பாட்டி வைத்தியம்

முடி அடர்த்தியாக நீளமாக வளர

முடி அடர்த்தியாக நீளமாக வளர | hair growth tips in tamil

hair growth tips in tamil முடி அடர்த்தியாக நீளமாக வளர பொதுவாக எல்லா பெண்களும் நீண்ட அழகான கூந்தல் வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆகவே உங்கள் கூந்தலை கவர்ச்சிகரமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் அதை சிறந்த முறையில் பராமரிப்பது அவசியமாகும்.

பொதுவாக முடி உதிர்வதற்கு முக்கிய காரணங்கள் உடலின் உஷ்ணம்,  டென்ஷன்,  கண்ட கண்ட ஷாம்புகளை பயன்படுத்துவது தான் மேலும் நாம் உபயோகப்படுத்தும் சீப்பு மருந்து மாத்திரைகள் இவற்றின் பாதிப்பலும் முடி வளர்ச்சி சேதம்  அடைகிறது.

பெண்களின் கூந்தல் கோரமுடி , சுருட்டை முடி என வகைப்படும் .அதற்கேற்றவாறு பராமரித்துக் கொள்ள வேண்டும் ,மேலும் பெண்களின் கூந்தல் தன்மை நான்கு விதமாக பிரிக்கப்பட்டுள்ளது.

  1. சாதாரண கூந்தல்
  2. எண்ணெய் பசையுள்ள கூந்தல்
  3. வறண்ட கூந்தல்
  4. பலவீனமான கூந்தல்

சாதாரண கூந்தல்

இவ்வகை கூந்தலானது வறண்ட தன்மை இல்லாமலும் எண்ணெய்த் தன்மை இல்லாமலும் மிதமான தன்மையுடன் தூய்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும் .இத்தகைய கூந்தல் உடையவர்கள் அதிக கவலைப்படத் தேவையில்லை ,சாதாரண கவனிப்பே போதுமானது, எனினும் இவ்வகை கூந்தலை அக்கறையின்றி பராமரிக்காமல் விட்டு விடக்கூடாது ,

எண்ணெய் பசையுள்ள கூந்தல்

இவ்வகை கூந்தலானது மிகுந்த என்னைத் தன்மையாய் காணப்படும் ,இதனால் கூந்தலின் அதிக அழுக்கும் ,தூசும் படிந்து அதிகரிக்கும் தூசு படிந்து காணப்படும்.

ஆகையால் இத்தகைய கூந்தலை உடையவர்கள் தினமும் குளித்து  கூந்தலில் அழுக்கு படியாமல் கவனித்துக்கொள்ள வேண்டும்.

இத்தகைய கூந்தல் உடையவர்கள் எலுமிச்சை சாறு தடவி மருதாணி [அ] சீயக்காய் கலந்த ஷாம்புவை பயன்படுத்தி கூந்தலை சுத்தம் செய்வது நல்லது. மேலும் மாதம் ஒருமுறை மருதாணி பேக் பயன்படுத்தினால் சிறந்த பலனைப் பெறலாம்.

எண்ணெய் பசை கூந்தலுடையவர்கள் செய்ய வேண்டியவை

எண்ணெய் தன்மையுள்ள கூந்தலை உடையவர்கள் தினமும் எண்ணெய் போட வேண்டிய அவசியமில்லை .அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும், வறுத்த பொரித்த உணவுகளை அதிகமாக சாப்பிடக்கூடாது .அதிக நேரம் கூந்தலை சீவவும் கூடாது.

சிறிது எலுமிச்சைச் சாறு,  வினிகர் இரண்டையும் ஒரு கப் நீரில் கலந்து கூந்தலை கடைசியாக அலசும்போது உபயோகிக்க வேண்டும்.

சீயக்காய் , புங்ககாய் , திரிபலா மூன்றையும் காய்ச்சி வடிகட்டியோ அல்லது பவுடர் செய்து குழைத்தோ ஷாம்பூ  போல் உபயோகிக்க வேண்டும்.

இரண்டு எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து ஒரு கப் தேயிலை நீரை சேர்த்து இவற்றுடன் சிறிதளவு நீரை கலந்து கூந்தலை கடைசியாக அலசும் போது  உபயோகப்படுத்தினால் கூந்தலுக்கு மெருகு கிடைக்கும் .

