வீட்டு மருத்துவம்

சீரகம் தண்ணீர் பயன்கள்

சீரகம் தண்ணீர் பயன்கள் jeeragam water benefits in tamil

சீரகம் தண்ணீர் பயன்கள் jeeragam water benefits in tamil சீரகம் பலசரக்குக் கடைகளிலும் தமிழ் மருந்துக் கடைகளிலும் கிடைக்கக்கூடிய ஒரு சாதாரனா பொருள் சீரகம் ஒவ்வொரு வீட்டிலும் சமையலறையில் சீரகம் ஒரு இடம் பெற்றிருக்கும். சீரகத்தைச் சமையல் வகைக்குப் பயன்படுத்துகின்றனர்.

அதே நேரத்தில் சீரகம் ஒரு மருந்துப் பொருளாகவும் பயன்பட்டு பல வியாதிகளைத் தீர்க்கக் கூடியதாகவும் இருக்கிறது. மலிவாகக் கிடைக்கும். இந்த சீரகம் எத்தனையோ வகையான வியாதிகளைச் சுலபமாகக் குணப்படுத்தக் கூடியதாகவுமிருக்கிறது. இனி சீரகம் எந்தெந்த வியாதிகளைக் குணப்படுத்தும் என்பதை விளக்குவோம்.

சீரகம் தண்ணீர் பயன்கள் – Jeeragam water benefits in tamil

பித்தம் தணிய

பித்தம் காரணமாக உடலில் பல நோய்கள் ஏற்படும். பித்தம் சம்பந்தமான வியாதியினால் கஷ்டப்படுகிறவர்கள் சுலபமாக பித்தத்தை தணிக்க கீழ்க்கண்ட மருந்தைச் சாப்பிட்டு வரலாம்.

சீரகம், திராட்சைப்பழம், கொத்துமல்லி என்னும் தனியா இவைகளை வகைக்கு இரண்டு கிராம் எடுத்து, ஒரு சட்டியில் போட்டு, இளவறுப்பாக வறுத்து ஆழாக்களவு தண்ணீர்விட்டு, அரை ஆழாக்களவிற்குச் சுண்டக் காய்ச்சி, அதில் சரிபாதியைக் காலையிலும், மறுபாதியை மாலையிலும் தொடர்ந்து 20 நாள் சாப்பிட்டு வந்தால் பித்தம் அடியோடு விலகும்.

கண் வலிக்கு

கண் சம்பந்தமான கோளாறுகள் குணமாக.

கண் வலியினால் கஷ்டப்படும் பொழுது, காலை, மாலை கண்வலி குணமாக மருந்து விட்டு வந்தாலும் கூட கீழ்க்கண்ட மருந்தைத் தயார் செய்து இரவு வேளையில் கண்ணில் கட்டி வந்தால் கண்வலி சீக்கிரம் குணமாகும்.

பத்து கிராம் சீரகத்தையும், பத்து கிராம் கருவ மரத்தின் கொழுந்து இலையையும் சேர்த்து மைபோல அரைத்து எடுத்து, அதை வட்டமாக அடை போல தட்டி, அடையின் நடுவில் ஒரு மேலே துவாரம் செய்து இரவு படுக்கப் போகுமுன் கண்ணில் வைத்து, மறுநாள் ஒரு வெற்றிலையை வைத்துக் கட்டிவிட வேண்டும். காலையில் அவிழ்த்து விடவேண்டும். கண்வலி குணமாகும்வரை இப்படிச் செய்ய வேண்டும் சீரகம் தண்ணீர் பயன்கள் jeeragam water benefits in tamil .

கண்வலிக்கு வேறு முறை

குறிஞ்சா இலையைக் கொண்டுவந்து, கொஞ்சம் எடுத்து அதே அளவு வெங்காயம், சீரகம் சேர்த்து சுத்தமான கையில் வைத்துக் கசக்கிச் சாறு எடுத்து அந்தச் சாற்றில் மூன்று துளி கண்ணில் விடவேண்டும்.

இந்த விதமாகக் காலை, கண்களைச் சுத்தம் செய்தபின் விட்டு வந்தால் கண்வலி குணமாகும். கண்ணில் மருந்துவிடும் சமயம்தான் சாறு எடுக்க வேண்டும். முன்னதாக எடுத்த சாற்றை உபயோகப் படுத்தக்கூடாது.

