வீட்டு மருத்துவம்

பூண்டு மருத்துவ குணங்கள்

பூண்டு நன்மைகள் garlic benefits in tamil பூண்டு மருத்துவ குணங்கள் சமையல் வகையில் சாம்பார், குழம்பு, துவையல், ஊறுகாய் இவைகளுடன் வெள்ளைப் பூண்டை சேர்ப்பார்கள். மிளகு ரசத்திற்கு இதை அவசியம் சேர்ப்பார்கள். வெள்ளைப் பூண்டில் ஒருவிதமான வாசனையும், ருசியும், பிசுபிசுப்பும் இருக்கும். வெள்ளைப் பூண்டு சமையலுக்கு மட்டுமல்லாமல் வைத்திய முறைக்கும் பயன்படுகிறது.

வெள்ளைப் பூண்டு பலவியாதிகளைக் குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது. வெள்ளைப் பூண்டை அடிக்கடிச் சாப்பிட்டு வந்தால் உடலில் வாய்வு சேராது. நன்றாகக் வேறு எந்த வகையான வியாதியும் வராது.

பூண்டு நன்மைகள் (garlic benefits in tamil)

பாரிச வாய்வு குணமாக

ஐம்பது கிராம் எடை வெள்ளைப் பூண்டைத் தோல் உரித்துவிட்டு ஒரு சுத்தமான சட்டியில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும்.

அது வதங்கி நன்றாகச் சிவந்து வரும் சமயம் அத்துடன் 5 கிராம் பெருங்காயத்தையும் போட்டு, ஒரு அவுன்ஸ் அளவு சிற்றாமணக்கெண்ணெய் விட்டு கிளறிவிட்டு சட்டியைக் கீழே இறக்கி வைத்து, அதில் 30 கிராம் பனை வெல்லத்தைப் போட்டு கீரைக் கடையும் மத்தைக் கொண்டு கீரை கடைவது போலக் கடைந்து விட்டு அந்த மருந்தை ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு மூடி வைத்துக் கொள்ள வேண்டும்.

காலை, மாலை கழற்சிக்காயளவு எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் வெந்நீர் குடித்து விடவேண்டும். தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் பாரிச வாயு குணமாகும்.

வெட்டு காயம் ஆற

வெட்டுக் காயம்

அடிபட்டக் காயம், வெட்டுக் காயம் ஏற்பட்டு விட்டால், அதைச் சுத்தம் செய்துவிட்டு வெள்ளைப் பூண்டையும், சுண்ணாம்பையும் சம அளவு எடுத்து மைபோல அரைத்துக் காயத்தின் மேல் வைத்துக் கட்டிவிட வேண்டும்.

பிறகு அவிழ்க்க வேண்டிய தேவையில்லை. காயம் ஆறிய பின் தான் மருந்து கீழே விழும். ஆனால் தண்ணீர் மட்டும் அதில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் பட்டால் சீழ் பிடித்துக் கஷ்டத்தைக் கொடுக்கும்.

காது இரைச்சல் குணமாக

பூண்டு நன்மைகள்

வெள்ளைப் பூண்டு பற்களில் ஒன்றை எடுத்து, அதை நைத்து ஒரு மெல்லிய துணியில் வைத்து அதைச் சிறிய முட்டை போலச் செய்து காதில் வைத்து அழுத்தி விடவேண்டும். இந்த விதமாகக் குணமாகும் வரை செய்து வரவேண்டும்.

காதில் சீழ்வடிவதை நிறுத்த

காதில் சீல்வடிவதை குணப்படுத்த பூண்டு நன்மைகள்

பத்து கிராம் வெள்ளைப் பூண்டு பற்கள் 5 கிராம் மஞ்சள் 5 கிராம் வசம்பு இவைகளை ஒரு சட்டியில் தட்டிப் போட்டு விட்டு, அடுப்பில் வைத்து நன்றாகக் காய் வேண்டும். பூண்டு நன்மைகள் garlic benefits in tamil பூண்டு மருத்துவ குணங்கள்.

மருந்து சிலந்து வரும் சமயம் இறக்கி வைத்து வடிகட்டி ஒரு கோவில் விட்டு இந்த எண்ணெயில் மூன்று தனி வீதம் விட்டு சடைத்து விட வேண்டும். இந்த விதமாகக் குணமாகும் வரைச் செய்ய வேண்டும்.

