செடி மரம்மூலிகை

jathimalli flower benefits | ஜாதிமல்லி இலை பயன்கள்

ஜாதிமல்லி இலை பயன்கள் jathimalli flower benefits இலைகளை நல்லெண்ணெயில் வதக்கி வீக்கங்களின் மீது ஒத்தடம் கொடுத்தால் விரைவில் வீக்கம் குறைந்து வலியும் குறையும். தொண்டையில் ஏற்படும் நோய்களுக்கும், வலிகளுக்கும் நெஞ்சில் ஒத்தடம் கொடுப்பது ஏற்றது.

ஜாதிமல்லி இலை பயன்கள் – jathimalli flower benefits

தலைவலிக்கு

தலைவலி குணமாக

தலைவலிக்கு இலையுடன் சிறிது சுக்கு சேர்த்து சிறிதளவு பசுவின் பாலினை ஊற்றி அரைத்து அதனை நெற்றி, கன்னம் பகுதிதகளில் தடவி நெருப்பனலில் முகத்தினைக் காண்பிக்க ஒற்றைத் தலைவலி உடனடியாகக் குணமாகும்.

காது வலிக்கு

காது வலி

காது வலிக்கு ஜாதிமல்லி இலையின் சாறு எடுத்து நல்லெண்ணெயை சம அளவு கலந்து காய்ச்சி பதமாக இறக்கி வடிகட்டி, ஆறவைத்து இரண்டு சொட்டு காதில் விடவும்.

உடன் காதுவலி குணமாகும். காதில் சீழ் வருதல் நிற்கும். உடலில் ரணமாகி சீழ்வடியும் புண்களின் மேல் இந்த மருந்தைத் தடவி வர புண் ஆறி சீழ்வருதல் நின்று போகும்.

வாய் துர்நாற்றம் நீங்க

வாய் துற்நாற்றம் ஒழிய ஜாதி மல்லி இலை, விளாமர இலை, கிச்சிலிப் பழத் தோல் அல்லது நாரத்தை தோல் (உலர்ந்தது) எடுத்து அனைத்தையும் ஒரு சேர வாயிலிட்டு நன்கு மென்று குதப்பி சில நிமிடங்களுக்குப் பிறகு உமிழ்ந்துவிடவும்.

சுடு நீரினை வாயில் ஊற்றிக் கொப்பளிக்கவும். இவ்வாறு தினசரி ஒரு வேளை விடாது பதினைந்து நாட்கள் செய்துவரின் நெடுநாள்பட்ட வாய்துற்நாற்றம் அறவே ஒழியும். மேலும் வாய், உதடு, நாக்குப் பகுதிகளில் வெடிப்போ, ரணமோ இருந்தால் குணமாகும்.

ஆண்மை சக்திக்கு

ஆண்மை சக்திக்கு ஜாதி மல்லியின் இலைகளை நன்கு அரைத்து விழுதை தளர்ந்து போன ஆண் குறியின் மேலும், தொடையிடுக்கிலும் வைத்துக் கட்டிவர முதுமை உணர்ச்சிகள் மறைந்து இளமை உணர்வு திரும்பும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button