கண்களில் பீழை சேர்வதை தடுக்க

சில குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் கண்களில் சதா பீழை சேர்ந்து நிற்பதைக் காணலாம். இப்படிப்பட்டவர்களுக்கு கீழ்க்கண்ட கஷாயம் நல்லபலன் தரக்கூடியதாக இருக்கிறது.

ஒரு தேக்கரண்டியளவு சீரகத்தை ஒரு சட்டியில் போட்டு லேசாக வறுத்து, ஒரு கைப்பிடியளவு வில்வ இலையையும் அதில் போட்டு வதக்கி, ஆழாக்களவு தண்ணீர் விட்டு அரை ஆழாக்களவிற்குச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி குழந்தைகளுக்கு சங்களவும், பெரியவர்களுக்கு ஒரு அவுன்ஸ் அளவும் காலை, மாலையாக இருபது நாட்கள் வரை கொடுத்து வந்தால், கண்களில் பீழை சேர்வது அடியோடு நின்றுவிடும்.

பிற்றுப்போக்கு நிற்க

பத்து கிராம் சீரகம், அதே அளவு வெங்காயம், ஒரு கைப்பிடியளவு இலந்தைக் கொழுந்து இவற்றை ஒரு சட்டியில் போட்டு லேசாக வறுத்து, அதில் ஆழாக்களவு தண்ணீர் விட்டு அரை ஆழாக்களவிற்குச் சுண்டக் காய்ச்சி இறக்கி வடிகட்டி இரண்டு அவுன்ஸ் வீதம் காலை, மாலை சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.

வாய்வு நீங்க

இருபது கிராம் சீரகம், பதினைந்து கிராம் ஏலரிசி, பத்து கிராம சுக்கு இரண்டரை கிராம் கற்பூரம் இவைகளையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து இடித்துச் சலித்து எடுத்து அது எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவு பழுப்புச் சர்க்கரை என்னும் நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு காலை, மாலை அரைத் தேக்கரண்டி அளவு சாப்பிட்டு கொஞ்சம் வெந்நீர் சாப்பிட வாய்வு பூரணமாகக் குணமாகும்.

மஞ்சள் மருத்துவ பயன்கள்

சுகப் பிரசவமாக

பிரசவ காலம் நெருங்கும் சமயம், ஒரு கிராம் சீரகத்தை அம்மியில் வைத்து மைபோல அரைத்து, கொட்டைப் பாக்களவு எருமை வெண்ணெயில் கலந்து காலை, மாலை மூன்று நாள் கொடுத்து. மூன்று நாள் விட்டு மறுபடி மூன்று நாள் கொடுக்கவேண்டும். இதேபோல பிரசவம் ஆகும் வரை கொடுத்து வந்தால் கஷ்டமில்லாமல் பிரசவம் நடைபெறும்.

இதை பிரசவ காலத்திற்கு ஒரு மாதம் முன்னதாகவே ஆரம்பிக்க வேண்டும். தொடர்ந்து கொடுக்காமல், விட்டுவிட்டுத்தான் கொடுக்க வேண்டும் சீரகம் தண்ணீர் பயன்கள் jeeragam water benefits in tamil .

அண்டவாய்வு குணமாக

சிலருக்கு விரையில் வாய்வு தங்கி வீக்கம் போல உப்பிசமடைந்து, சிலசமயம் வலி தோன்றுவதும் உண்டு. இதை அப்படியே விட்டுவிட்டால் வரவர் விரை வீக்கமடைந்து கஷ்டத்தைக் கொடுக்கும். இதை ஆரம்பத்திலேயே கவனித்துக் குணப்படுத்திவிட வேண்டும்.

கருஞ்சீரகம் 30 கிராம், உரித்த வெள்ளைப் பூண்டு பற்கள் 20 கிராம் இவைகளை மைபோல அரைத்து எடுத்து ஒரு வாணலியில் 50 கிராம் தேனை விட்டு, அடுப்பில் வைத்து அது காய்ந்து வரும் சமயம் அதில் அரைத்த மருந்தைப் போட்டுக் கலக்கிக் கிளறி இறக்கி வைத்துவிட வேண்டும்.