விரை வாய்வு குணமாக

வாயு தொல்லை நீங்க

தோல் உரித்த வெள்ளைப் பூண்டு 20 கிராம் எடை, மிளகு 10 கிராம் எடை இவைகளையும், 10 கிராம் கழற்சி வேரையும் சோத்து அரைத்து ஒரு சட்டியில் போட்டு அதில் ஒரு அவுன்ஸ் அளவு சிற்றாமணக்கெண்ணெய் விட்டு நன்றாகக் காய்ச்ச வேண்டும்.

மருந்து சிவந்தவுடன் இறக்கி வைத்து, அதை மூன்று பாகங்களாகச் செய்து மூன்று நாட்களுக்கு காலையில் மட்டும் ஒரு பாகம் வீதம் சாப்பிட்டு வந்தால் விரை வாய்வுக் குணமாகும்.

பற்றுப் படை மறைய

வெள்ளைப் பூண்டைத் தேவையான அளவு எடுத்து அம்மியில் வைத்து மைபோல அரைத்து பற்றுப் படையுள்ள இடத்தில் களமாகப் பற்றுப் போட்டு வந்தால் படை மறைந்து விடும் garlic benefits in tamil.

வாய்வு பிடிப்புக்கு

அரை ஆழாக்குத் தேங்காயெண்ணெயை ஒரு சட்டியில் பத்து கிராம் உரித்த வெள்ளைப்பூண்டை அம்மியில் வைத்து நைத்து அதில் போட்டு பூண்டு நன்றாக சிவந்துவரும் இறக்கி வைத்துவிட்டு, ஆறியபிறகு வடிகட்டி ஒரு சீசாவில் வைத்துக்கொண்டு, வாய்வுப் பிடிப்பு உள்ள இடத்தில் விட்டு நன்றாகத் தேய்க்க வேண்டும். இந்தவிதமாக அடிக்கடிச் செய்து வந்தால் வாய்வுப் பிடிப்புக் குணமாகும்.

முகப்பரு குணமாக

முகப்பரு குணமாக

ஒரு கிராம் வெள்ளைப்பூண்டு. அதே அளவு மிளகு, ஒரு கைப்பிடியளவு துத்தியிலை இவைகளை எல்லாம் மைபோல அரைத்து ஒரு சட்டியில் போட்டு, அதில் ஒரு அவுன்ஸ் அளவு சிற்றாமணக்கெண்ணெய் விட்டு, நன்றாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு அடிக்கடி பருவின் மேல் தடவி வந்தால் முகப்பரு குணமாகும்.

கக்குவான் இருமலுக்கு

turmeric in tamil மஞ்சள் மருத்துவ பயன்கள்
பூண்டு நன்மைகள் garlic benefits in tamil பூண்டு மருத்துவ குணங்கள்.

கக்குவான் இருமலின் போது வெள்ளைப்பூண்டை உரித்து அதை நெய்யில் வதக்கி வைத்துக் கொண்டு, சாதத்துடன் சுமார் இரண்டு கிராம் எடை வீதம் சேர்த்துக் கொடுத்து வந்தால் கக்குவான் இருமல் குணமாகும்.

வாய்வு எடுபட

வெள்ளைப் பூண்டை உரித்து எடுத்து, அதை நெய்விட்டு வறுத்து, புளி, மிளகாய், தேங்காய் சேர்த்து துகையல் அரைத்துத் தினசரி சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள வாய்வு விடுபட்டுவிடும்.

பிரசவித்த ஸ்திரீக்கு

பிரசவித்த ஸ்திரீக்கு சீதளத்தைக் கொடுத்துவிடாமல் பாதுகாக்க இந்த வெள்ளைப் பூண்டு பயன்பட்டு வருகிறது. பிரசவித்த ஸ்திரீயின் ஆகாரத்துடன் நிறைய வெள்ளைப் பூண்டைச் சேர்த்து வந்தால் எந்த விதமான வியாதியும் வராது. வாய்வு சேராது.

குழந்தைக்கும், தாய்க்கும் நல்ல ஜீரணசக்தி உண்டாகும். இரத்தம் சுத்தமடையும். தாய்ப்பால் குழந்தைக்கு தேவையான அளவு சுரக்கும்.

வெள்ளைப் பூண்டு இயற்கை அளித்த வரப்பிரசாதம் வெள்ளைப் பூண்டு. இதனை உணவில் சேர்த்துக் கொள்வதினால் நோய்கள் அண்டாது. இது ஒரு கிருமி நாசினியாகும்.

வெள்ளைப் பூண்டில் வைட்டமின் A, C ஏராளமாக இருக்கின்றன. அத்துடன் முக்கியமான உப்புச் சத்துகளும், கந்தக சத்தும் இருப்பதினால் தீராத நோய்களையும் தீர்க்கும் ஆற்றல் பெற்றவையாக விளங்குகின்றன.