மருதாணி 1 கப் , தயிர்2 கப் ,முட்டை 1 ,எலுமிச்சம் பழம் 1, இவற்றை நன்றாக கலந்து தலை முழுவதும் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஓமம் மருத்துவ பயன்கள்

வறண்ட கூந்தல்

முடி அடர்த்தியாக நீளமாக வளர | hair growth tips in tamil

இவ்வகைக் கூந்தலானது காய்ந்து வறட்சியால் முனைகள் இரண்டிரண்டாக உடைத்து காணப்படும்.இக்கூந்தலில் நிறமும் செம்பட்டை தன்மை உடையதாய் இருக்கும். இத்தகைய கூந்தலை உடையவர்கள் சற்று அதிக கவனத்துடன் தங்கள் கூந்தலை பராமரிக்க வேண்டும்.

வறண்ட கூந்தல் உடையவர்கள் அடிக்கடி எண்ணெய் மசாஜ் செய்து பராமரித்து வரவேண்டும்,எண்ணெயைச் சூடாக்கித் தலை ஓட்டில் படும்படி விரல் நுனிகளால் அழுத்த தடவி 10 முதல் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும்.

இதனால் ரத்த ஓட்டம் அதிகமாகி எண்ணெய் சுரப்பிகளின் செயலும் துரிதப்படம். மேலும் உடல் உஷ்ணம் குறைக்கப்பட்டு குளிர்ச்சி தன்மை அடையும் ,வறண்ட கூந்தலுடையவர்கள் முட்டை ஷாம்பு [அ] நெல்லிக்காய் ஷாம்பு  பயன்படுத்தினால் நல்ல பலனை பெறலாம் .

வறன்ட கூந்தலுடையவர்கள் செய்ய வேண்டியவை

வறண்ட கூந்தலுக்கு மசாஜ் செய்ய கற்றாழை எண்ணெய் நல்லெண்ணெய் செம்பருத்தி எண்ணெய் பயன்படுத்தினால் முடிக்கு வறண்ட தன்மை நீங்க எண்ணெய் சத்து கிடைகும். மசாஜ் செய்வதற்கு முன் துவாழையினால் ஆவி ஒத்தடம் கொடுப்பது நல்லது.

தலைக்கு குளித்த பின் கடைசியில் சிறிதளவு கருப்பு வினிகர் , எலுமிச்சை சாறு இவற்றை நீரில் கலந்து அலசினால் நல்ல பலன் கிடைக்கும்,

பாலேடுள்ள பாலில் ஒரு முட்டையை நன்கு நுரை வரும் வரை அடித்து தலையில் தரவி 20 நிமிடம் ஊற வைத்து பின் அலசவும்,வாரத்திற்கு இரண்டு முறை இவ்வாறு செய்தல் நன்கு பலன் காணலாம்.

தலையில் நல்லெண்ணெய் தேய்த்துச் ஊற விட்டு அரை மணி நேரம் கழித்து சாதம் வடித்த கஞ்சியில்சிறிது சிகக்காய்த் தூள் போட்டு கலக்கி அதைத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வர கூந்தல் உதிர்வது நின்று நன்கு வளரும் .

பல விதமான கூந்தல்

இவ்வகை கூந்தலானது எளிதில் உடையும் தன்மை உடையதாய் ஜீவனற்ற காணப்படும். ,வெயிலில் அதிகம் அலைவது நேரம் தவறி உண்பது உப்பு நீரை தலைக்கு குளிப்பதற்கு உபயோகிப்பது போன்ற பல காரணங்களால் கூந்தல் பலவீனமாகி விடுகிறது.

இத்தகைய கூந்தலை உடையவர்கள் தலைக்கு குளித்தவுடன் ஈரத்துடன் தலை வாரக்கூடாது கூந்தலின் வேர்ப் பகுதி பலவீனமாக இருப்பதால் நிறைய முடி கொட்டக் கூடும் . மேலும் ஊந்தலை டவலால் அடித்து காய வைக்க கூடாது.

அதனால் கூந்தலுக்கு சேதம் உண்டாகி வெடிப்பு ஏற்படும் எனவே பலவீனமான கூந்தல் உடையவர்கள் மாதம் இரண்டு அல்லது மூன்று முறை ஆயில் மசாஜ் செய்து வந்தால் சிறந்த பலன் பெறலாம். மேலும் தினமும் ஒரு டம்ளர் கறிவேப்பிலை சாறு எடுத்து குடித்தால் மிகவும் நல்லது[கறிவேப்பிலையை காய வைத்து பொடி செய்து உணவில் கலந்து சாப்பிடலாம்] .