ஆறியவுடன் ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு காலை, மாலை இரண்டு கழற்சிக்காயளவு எடுத்து வாயில் போட்டு வெந்நீர் குடித்துவிட வேண்டும்.

தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் அண்டவாய்வு குணமாகும். மருந்து சாப்பிடும் வாய்வு பதார்த்தங்களை விலக்கிவிட வேண்டும். கூடுமானவரை பத்திய உணவு சாப்பிடுவது நல்லது.

ஜீரண சக்தி உண்டாக

மலச்சிக்கல் பிரச்சனை

30 கிராம் சீரகத்தை எடுத்து இளவறும்பாக வறுத்து, முறத்தில் போட்டுத் தேய்த்துப் புடைத்தால் அதன் தோல் நீங்கிவிடும்.

அதை அம்மியில் வைத்துத் தூள் செய்து ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, சாப்பிடுவதற்கு முன் சாதத்தில் ஒரு தேக்கரண்டியளவு தூளைப் போட்டு, குழம்பு, சாம்பார் எதுவானாலும் அதையும் கொஞ்சம் விட்டுப் பிசைந்து சாப்பிட்டபின் மேலும் சாதம் சாப்பிட வேண்டும்.

இந்தவிதமாகத் தொடர்ந்து 10 தினங்கள் வரை சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும்.

உடல் அரிப்பு விலக

உடல் அரிப்பு விலக

சிலரது உடலில் சதா அரிப்பு இருந்து கொண்டேயிருக்கும். இது சருமம் சம்பந்தமான ஒரு வியாதி. இதைக் குணப்படுத்த சீரகம் நன்கு பயன்படக் கூடியதாக இருக்கிறது.

குளிப்பதற்கு முன்னதாகத் தேவையான அளவு சீரகத்தை மை போல அரைத்து உடல் முழுவதும் பூசிக் கொண்டு அரைமணி நேரம் கழித்து வெந்நீரில் குளித்து வந்தால் உடல் அரிப்பு விலகும். 10-நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.

கர்ப்ப ஸ்திரீகள் வயிற்றுவலி குணமாக

கர்ப்பஸ்திரீகளுக்கு சிலசமயம் அடிக்கடி வயிற்றில் வலி ஏற்படுவதுண்டு. இதற்கு மருந்துகளைக் கொடுக்கத் தேவையில்லை. சீரகம் ஒன்றே குணப்படுத்தக் கூடியதாக இருக்கிறது.

15 கிராம் எடை சீரகத்தை ஒரு சட்டியில் போட்டு ஆழாக்குத் தண்ணீர்விட்டு அரை ஆழாக்களவிற்குச் சுண்டக் காய்ச்சி, அந்தக் கஷாயத்தில் எலுமிச்சம்பழ அளவு பசுவின் வெண்ணெய் கூட்டிக் கலக்கிக் குடிக்கக் கொடுத்து விட்டால் வயிற்றுவலி நின்றுவிடும்.

பெரும்பாட்டுக்கு

பெண்கள் வியாதிகளில் “பெரும்பாடு” ஒரு கடுமையான வியாதியாகும். இதை ஆரம்பத்திலேயே குணப்படுத்தாவிட்டால் நாளடைவில் விபத்தை உண்டு பண்ணும்.

சீரகம், வெங்காயம், தரைபசலைக் கீரை இவைகளை ஒரே அளவாக எடுத்து, நீராகாரம் விட்டு அரைத்து, எலுமிச்சம்பழ அளவு எடுத்து காலையிலும், அதேபோல மாலையிலும் தொடர்ந்து 12-நாள் சாப்பிட்டால் பெரும்பாடு குணமாகும்.

அதிக உமிழ்நீர் ஊறுவதைத் தடுக்க

சிலரது வாயில் உமிழ்நீர் அதிக அளவில் ஊறும். பேசும்பொழுது வாயிலிருந்து எச்சில் ஒழுகும். சிலசமயம் தெரிக்கும். தூங்கும் பொழுது உமிழ்நீர் வெளியே கசிந்து தலையணையை நனைத்துவிடும்.

