நாட்டு மருந்து

கடுக்காய் நன்மைகள் தீமைகள்

கடுக்காய் பயன்கள் கடுக்காய் நன்மைகள் kadukkai benefits in tamil கடுக்காய் மருத்துவம் தலைவலி இரண்டு கடுக்காயை எடுத்து, ஒரு சட்டியில் தட்டிப் போட்டு, பத்து கிராம்பைத் தூள் செய்து அதில் போட்டு, ஆழாக்குத் தண்ணீர் விட்டு அரை ஆழாக்களவு சுண்டக் காய்ச்சி வடிகட்டி வேலைக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தீராத தலைவலியும் குணமாகும்.

கடுக்காய் நன்மைகள் – Kadukkai benefits in tamil

கடுக்காய் நன்மைகள் kadukkai benefits in tamil

 

விஷக் காய்ச்சலுக்கு

கடுக்காய் பயன்கள் கடுக்காய், நிலவேம்பு, சுக்கு, சீந்தில் கொடி, வேப்பம் வகைக்கு 10 கிராம் எடை எடுத்து அம்மியில் வைத்து ஒரு இரண்டு ஆழாக்குத் தண்ணீர் விட கொடுத்து வந்தால் விஷக்காய்ச்சல் குணமாகும் kadukkai benefits in tamil .

சீதபேதி குணமாக

 • கடுக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு வகைக்கு 10 கிராம் எடை எடுத்துத் தூள் செய்து காலை, பகல், மாலையாக மூன்று வேளைக்கும் வேளைக்கு அரைத் தேக்கரண்டியளவு தூளுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும்.

நீரடைப்புக்கு கடுக்காய் நன்மைகள்

ஒரு கடுக்காயைத் தூள் செய்து சோற்றுக் கற்றாழைச் சோற்றில் அரை ஆழாக்களவு எடுத்து அதில் இந்தத் தூனைப் போட்டு நன்றாகப் பிசைந்து, ஒரு துணியில் வைத்து வடிகட்டி அந்தச் சாற்றில் பொரித்த வெங்காரத் தூனில் ஒரு சிட்டிகையளவு போட்டு, இரண்டு கழற்சிக்காயளவு பனை வெல்லமும் சோத்து குழப்பிக் கொடுத்தால் கொஞ்ச நேரத்தில் நீர்ப்பிரியும்

கொருக்குப் புண் ஆற

ஆண் குறியில் ஏற்படும் ஒருவகைப் புணணை கொருக்குப் புண் என்று சொல்கிறார்கள். ஒரு கடுக்காயை தைத்து ஆழாக்களவுத் தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து ஆறியபின் அந்த நீரைக் கொண்டு கழுவி வந்தால் கொருக்குப் புண் ஆறிவிடும்.

கடுக்காய் பொடி சாப்பிடும் முறை

 • கடுக்காய் பொடி ஆண்மை அதிகரிக்கும். கடுக்காயை உடைத்து அதன் தோலை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
 • இலவங்கப்பட்டை, கிராம்பு இவைகளில் வகைக்கு 20 கிராம் எடையை ஒரு சட்டியிலிட்டு இளவறுப்பாக வறுத்து உரலில் போட்டு இடித்துச் சல்லடையில் சலித்து கொள்ள வேண்டும்.
 • ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, தினசரி காலை, பகல் மூன்று வேளைக்கும் சுண்டைக்காயளவு எடுத்து வெண்ணெய் சேர்த்துக் குழப்பி ஆகாரம் சாப்பிட்டவுடன் சாப்பிட்டு வந்தால் 10 நாட்களில் கிராணிக் கழிச்சல் குணமாகும்.

கடுக்காய் தோல் பயன்கள்

வயிற்றுப் பூச்சிகள் வெளிவர கடுக்காயை உடைத்து அதன் தோல், வேப்ப இலையில் நீண்டார்க்கு இரண்டிலும் ஒரே அளவு எடுத்து அம்மியில் வைத்து மைபோல அரைத்து, கழற்சிக்காயளவு எடுத்து தேக்கரண்டியளவு சிற்றாமணக்கெண்ணெயில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு விடவேண்டும்.