விரை வாய்வு

விரை வாய்வு உண்டானால் கஷ்டத்தைக் கொடுக்கும். இந்தக் கஷ்டத்தைப் போக்கிக் கொள்ள வைத்தியமுறை garlic benefits in tamil.

உரித்தப் பூண்டு 25 கிராம், மிளகு 15 கிராம், களர்ச்சி வேர் 60 கிராம் இம்மூன்றையும் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அதில் விளக்கெண்ணெய் ஊற்றி வேக வைத்து கிளறி மூன்று பாகமாகப் பங்கிட்டுக் கொள்ளவும்.

அதில் ஒரு பங்கை எடுத்து காலை வேளை மட்டும் சாப்பிடவும். இது போன்று மூன்று நாட்கள் மூன்று பாகத்தையும் காலை வேளையில் சாப்பிடால் விரைவில் விரைவாய்வுகுணமாகும்.

பெண்களுக்கு வெள்ளைப்பட்டால்

பூண்டு மருத்துவ குணங்கள் பல வித காரணங்களால் சில பெண்களுக்கு வெள்ளைப் படுவதுண்டு. இதற்கு வைத்தியம் செய்து கொள்ளவில்லை என்றால் பின்னாளில் பெருந் தொல்லைக்கு ஆளாகக் கூடும். இதனை வெள்ளைப் பூண்டுமிக எளிதாகப் போக்கிவிடும்.

தோல் நீக்கிய வெள்ளைப் பூண்டு 100 கிராம் எடுத்து நன்றாக இடித்து சாறு பிழந்து தினசரி காலையில் உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் பூரணமாகக் குணமாகும்.

சீரகம் தண்ணீர் பயன்கள்

கக்கூஸ்படை

தொற்று நோயான கக்கூஸ் படை என்ற நோய் கஷ்டத்தைக்  கொடுக்கும். இது பின்பு புட்டக் கீழ் இடுக்கில் வரும் நாள் ஆக சற்றுக் கனத்துப்படர ஆரம்பிக்கும்.

இதனை சொறியும் போது நீர் கசிவும் எரிச்சலும் உண்டாகும். இதனை அகற்றிக் கொள்ள ஒருவழி.

வெள்ளைப் பூண்டை நன்றாக நசுக்கி ஒரு ஸ்பூன் சாறு எடுத்து அந்தச் சாறுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சம் பழத்தின் சாறு விட்டு கலக்கிக் கொள்ளவும். படை உள்ள இடத்தை நன்றாகச் சுத்தம் செய்துவிட்டு இந்த கலவையைப் பற்றுப் போடவும்.

இரவில் ஆழ்ந்து தூங்க

இரவில் ஆழ்ந்து தூங்க

இரவில் படுத்தால் தூக்கம் வராமல் கஷ்டப்படுகிறவர்கள் தோல் உரித்த மூன்று வெள்ளைப் பூண்டை, பசும்பாலில் போட்டுக் காய்ச்சிக் குடித்தால் இதமாகத் தூக்கம் வரும். இதனைப் பகல் தூக்கத்திற்காக அருந்தக் கூடாது.

நாய்கடித்து விட்டால்

எதிர்பாராமல் நாய் கடித்துவிட்டால் உடனடியாக கடித்த இடத்தைக் கழுவி காயத்தின் மீது பூண்டைத்தடவி நன்றாகத் தேய்க்கவும்.

அதன் பின்னர் வெள்ளைப் பூண்டை அரைத்து காயத்தின் மேல் பற்று போல் வைத்துச் சுத்தமான துணியினால் கட்டவும் உள்ளுக்கு பூண்டு கஷாயம்வைத்துக்கொடுக்கவும்.

இது உடனடி நிவாரணம் ஆகும். பின்னர் பல வருடங்கள் கழித்து தொல்லைக் கொடுக்கலாம். ஆதலின் மருத்துவரிடம் சென்று ஆலோசனைப் பெறவும்.

பல்லில் பூச்சி

பூண்டு நன்மைகள் பல்லில் பூச்சி இருந்தால் பல்லரணை ஏற்பட்டுப் பல் வலி உண்டாகும். இதனைப் போக்கப் பல்லிலுள்ள பூச்சி வெளியேற வேண்டும். பல்லிலுள்ள பூச்சி வெளியேற பூண்டுவைத்தியம்.

வெள்ளைப் பூண்டு, வசம்பு, நாயுருவி இலை, நாயுருவி வேர் இந்த நான்கையும் சம அளவாக எடுத்து நசுக்கி வாயில் போட்டுப் பல் வலியிருக்கும் பக்கம் அடக்கிக் கொள்ளவும்.

