மூலிகைகள் இடம் பெறுகின்றன. குப்பை மேனி, தும்பை, கவிழ்தும்பை, சாரவேளை, வேளைக்கீரை, வாதநாராயணன், சாராணத்தி இனங்கள் ஆகியவற்றைத் தனியாக சமைத்து உண்ண இயலாது kalavai keerai benefits tamil

இவற்றைக் கலவைக் கீரையில் சேர்த்து உண்ண ஏதுவாகிறது. மேலும் போதுமான அளவிற்கு இவை தானாக தோன்றி வளர்கின்றன. மேலும் இவைசுவை உடையனவாகவும், சத்துள்ளன வாகவும், மிருதுவானதாகவும், குழைவு உள்ளனவாகவும், உள்ளன.

மிகக் குறைந்த செலவில் போதுமான அளவிற்குக் இக் கீரைகள் கிடைக்கின்றன. உடல் நலத்திற்குத் தேவையான எல்லாவை சத்துக்களையும் குறைவிலாது தருகின்றன. இந்தக் கீரைகளை நாம் பயிரிடுவதும், பெறுவதும் எளிதானது.

ஆண்டுதோறும் பெரும் மழை காரணமாக புராட்டாசித் திங்கள் முதல்தை மாதம் வரை நல்ல முளைக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை, பருப்புக் கீரை போன்றவை கிடைப்பது அரிதாகும். ஆனால் இந்த பெருமழைக் காலங்களிலும் நன்கு செழித்து வளரும் இயல்புடைய கலவைக் கீரைகள் நமக்கு மிகவும் எளிதாகக் கிடைக்கும்.

இக் கீரைகளை வேரோடு பிடிங்கி அழித்துவிடாமல் கீரையை மட்டும் கிள்ளி எடுத்துக் கொள்ள வேண்டும்.

செடி கொடியின் அனைத்துக் கீரைகளையும் கிள்ளிவிடாமல் சிறிதளவு கீரைகளை விட்டுவிடவேண்டும். அப்போதுதான் அவை மீண்டும் துளிர்விட்டு வளம் ஏதுவாகும். நாம் மீண்டும் கீரைகளைக் கிள்ளி எடுத்துக் கொள்ளலாம் kalavai keerai benefits tamil.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button