மூன்று நாள் தொடர்ந்து சாப்பிட்டால் குடலில் உள்ள புழுக்கள் எல்லாம் வெளியேறிவிடும் கடுக்காய் நன்மைகள் kadukkai benefits in tamil .

காய்ச்சல் குணமாக

கடுக்காய்த் தோல், நிலவேம்பு, சுக்கு, கடுகுரோகினி, தேவதாரு, வெப்பாலையரிசி, நெல்லிவற்றல் வகைக்கு 5 கிராம் எடை எடுத்துத் தட்டி ஒரு சட்டியில் போட்டு, இரண்டு ஆழாக்குத் தண்ணீர் விட்டு ஆழாக்களவிற்குச் சுண்டக் காய்ச்சி, வேளைக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குணமாகும்.

விக்கல் நிற்க

விக்கல் நிற்க

கடுக்காயை உடைத்து அதன் தோலை இடித்துச் சலித்து வைத்துக் கொண்டு ஓயாத விக்கல் ஏற்படும் சமயம் ஒரு சிட்டிகையளவு தூளை அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழப்பிக் கொடுத்தால், விக்கல் நிற்கும் kadukkai benefits in tamil.

பாவன கடுக்காய் சாப்பிடும் முறை

கடுக்காயைப் பதம் செய்து வைத்துக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்தலாம். ஆனால் முறையில் தயார் செய்ய வேண்டும்.

கடுக்காயை மூன்று விதமாக பதம் செய்யலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகைக்கு பயன்படும்.

இதை விட்டு பாவன கடுக்காய் என்று ஒரே முறையில் தயார் செய்து அது பல வியாதிகளைக் குணப்படுத்தும் என்று கொடுத்தால் அதனால் எதிர்பார்க்கும் எந்தப் பலனையும் அடைய முடியாது.

ஒரு சிலர் வைத்தியர் என்று கூறிக் கொண்டு வியாபார முறையில் இலாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, காடி தண்ணீரிலும், வீட்டில் அரிசியைக் கழுவும் தண்ணீரிலும், உப்பைப் போட்டு அதில் கடுக்காயை ஊறவைத்து இது தான் பாவன கடுக்காய் என்று விற்று வருகின்றனர்.

இதை வாங்கிச் சாப்பிட்டால் குறிப்பிட்ட பலனை அடைய முடியாது. எனவே, பாவன கடுக்காய் சாப்பிட்டு அதன் மூலம் நல்ல அடைய விரும்புவோர் சொந்தமாகத் தயாரித்துக் கொள்வது நல்லது.

பாவன கடுக்காய் தயாரிப்பது சிரமமான காரியமுமில்லை. எவரும் சுலபமாகத் தயார் செய்யலாம்.

அதிக அளவில் தயார் செய்து நல்ல முறையிலே விற்பனை செய்து பேரும், புகழும், பொருளும் பெற வேண்டுமானால் பெரிய ஜாடிகளிலே குறிப்பிட்ட முறைப்படி கடுக்காய்களைப் போட்டு நன்றாக மூடி,

மூடிக்குச் சீலை மண் செய்து, அதாவது மூடியின் மேல் ஒரு மெல்லிய துணியைப் போட்டு நல்ல களிமண்ணைக் குழைத்து மூடியின் மேல் ஒரு அங்குல கனம் வரை வைத்து, அதை ஜாடியின் கழுத்து வரை பரப்பி நன்றாக பூசி ஏழு நாட்கள் வரை வெய்யிலில் வைத்து எடுத்து வீட்டில் ஈரம் சாராத ஒரு இடத்தில் அப்படியே வைத்து விடவேண்டும்.

நாற்பதாம் நாள் சீலைமண்ணை எடுத்துவிட்டு கடுக்காயை எடுத்து உபயோகப்படுத்த வேண்டும் kadukkai benefits in tamil.

வசம்பு மருத்துவ குணங்கள்

கடுக்காய் பொடி தயாரிப்பது எப்படி

கடுக்காய் பயன்கள் இங்கு பத்து கடுக்காய் தயார் செய்யும் அளவு மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதிக அளவு கடுக்காய் தயார் செய்ய வேண்டுமானால், கடுக்காயின் எண்ணிக்கையையும் கூட்டுப் பொருள்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

ஊறவைக்கும் பாத்திரத்தையும் பெரியதாக எடுத்துக் கொள்ள வேண்டும். காய்ந்த கடுக்காய் சிறிய அளவில் இருக்கும்.

