வீட்டு மருத்துவம்

இயற்கை தந்த வடபிரசாதம் பசுமை பானம் (Green Tea)

green tea benefits in tamil “நீரீன்று அமையாது உலகு ” என்று சொன்னவர் திருவள்ளுவர் இயற்கையை

தாயாகவும் மரங்களை தன்னோட சகோதரனாகவும் நீரினை சகோதரியாகவும் கவிஞர்கள் வருணிக்கின்றனர்.இவ்வாறு அக்காலம் முதலிலே இயற்கையினை பற்றியும் அதனோட பயன்களை பற்றியும் நம் முன்னோர்கள் நமக்கு தந்துள்ளார்கள்.அதனை பற்றி நாம்  இங்கு பார்க்கலாம் .  

இந்த இயற்கை தாய் நமக்கு பல்வேறு விதமான நன்மைகளை நமக்கு தருகிறது. இன்றளவும் தந்துகொண்டு தான் இருக்கிறது..ஆனால் மனிதர்கள் அதனின்  பயன் தெரியாமலே அதனை  அழித்துக்கொண்டுஇருக்கிறோம்.

அந்த  இயற்கை தந்த பானம் தான் கிரீன் டீ அதாவது தமிழில் பசும் தேநீர் என்று  சொல்வார்கள்.இந்த  பசும் தேநீர் கமீலியா சைனஸீஸ்  இலைகளிலிலிருந்து  தயாரிக்கப்படும் தேநீர் ஆகும்.

இது முதலில் சீனாவில் தோன்றியது, பின்பு ஜப்பானிலிருந்து மத்திய கிழக்கு வரையிலான ஆசிய கலாச்சாரங்களுடன் தொடர்புடையதாயிற்று. இப்படித்தான் நம்மிடையே கிரீன் டீஅறிமுகமானது. இதை தொடர்ந்து அந்த கிரீன் டீ எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம் ..

கிரீன் டீ  

இன்றயை உலகில் எல்லாருமே ஆர்கானிக் பயனை பற்றி நிறைய விழிப்புணர்வு இருக்கு.ஆனால் ஒரிஜினல் ஆர்கானிக் எது போலி ஆர்கானிக் எது என்று தெரியாமலே ஆர்கானிக் பெயர் இருந்தாலே அதை வாங்கி பயன்படுத்துறாங்க.

இதில் கிரீன் டீ என்று பெயர் வைத்து கொண்டு அதில் கூட செயற்கை பொருட்களை கலப்பது இன்று சாதாரணமான விஷயமாகிவிட்டது.

உண்மையிலே கிரீன் டீ  என்பது நாம் வெந்நீரில் அந்த இலைகளை போட்டதும் ஓரிரு நிமிடங்களிலே நிறம் மாறாமல் இருப்பது தான் ஒரிஜினல் பசுமை பானம் சொல்வாங்க.

சிலர் அந்த டீயை தவிர்ப்பதற்கு காரணம் அதை ஒழுங்கான முறையில் தயாரிக்காமல் இருப்பதே காரணம்.

எல்லாருமே தண்ணீரை அடுப்பிலே சூடு செய்து கொண்டு இருக்கும்போதே அந்த கிரீன் டீ இலைகளை போடுவதே அது கசப்பாக மாறுவதற்கு காரணமாக இருக்கிறது.

அவ்வாறு செய்வது கூடாது நாம் முதலில் தண்ணீரை சூடு செய்து எடுத்துக்கொண்ட பிறகே ஒரு பின்ச் அளவு அந்த இலைகளை போட்டு ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் மூடி வைக்கவும் பின்பு அதை பருக வேண்டும்.

அதனோடு தேன் சேர்த்து சாப்பிடுவது நல்லது. அடுத்து நாம் அதோட நன்மைகளை பற்றி பார்க்கலாம்.