இதனால் ஈறிருள்ள கெட்ட நீர் வாயிலிருந்து சொட்டுச் சொட்டாக கீழே விழும். அந்த சமயம் முழங்காலில் விளக்கெண்ணெய் தடவிக் கொண்டு கொஞ்சம் நேரம் வெயிலில் நின்றால் பற்களில் உள்ள பூச்சி கீழே விழுந்து விடும். இதனால் வலி, வீக்கம் எல்லாம் மறைந்து பல் பழைய நிலையில் இருக்கும்.

வயிற்று கடுப்பு

பூண்டு நன்மைகள்

வயிற்று கடுப்பு உண்டானால் வெள்ளைப் பூண்டுடன் பெருங்காயம், வெந்தயம் சம அளவு எடுத்துக் கொண்டு இத்துடன் முருங்கை ஈர்க்கு ஐந்து சேர்த்து சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

சிவக்க வறுபட்டதும் நீர் விட்டு நன்றாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி உள்ளுக்குச் சாப்பிடக் கொடுத்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கிவிடும்.

காதில் இரைச்சல்

ஒரு சிலருக்குக் காதில் இரைச்சல் ஏற்படுவதுண்டு. இதனைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் பின்னாளில் காது செவிடாகிவிடும். இதற்கு உடனடியாக ஒரு மருத்துவம்.

வெள்ளைப் பூண்டு, முசுமுசுக்கை இலை இவை இரண்டையும் நசுக்கிச் சாறு பிழிந்து காதில் விட்டால் காதில் ஏற்பட்ட இரைச்சல் உடனடியாக நின்றுவிடும் பூண்டு நன்மைகள் garlic benefits in tamil பூண்டு மருத்துவ குணங்கள்.

உள் நாக்கு அழற்சிக்கு

பூண்டு நன்மைகள் உள் நாக்கு அழற்சி ஏற்பட்டால் சுத்தமான தேனில் பூண்டை உரித்து ஊறப்போட்டு தினசரி சாப்பிட்டால் குணமாகும். பூண்டை பாலில் வேக வைத்துச் சாப்பிட்டாலும் உள்நாக்கு அழற்சி குணமாகும்.

பூண்டு மருத்துவ குணங்கள்

பூண்டு நன்மைகள் garlic benefits in tamil பூண்டமருத்துவ குணங்கள்
பூண்டு நன்மைகள் garlic benefits in tamil பூண்டு மருத்துவ குணங்கள்.
  • பூண்டைப் பொடியாக நறுக்கி பாலுடன் சேர்த்து உட்கொண்டால் இதயக் கோளாறு கட்டுப்படும்.
 • நான்கு அல்லது ஐந்து பல் பூண்டை நசுக்கி உட்கொண்டால் வாயுக் கோளாறு நீங்கும்.
  • பூண்டைத் தேங்காய்ப் பாலில் வேக வைத்து நன்குமசிய அரைத்து சுளுக்கினால் ஏற்பட்ட வீக்கத்தின் மேல் தடவினால் வீக்கம் குறையும்.
  • ஒரு தேக்கரண்டி பூண்டு விழுதுடன் தேங்காய் எண்ணெய் கலந்து உட்கொண்டு வந்தால் வாத நோய் கட்டுப்படும்.
  • பூண்டுச் சாறுடன் எலுமிச்சைப் பழச்சாறைக் கலந்து தடவினால் சரும நோய்கள் கட்டுப்படும்.
  • பூண்டை சிறிதளவு நீர் கலந்து நசுக்கி சாறெடுத்து அத்துடன் தேவையான அளவுசர்க்கரை சேர்த்து உட்கொண்டால் இருமல் கட்டுப்படும்.
  • பூண்டை நசுக்கி ஒரு டம்ளர் பாலில் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை நோயினால் உருவாகும் வீக்கம் குறையும். ரத்தக் கொதிப்பும் கட்டுப்படும்.
  • பூண்டை நெருப்பில் சுட்டு அதை இளம் சூட்டில் மைபோல்  அரைத்துத் தொண்டைக்கு வெளிப்புறம் தடவினால் தொண்டை வீக்கம் குறையும்.

உணவில் மருந்தாக உபயோகப்படுவது பூண்டு. பல மருத்துவக் குணம் உள்ளடக்கியது என்பதால் தினசரி உணவில் பூண்டை அனைவரும் சேர்த்து கொள்வது நல்லது பூண்டு நன்மைகள் garlic benefits in tamil பூண்டு மருத்துவ குணங்கள்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button