அது பாவன கடுக்காயாக மாறிய பின் தன் அளவை விட இரண்டு மூன்று பங்கு அளவு பெருத்துவிடும் சில கடுக்காய்களின் சதைப்பற்றைப் பொறுத்து அது பருக்கும் அளவில் வித்தியாசம் ஏற்படும்.

பத்து கடுக்காய் ஊறக்கூடிய அளவில் ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கிய வெந்நீரில் ஆழாக்களவு எடுத்து சீசாவில் விட்டு அதில் 20 கிராம் எடை இந்துப்பைத் தான் பண்ணிப் போட்டு நன்றாகக் கரையச் செய்ய வேண்டும். உப்பு முழுவதும் கரைந்த பின்,

நான்கு எலுமிச்சம் பழச்சாற்றை அதில்விட்டு நன்றாகக் கலந்து, அந்தத் தண்ணீரை சல்லடை மூலம் வடிகட்டி எடுத்து சீசாவை வெந்நீர் விட்டுக் கழுவிய பின் மறுபடி இந்தத் தண்ணீரை அதில் விட்டு நன்றாகப் பருத்த துளையேதுமில்லாத சுத்தமான கடுக்காயில் பத்து எடுத்து. அதை வெந்நீரில் கழுவிவிட்டு, இந்தத் தண்ணீரில் போட்டு சீசாவின் மூடியை முடிதினசரி வெய்யிலில் வைத்து எடுத்து. 11ம் நாள் உபயோகப்படுத்த வேண்டும் kadukkai benefits in tamil.

கடுக்காய் பொடி பயன்கள்

கடுக்காய் பொடி பயன்கள்

 • இந்தப் பாவன கடுக்காயில் கழற்சிக்காயளவு எடுத்து, காலை, மாலை சாப்பிட்டு வந்தால் பித்த கிறுகிறுப்பு மாறும்.
 • கண்பார்வை தெளிவடையும்.
 • காய்ச்சல் குணமாகும்.
 • இருமல் நிற்கும்.
 • மலத்தை இளக்கும்.
 • மலச்சிக்கல் தீரும்.
 • பசி தீபனத்தை பண்டாக்கும்.
 • கைகால் குடைச்சல் குணமாகும்.
 • பல்வலி குணமாகும்.
 • தொண்டைக் கட்டு விலகும்.
 • நல்ல ஜீரணசக்தி உண்டாகும்.
 • உடலிலுள்ள இரத்தம் சுத்தமாகும்.
 • உடல் பலம் பெறும் உடலிலுள்ள விஷக் கிருமிகள் அழியும்.
 • நோயற்று வாழ முடியும்.

கடுக்காய் நீர் பயன்கள்

கடுக்காய் நீர் பயன்கள்

கடுக்காய்ப் பொடி 1 தேக்கரண்டி தண்ணீரில் சேர்த்து மாலை நேரத்தில் குடித்து வந்தால் மாலையில் அருந்திவந்தால் காமாலை நோய் நீங்கும்.

முன் சொன்னது போல சீசாவில் கடுக்காய்களைத் தயார் செய்துக் கொண்டு, நன்றாக கொதிக்க வைத்து வெந்நீரில் 20 கிராம் எடை இந்துப்புப் பொடியும், நான்கு எலுமிச்சம்பழச் சாறும் விட்டுக் கலக்கி வடிகட்டி சீசாவில் விட்டு தேவையான அளவு இஞ்சியைத் தோல் சீவி உரலில் போட்டு இடித்துச் சாறு எடுத்து அந்தச் சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டுத் தெளியவைத்து அடியில் சுண்ணாம்புத் தேங்கியபின் தெளிவான சாற்றை மட்டும் இறுத்து,

அதில் இரண்டு அவுன்ஸ் அளவு எடுத்து சீசாவில் போட்டு 20 கிராம் எடைச் சீரகத்தை இடித்துப் பொடி செய்து அதையும் இந்த நீரில் கொட்டிக் கலக்கி, கடுக்காயைப் போட்டு ஊறவைத்து தினசரி ஒரு தட்டில் காயை மட்டும் எடுத்து வைத்துக் காய வைத்து மறுபடி நீரில் போட்டு மூடி விடவேண்டும் இந்தவிதமாகப் பத்துநாள் செய்துவிட்டு,

பதினோராம் நாள் உபயோகப்படுத்தலாம். இந்த சமயம் காயின் மேலும் மீதமுள்ள நீரிலும் ஈ, கொசு உட்காரமல் கவனமாக மூடி வைக்க வேண்டும்.