க்ரீன் டீ அருந்துவதால் ஏற்படும்  நன்மைகள் - Green Tea Benefits in tamil 

கிரீன் டீ அருந்துவதால் ஏற்படும்  நன்மைகள் – Green Tea Benefits in tamil 

கிரீன் டீ –   பெயரிலே பசுமை வந்துள்ளது.பொதுவாக நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் பசுமையான காய்கறிகளை சேர்ப்பது நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் சொல்வாங்க. அது மாதிரி தான் இந்த கிரீன் டீ

இதை நாம்  குடிப்பதனால் நமக்கு அதிகமான நன்மைகள்கிடைக்கிறது.அதோட பயன்கள் அதிகம் தான் அவற்றுள் சிலவற்றை  மட்டும் நாம் பார்க்கலாம்    

  •  உடல் எடையை குறைக்க உதவுகிறது 
  •  சர்க்கரையோட அளவை கட்டுப்படுத்துகிறது 
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது 

 உடல் எடையை குறைக்கும் 

கிரீன் டீ குடிப்பதனால் , நம்ம உடல் அது மெட்டபாலிசத்தை அதிகரித்து நம்ம உடல் உள்ள கெட்ட கொழுப்புனு சொல்லப்படுகிற LDI -ஐ  குறைக்கிறது. இதனால நம்ம உடம்பின் எடை மற்றும் தொப்பையை குறைக்கலாம்.

இந்த கிரீன் டீ -ஐ காலை மற்றும் மாலை என்று தொடர்ந்து 10 நாட்கள் சாப்பிடுவதனால் உடல் எடை குறைவதை நன்கு உணரலாம்.மேலும் இதை குடிப்பதனால் முகம் சுருக்கம் நீங்கி பொலிவு கொடுக்கும்.

இதை 12 வயதுக்கு மேல் 15 வயதுக்குள் உள்ளவர்கள் ஒரு வேளை குடிப்பது நல்லது . இதை வெறும் வயிற்றில் மட்டும் குடிக்கக்கூடாது.

தர்பூசணியின் நன்மைகள்

சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது

இன்றைய உலகில் எல்லாருமே சர்க்கரை நோயால்பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.ஆனால் அவங்களால் காபி or டீ குடிக்காமல் இருக்கமுடியாது . 

அவர்களுக்கு இயற்கை தந்த பரிசுனு கூட சொல்லலாம், ஆமாங்க அவங்க இதை குடிப்பதனால் உடம்புக்கும் எந்த பாதிப்பும் கிடையாது சர்க்கரை நோயும் கட்டுக்குள் இருக்கும் .

நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு 

நாம் இந்த கிரீன் டீ  குடிப்பதனால் அது நம்ம உடல் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரித்து நமது உடலுக்கு ஒரு புத்துணர்வை தருகிறது.எப்பொழுதுமே உடல் நலம் பெற மனம் நலம் மிகவும் அவசியமானது.

கிரீன் டீ தீமைகள் 

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு  “  கிரீன் டீ நமக்கு அதிக ஆரோக்கியத்தை கொடுத்தாலும் அதனை அளவோடும் சரியான பொழுதிலும் பயன்படுத்தவேண்டும்.

அதை எப்பொழுது குடிக்கணும் எப்பொழுது குடிக்கக்கூடாது என்று சில விதிமுறைகளை நாம் தெரிந்துவைத்துக்கொள்வது மிகவும் நல்லது .

வெறும் வயிற்றில் அதை சாப்பிடுவதினால் அது அமிலங்களை சுரக்கவைத்து தேவையில்லாத வயிற்று வலியையும் , குமட்டல் போன்ற பக்க விளைவை ஏற்படுத்தக்கூடியது .அதை அதிகமாகவோ வயதில் சிறியவர்களும் அருந்துவதை தவிர்ப்பது நல்லது.

கிரீன் டீ எங்கு கிடைக்கும் 

தெளிந்து தெரிதல்என்பதற்கு  ஏற்றவாறு  ஒரிஜினல் கிரீன் டீ எது என்று தெரிந்து கொண்டே அதை வாங்குவது நல்லது . ஒரிஜினல் என்று எப்படி கண்டுபிடிப்பது என்பது குழப்பமா ?….

கவலைவேண்டாம் ஒரிஜினல் கிரீன் டீ என்பது நீங்கள் அதை தயார் செய்யும் போதே தெரிந்துவிடும். ஏனென்றால் நீங்க தயாரிக்கும்போது அதன் நிறம் மாறாது  மற்றும் அதன் இலைகள் தண்ணீரின் நிலைக்கேற்ப விரியும் .  

ஊட்டி எஸ்டேட்டில் தரமான முறையில் viha பெயரில்  கிடைக்கும் …அதனோட முழு விவரம் தெரிய  www.viha.online பார்க்கவும் .

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button