பழங்கள்

பழங்கள் நன்மைகள்

பழங்கள் நன்மைகள் fruits benefits in tamil உணவு வகையில் பழங்களை மிகச் சிறந்தவை .நமது நாட்டில் அநேகர் பழங்களை சிறந்த உணவாக மதித்தாலும் தினசரி ஒரு வேளைக்கான உணவாக கூடஏற்றுக் கொள்வதில்லை. நமது நாட்டின் பரப்பை அதன் தட்பவெப்ப வேறுபாடுகளைக் கருதுகையில் இங்கு மக்களுக்கு தேவையான கூடுதலான பழங்கள், காய்கறிகள் ,பால் , ஆகியவை உற்பத்தி ஆக வேண்டும் .அந்த அளவுக்கு உற்பத்தி இல்லை. நமது நாட்டில் பல சுவையுள்ள கனி வர்க்கங்கள் உற்பத்தி செய்ய முடியும் .ஆனால் அந்த அளவுக்கு உற்பத்தி இல்லை. நம்மவர்கள் பழங்கள் உற்பத்தியில் உற்சாகம் ஊக்கம், காட்டவில்லை நமது நாடு பழங்கள் உற்பத்தியில் மூன்றாவது இடம் வகிக்கிறது.

நமது உணவு தேவையில் மிகக் குறைந்த அளவு குறைவாகத் தலைக்கு 30 கிராம் பழங்களும் , 130 கிராம் காய்கறிகளும் தான் கிடைக்கிறது .நமது வருடாந்திர பழம், காய்கறி உற்பத்தி 30 சதவிகிதம் வரை ஒவ்வொரு வருடமும் போதுமான பாதுகாப்பு பதப்படுத்தும் வசதிகள் இல்லாமல் வீணாகின்றன. இந்த இழப்பின் மதிப்பு 3,000 கோடி ரூபாய் நம் நாட்டில் 5 மில்லியன் ஹெக்டேரில் சுமார் 64 மில்லியன் டன் பழங்கள் , காய்கறி உற்பத்தி ஆகின்றன.

பழங்கள் நன்மைகள் – fruits benefits in tamil

பழங்கள் நன்மைகள் fruits benefits in tamil

பல உணவு நினைவாற்றலை பெறுகிறது .மன சோர்வு , மன இறுக்கம் , இவற்றை தடுத்து நிறுத்துகிறது. இதில் உள்ள உயிர்சத்துக்கள் தாதுஉப்புகள், நார்ச் சத்துக்கள் , சாதாரணமான தடுமன் முதல் பல், சம்பந்தமான கோளாறுகள், புற்றுநோய் , வரை உள்ள பல்வேறு நோய்களுக்கு எதிராக நின்று பாதுகாக்க உதவியாக இருக்கின்றன. பழங்களில் மாவுச் சத்து , கொழுப்பு சத்து , உப்பு சத்து , குறைவாக உள்ளது.

இருதய கோளாறு

மார்பு வலிக்கு

பழங்களின் நார் போன்ற பெக்டின் கூடுதல் கொலாஸ்டிராலைக் செரிமானப் பாதையில் பிடித்து உடலுக்கு வெளியே தள்ளுகிறது . சிலர் இந்த நன்மை பயக்கும் HDL கொலஸ்டிரால் அளவை அதிகப்படுத்தி இருதயக் கோளாறுகளை தடுக்கிறது என்கிறார் . பசுமையான பழங்கள் ரத்த அழுத்தத்தை தணிப்பன பழங்கள் நன்மைகள் fruits benefits in tamil .

செரிமான பிரச்சனை நீங்க

வாய்வு தொந்தரவு நீங்க

பழங்களில் உள்ள செல்லுலோஸ் இலக்குவான மலம் வெளியேற பாதையை சரி செய்கிறது .  நார்சத்து குடல் விரிவுபடுத்தும் தன்மையாய் இருந்து ஈரப்பதம் காக்க உதவுகிறது. பழங்கள் மதிப்புள்ள சிட்ரிக் , மாலிக் , அஸிடிக் , டார்டாரிக் , ஆகிய அமிலத்தை உற்பத்தி செய்கின்றன .இந்த இயற்கை அமிலங்கள் வயிற்றில் செரிமானம் அளித்து பசியை தூண்டுவன. கல்லீரல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது .

முற்காலத்தில் முனிவர்கள் , யோகிகள் , வாழ்நாள் பூராவும் பழங்களை உண்டு நோய் நொடி இன்றி நூறு ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வந்தனர் என்று நாம் பழம்பெரும் நூல்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள். பழங்கள் பல்வேறு வகை , பல்வேறு மணம் , சுவை, உடையவை.இவை மணம் சுவை மட்டுமல்லாமல் உடல் நலம் உள்ள நலம் , தருபவை ஒரு நாளைக்கு 100 கிராம் அளவுக்கு குறையாமல் பழங்களை உணவாகக் கொள்வது நலம்.

குடல் பிரச்சனை

குடல் பிரச்சனை

உணவு வகையில் பழங்களே மிகச்சிறந்தவை. நம் உணவில் இவை அதிகம் இருக்கவேண்டும். ஆல்களின் ரகத்தை சேர்ந்த உப்புக்கள் பழங்களின் அதிகம் இருக்கிறது. ரத்தத்தைச் சுத்தமாக வைத்துக் கொண்டு அதை திராவகமாகாமலும் புளித்துப் போகாமலும்தடுக்கின்றன. பழங்கள் குடல்களை ஆரோக்கியமாகவும் நன்றாக வேலை செய்யவும் வைக்கின்றன என்கிறார் உணவு நிபுர் சாராபர்ட் மெக்காரிசன்.

எனக்கு தெரிந்தவரை என்னைப் போல் அவ்வளவு பழங்கள் சாப்பிட்டவர்கள் இருக்க மாட்டார்கள். பழங்களையும் , கொட்டைகளையும், தவிர வேறு எதையும் சாப்பிடாதிருக்கிறேன் என்று எந்தவித நோய் நொடியும் இல்லாமல் இறுதிவரை பூரணப் பொலிவுடன் விளங்கியகாந்தி அடிகளார் .

கருப்பு திராட்சை பயன்கள்

பழங்கள் சாப்பிடும் முறை

பழங்கள் நன்மைகள் fruits benefits in tamil

மரத்திலிருந்து பறித்த பழங்களை உடனே சாப்பிட அதன் சக்தி ஒரு மணி நேரத்தில் ரத்தத்துடன் ஒன்றிவிடும். ஒருநாளில் ஒரு வேளையானதுபழ உணவு மட்டும் உணவாகக் கொள்ளலாம் பழங்கள் நன்மைகள் fruits benefits in tamil .

பழங்களை நம் உணவிற்கு முன் சாப்பிடுவது நல்லது. உணவுடன் சாப்பிடுவதைவிட பாலுடன் சாப்பிடுவது நல்லது. காய்களுடன் கலந்து சாப்பிடுவது நலம் பயக்காது எனக் கருதப்படுகிறது. பழங்களின் கூடுதல் பயன் பெற அவற்றை தனித்தனியாக தான் சாப்பிட வேண்டும். உலர்ந்த பழங்களையும் பசுமையான பழங்களையும் சேர்த்து சாப்பிடுவது தவறு.

அன்றாட உணவில் பழங்கள் கூடுதல் அளவு இருக்க வேண்டும் . வயிறுமுட்ட ரொட்டி ,காய்கறி, பால் சாப்பிட்டபின் பழங்கள் சாப்பிட்டால் விரும்பும் பயன் கிடைக்காது .

ஒரு சமயத்தில் ஒரு வகை பழம் தான் சாப்பிட வேண்டும். உதாரணமாக ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டால் வேறு சாப்பிடாமல் இருப்பது நல்லது. பழங்களின் கூடுதல் பயனை பெற வேண்டுமானால் வயிறு காலியாக இருக்கும் போது தான் அவாற்றை சாப்பிட வேண்டும். காலையிலும் மதியமும் பழங்கள் மட்டும் சாப்பிடுவது இரவில் சப்பாத்தி அல்லது ரொட்டியு ,காய்கறிகளுடன் சாப்பிடுவது நல்ல திட்டம். அல்லது இரவில் பழங்கள் மட்டும் சாப்பிடுவது மதியம் வேறு உணவு சாப்பிடுவது என வைத்துக்கொள்ளலாம்.

நமது நாட்டில் பல பாகங்களில் பல பருவ காலங்களில் , பல வகையான பழங்கள் உற்பத்தியாகின்றன. இலந்தை கொடுக்காய்ப்புளி போன்றவை சாகுபடி செய்யாமலே கிடைக்கின்றன. அந்த பருவகாலத்தில் கிடைக்கக் கூடியவற்றை சாப்பிடலாம் பழங்கள் நன்மைகள் fruits benefits in tamil .

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button