இந்த கடுக்காய் முதலில் சொல்லப்பட்ட வியாதிகளையே குணப்படுத்தக் கூடியதாக இருக்கும். ஆனால் இதற்குக் கொஞ்சம் சக்தி அதிகமிருக்கும்.

கடுக்காய் பயன்கள்

தேன் கடுக்காய்

தேன் கடுக்காய்

கடுக்காய் நன்மைகள் ஒரு வாயகன்ற சீசாவில் ஆழாக்குத் தேனை விட்டு அதில் பத்துக் கடுக்காயைப் போட்டு தினசரி வெய்யிலில் வைத்து எடுத்து வைக்க வேண்டும். 21 நாட்களுக்குப் பிறகே இதை உபயோகிக்க வேண்டும்.

இந்தக் கடுக்காயில் கழற்சிக்காயளவு காலை, சாப்பிட்ட வந்தால் வயிற்றுப் போக்குக் குணமாகும். சீதபேதி நிற்கும். கிராணிக் குணமாகும்.

ஜீரண சக்தி உண்டாகும். இரத்தம் சுத்தமடையும். உடல் பலம் பெறும். எந்த வியாதியும் வராது. தொண்டைக்கட்டு உடையும். இருமல் குணமாகும். அரோசிகம் மாறும் kadukkai benefits in tamil.

சீதபேதிக்கு கடுக்காய் எப்படி சாப்பிட வேண்டும்

 • கடுக்காய் பயன்கள் மாலை கடுக்காய்ப் பூவையும், காசுக் கட்டியையும் சமஅளவு எடுத்து,
 • கடுக்காய்ப் பூவை மட்டும் நெய்யில் வறுத்து எடுத்து
 • அம்மியில் வைத்துக் காசுக் கட்டியும் சேர்த்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு,
 • காலை, மாலை சிறிதளவு எடுத்துத் தேனில் கலந்துக் கொடுத்து வந்தால் சீதபேதிக் குணமாகும்.

இந்த சமயம் காரமான பதார்த்தங்களை நீக்கி, தயிர், மோர், நெய் மட்டும் அதிக அளவில் சாப்பிட்டு வரவேண்டும் கடுக்காய் பயன்கள் கடுக்காய் நன்மைகள் kadukkai benefits in tamil .

கடுக்காய் முகத்திற்கு பயன்கள்

முகம் பொலிவு பெற

 • கடுகாய் தூள் பல்வேறு தோல் நோய்களுக்கு பயனுள்ளதாக உள்ளது.
 • கடுக்காய் பொடி முகத்தில் உள்ள தழும்புகளை மறைக்க செய்கிறது.
 • இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளதால் முகத்தை இளமையாக காட்டுகிறது.
 • சருமத்தை கறைபடாமல் வைத்திருக்கிறது.
 • இது ஒரு அற்புதமான இரத்த சுத்திகரிப்பு.
 • முகப்பரு போன்ற தோல் பிரச்சினைகளால் நாம் பாதிக்கப்படும்போது பெரிதும் உதவுகிறது.

கடுக்காய் பக்க விளைவுகள்

கடுக்காய் பக்க விளைவுகள் கடுக்காய் தீமைகள்

கடுக்காய் பொடி தீமைகள் : மருத்துவரை அணுகாமல் இதை உட்கொள்ளவேண்டாம். ஏனென்றால் சிலருக்கு வயிற்றுப்போக்கு, நீரிழப்பு, காய்ச்சல், ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு பல்வேறு கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும்.
இது இரத்த சர்க்கரையை குறைக்கும் திறன் இதற்கு உள்ளது . எனவே ஏற்கனவே சர்க்கரை குறைக்கும் மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகள் இதை எடுப்பதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இதை எடுப்பதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையின்றி பயன்படுத்த வேண்டாம்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button