பலவீனமான கூந்தலுடையவர்கள் செய்ய வேண்டியவை

வைட்டமின் ஈ மாத்திரைகளையும் , வைட்டமின் ஈ சத்துள்ள உணவுப் பொருட்களையும் சாப்பிட்டு வர வேண்டும்.

நெல்லிக்காயை பாலில் அரைத்துப் பிழிந்து சாறெடுத்து கொதிக்கவைத்து தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வந்தால் முடி நன்றாக வளரும்.

தினமும் மதிய உணவில் கீரை கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் நீண்ட கூந்தல் வளரும்.

முளைக்கட்டிய கருப்பு கடலையை[ கொண்டைகடலை]தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர தலைமுடி நன்கு வளரும் ம.

மருதாணியையும் கருவேப்பிலையையும் அரைத்து சாறெடுத்து சம அளவு தேங்காய் எண்ணையில் கலந்து காய்ச்சி தடவி வர முடி கருமையாகவும் பளபளப்புடனும் நீண்டும் வளரும் .

நாட்டு வெங்காயத்தை இடித்து சாறெடுத்து அதனுடன் சோற்றுக்கற்றாழை இரண்டாகப் பிளந்து அதில் உள்ள பிசினை எடுத்து இவற்றை இஞ்சி சாறு தேங்காய் எண்ணெய் பொலுகிரீக் விதை ஒரு கைப்பிடி அளவு ஆகியவற்றுடன் சேர்த்து பேக் போட்டால் நல்ல பலன் கிடைக்கும். பளபளப்பாகவும் இருக்கும்.

பேன் தொல்லை நீங்க

பேன் தொல்லை நீங்க

துளசி இலையை நன்கு அரைத்து சிறிது நீர்விட்டு வடிகட்டி தலைமுடியில் தேய்த்து ஊறிய பின் சீயக்காய் தூள் போட்டு குளித்தால் பேன் வராது.

மருதாணி பூவை இரவில் தலையில் வைத்துக் கொண்டால் பேன்களின் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.

பேன் தொல்லை இருந்தால் வசம்பை அரைத்து விழுதைக்கொண்டு தேய்த்து அரை மணி நேரம் கழித்து தலையை அலசினால் பேன்கள் மறையும்,

சிறிதளவு வினிகரை இரவில் தலையில் தடவி துணியால் சுற்றிக்கட்டி காலையில்  தலைக்குக் குளித்தால் பேன் தொல்லை நீங்கும்.

வேப்பம் பூவை லேசாக வாட்டி தலையில் கட்டிக் கொண்டால் பேன் தொல்லைகள் நீங்கும்,

சீதாப் பழக்கொட்டை இரண்டு நாள் நன்கு காய வைத்து பொடி செய்து அதனை தேங்காய் எண்ணெயில் கலந்து இரவில் தலைக்குத் தடவி காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் பேன் தொல்லை ஒழியும் .

வெள்ளை மிளகை பாலில் ஊற வைத்து அரைத்தும் தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசினால் பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

காட்டு சீரகத்தை பாலில் ஊறவைத்து அரைத்து அல்லது தனியாக அரைத்து தேங்காய் எண்ணெயில் குழைத்து இரவில் தலையில் பரவலாகத் தேய்த்து விட வேண்டும் .அவ்வாறு செய்து வந்தால் பேன் தொல்லை ஒழியும்,

பொடுகு தொல்லை நீங்க வழிகள்

பொடுகு தொல்லை நீங்க வழிகள்

பொடுகு நீங்க தேங்காய்ப்பால் அரை கப் எலுமிச்சை சாறு நான்கு தேக்கரண்டி மற்றும்ஊற வைத்து அரைத்த வெந்தயம் மூன்றையும் கலந்து தேய்த்து ஊற வைத்து தலை குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். மேலும் கூந்தலின் நுனி வெடிக்காமல் இருக்கும்.

கரிசலாங்கண்ணிக்கீரை ,முட்டையின் வெள்ளை கரு , எலுமிச்சம்பழச் சாறு, தயிர் ,துளசி ,வேப்பிலை,  தேயிலை, நீர் இவற்றை பேக் போட்டால் பொடுகுத் தொல்லை நீங்கி  கூந்தல் நன்றாக வளரும்.

ஒரு கப் ஆப்பிள் சாற்றுட அரை கப் தண்ணீர் கலந்து தலை முழுவதும் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும்,

மிளகு எண்ணெய் ,  தயிர், செம்பருத்தி பூ இவற்றை கொண்டு மசாஜ் செய்தால் பொடுகுத் தொல்லை நீங்கும் hair growth tips in tamil .

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button