இந்த நிலையிலிருந்து வருபவர்களுக்குச் சீரகத்தைக் கொஞ்சம் எடுத்துச் சுத்தம் பார்த்து படுக்கைக்கு போகுமுன் வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கிவிட்டு கொஞ்சம் வெந்நீர் சாப்பிட்டு விடவேண்டும்.

இந்த விதமாகப் பத்து தினங்கள் வரை செய்து வந்தால் உமிழ்நீர் ஊறுவது சமப்படும்.

இருமல் குணமாக

turmeric in tamil மஞ்சள் மருத்துவ பயன்கள்

பொதுவாக எந்த வகையான இருமலையும் சீரகம் குணப்படுத்திவிடும். 10 கிராம் சீரகத்தைச் சுத்தம் பார்த்து அதை லேசாக வறுத்து எடுத்து அம்மியில் வைத்துத் தூள் பண்ணி அது எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவு கற்கண்டைத் தான் செய்து அத்துடன் கலந்து, ஒரு சீசாவில் வைத்துக் கொண்டு, காலை, மாலை அரைத் தேக்கரண்டியளவு சாப்பிட்டு, வெந்நீர் குடிக்க வேண்டும். ஐந்தே நாளில் இருமல் குணமாகும்.

கிராணிக் கழிச்சல் குணமாக

ஒரு மங்குஸ்த்தான் பழத்தை ஒரு சட்டியில் போட்டு வேக வைத்து, அதை இடித்துச் சாறு பிழிந்து, அந்த சாறு உள்ள அளவில் பாதியளவு சீரகமும், சீரகத்தில் பாதியளவு கொத்துமல்லி யென்னும் தனியாவும் சேர்த்து மைபோல அரைத்து சாற்றில் கலக்கிவிட்டு,

மொத்த மருந்து உள்ள அளவில் அதுபோல ஒரு பங்களவு நாட்டுச் சர்க்கரை என்னும் பழுப்பு சர்க்கரையையும் கூட்டி ஒரு பாத்திரத்தில் விட்டு அடுப்பில் வைத்து காய்ச்சினால் அது பாகாகி லேகியம் போல வரும்.

இச்சமயம் உள்ள அளவில் கால் பங்கு சுத்தமான தேனை விட்டு நன்றாகக் கிளறி ஒரு வாயகன்ற கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

தினசரி காலை, மாலை தேக்கரண்டியளவு உள்ளுக்குக் கொடுத்து வரவேண்டும். இந்த விதமாக வயிற்றுப் போக்கு நிற்கும்வரை கொடுக்க வேண்டும். பத்திய பதார்த்தமாகவே சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதனால் தீராத வயிற்றுப் போக்குக் கூட குணமாகிவிடும்.

சீதபேதி குணமாக

தேக்கரண்டியளவு சீரகத்தை அம்மியில் வைத்து இரண்டு கிராம் எடை சுக்கு, ஒரு கைப்பிடியளவு கறிவேப்பிலை இவைகளை ஒன்று சேர்த்து மை போல அரைத்து எடுத்து, ஒரு வாழைப் பூவை ஆய்ந்து அதை உரலில் போட்டு இடித்துச் சாறு எடுத்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றில் அரைத்து வைத்திருக்கும் மருந்தைப் போட்டுக் கலக்கி தேக்கரண்டியளவு தேனையும் கூட்டிக் காலையில் மட்டும் மூன்று நாள் தொடர்ந்து கொடுத்தால் சீதபேதி குணமாகும்.

பித்த வாய்வை போக்க சீரகச் சூரணம்

சீரகம் தண்ணீர் பயன்கள்

ஒரு வாயகன்ற கண்ணாடிப் பாத்திரத்தை எடுத்து அதில் 30 கிராம் சுத்தம் செய்த சீரகத்தை போட்டு அது முழுகும் அளவிற்கு எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு மூடி ஊறவிட வேண்டும்.

மறுநாள் சீரகத்தை எடுத்து ஒரு தட்டில் போட்டு தூசு படாமல் வெய்யிலில் காயவிட வேண்டும். நன்றாகக் காய்ந்தவுடன் அதை மறுபடி மீதமுள்ள எலுமிச்சம் பழச்சாற்றில் போட்டு மறுபடி உறவிட வேண்டும் சீரகம் தண்ணீர் பயன்கள் jeeragam water benefits in tamil .

இந்த விதமாகச் சாறு தீர்ந்து எல்லாம் வற்றலாக வந்தபின், பாத்திரத்தில் போட்டு, கரிசலாங் கண்ணிக் கீரையைக் கொண்டு வந்து சுத்தம் பார்த்து உரலில் போட்டு இடித்து சாறு எடுத்து அந்தச் சாற்றைச் சீரகம் முழுகும் அளவிற்கு விட்டு மறுபடி ஊறவிட வேண்டும்.

மறுநாள் சீரகத்தை எடுத்துத் தட்டில் போட்டுக் காயவிட வேண்டும். மறுபடி சாற்றில் போட்டு எடுத்துக் காயவைத்து, நன்றாகக் காய்ந்தபின் இடித்துச் சலித்து ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு தினசரி காலை, மாலை அரைத் தேக்கரண்டியளவுத் தூளை வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால் பித்த வாய்வு அடியோடு விடுபடும்.

பாவன சீரகம்

இதைத் தயார் செய்து வைத்துக் கொண்டு வயிற்றுவலி, பித்தம், பித்த கிறுகிறுப்பு, வயிற்றுப் பொருமல், அஜீரணம், புளியேப்பம், பசிமந்தம், அரோசிகம் ஏற்படும் பொழுது காலை, குணம் கிடைக்கும்.

மாலை அரைத் தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், பூரண 30 கிராம் சீரகத்தை எடுத்துச் சுத்தம் பார்த்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு, ஆறு எலுமிச்சம் பழத்தின் சாற்றை எடுத்து, அதில்விட்டுக் கிளறி 10 கிராம் இந்துப்பையும் தூள் பண்ணிப் போட்டு, நன்றாக ஊறவிட வேண்டும். ஒருநாள் ஊறியபின் எடுத்து, ஒரு தட்டில் போட்டு தூசு படியாமல் வெய்யிலில் வைத்துக் காயவிட வேண்டும்.

மறுபடி அந்த சீரகத்தை அதே பாத்திரத்தில் போட்டு, 20 கிராம் இஞ்சியைத் தட்டிச் சாறு எடுத்து ஒரு கண்ணாடி டம்ளரில் விட்டு ஒருமணி நேரம் வைத்திருந்தால், அது தெளிந்து நிற்கும்.

மேலே இஞ்சிச் சாறும், அடியில் சுண்ணாம்பும் பிரிந்து நிற்பது தெரியும். இந்த சமயம் இஞ்சிச் சாற்றை மட்டும் இறுத்து சீரகம் இருக்கும் பாத்திரத்தில் விடவேண்டும்.

பிறகு பாத்திரத்தை மூடி இரவு முழுவதும் ஊறவிட்டு மறுநாள் பழையபடி எடுத்து முன்போலக் காயவிட வேண்டும். சாறு மீதம் இருக்குமானால் காய்ந்த சீரகத்தை மறுபடி போட்டு ஊறவிட வேண்டும் சீரகம் தண்ணீர் பயன்கள் jeeragam water benefits in tamil .

கடைசி வரை சீரகத்தை ஊற வைப்பதும், காயவைப்பதுமாகச் செய்து சீரகத்தை நன்றாகக் காயவைத்து இடித்துத் தூள் செய்து சலித்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். தேவையான போது எடுத்து உபயோகப்படுத்த வேண்டும்.

வெட்டை நோய் குணமாக

கிராம் ஐந்து சீரகத்தையும், 10 கிராம் வெங்காயத்தையும் ஒன்றாகச் சேர்த்து அம்மியில் வைத்து மை போல அரைத்து, ஆழாக்குப் பசும்பாலில் கலந்து காலையில் மட்டும் குடித்து வரவேண்டும். இந்த விதமாக ஏழுநாள் மட்டும் சாப்பிட்டால் போதும் வெட்டை நோய் குணமாகும் சீரகம் தண்ணீர் பயன்கள் jeeragam water benefits in tamil .

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button