வீட்டு மருத்துவம்

ellu benefits in tamil எள்ளு சாப்பிடுவதினால் ஏற்படும் நன்மைகள்

ellu benefits in tamil “ இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளுனு “ சொல்வாங்க நம்ம முன்னோர்கள். ஆமாங்க அது உண்மைதான் உடல் மெலிந்து பலவீனமானவர்களுக்கு எள்ளு ஒரு வடபிரசாதம்னு சொல்லலாம். நம்ம இந்த பகுதியில் எள்ளு பயன்கள் அதோட தீமைகள் மற்றும் அதை சாப்பிடும் முறைகளை பற்றி பார்க்கலாம்.

எள்ளு சாப்பிடுவதினால் ஏற்படும் நன்மைகள்

ellu benefits in tamil எள் நன்மைகள் 

 • எள்ளு சாப்பிடுவதன் மூலம் அவங்களோட சரும பிரச்சினைகளுக்கு அது தீர்வாக இருக்கிறது.தோல் சுருக்கத்தை குறைத்து அவர்களை இளமையான தோற்றத்துக்கு மாற்றுகிறது.
 • எள்ளுவில் அதிக அளவிலான இரும்பு சத்து, ஜிங்க், துத்தநாகம் காணப்படுகிறது. அதை உட்கொள்வது மூலம் உடம்புக்கு தேவையான பலத்தை அது கொடுக்கிறது.
 • எள்ளுவில் அதிக செம்பு சத்து காணப்படுவதனால் அது இரத்தத்தில் அதிக அளவு  பிராணவாயுவை கிரகிக்க செய்து உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுக்கிறது.
 • எள்ளு உட்கொள்வதினால் மூட்டு தேய்மானம்,எலும்பு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு நல்ல பலனை அளிக்கிறது.
 • உணவு செரிமானத்துக்கு எள்ளு நல்ல பயனை அளிக்கிறது.
 • இரத்தத்தில் சர்க்கரையோட அளவை சீராக்கி சர்க்கரைநோயை வராமல் தடுக்கிறது.
 • உடலில் கெட்ட கொழுப்புகளை அது சரி செய்து உடலில் இரத்த சிவப்புஅணுக்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு அளிக்கிறது.
 • புரத சத்து குறைவாக உள்ளவர்கள் எள்ளு சாப்பிடுவதினால் அவர்களுக்கு உடல் சோர்வையை நீக்கி ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கிறது.
 • மேலும் இது சிறுநீரக பிரச்சினைக்கு தீர்வாக இருக்கு. சிறுநீரக கற்கள் உருவாவதை தடுத்து சிறுநீர் வெளியேற்றத்திற்கு உதவுகிறது.
 • போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு இது உயிர்த்தோழனாக இருக்குதுன்னுகூட சொல்லலாம், ஏனென்றால் அது அவர்களின் உடலில் போதயையை குறைத்து உடலை தூய்மையாக வைத்து கொள்ள உதவுகிறது.
 • இரத்த அழுத்தத்தை குறைப்பதில் கூட இது முக்கிய செயலாற்றுகிறது.

எள்ளு வகையில் கருப்பு எள்ளு, வெள்ளை எள்ளு என்று பல வகைகளில் காணப்படுகிறது. இதை தொடர்ந்து அவற்றின் பயன்களையும் பார்க்கலாம்.

ellu benefits in tamil எள் நன்மைகள் 

கருப்பு எள் பயன்கள்

 • கருப்பு எள்ளு புற்றுநோய் செல்களை உருவாக்கவிடாமல் தடுக்கிறது.புற்றுநோய் உருவாக விடாமல் தடுக்கும் மூல பொருளான    “சீசமின் ” எள்ளுவில் அதிகம் காணப்படக்கூடிய முக்கிய மூல பொருள் ஆகும் .
 • பெண்கள் இதை தினமும் சாப்பிடுவதனால் அவர்களுக்கு வரக்கூடிய மார்பக புற்றுநோய் தடுக்கப்படுகிறது.
 • பொதுவாகவே சமையலுக்கு மற்ற உணவு பொருளுக்குமே கருப்பு எள்ளு அதிகம் பயன்படுத்தபடுகிறது.
 • சிறு குழந்தைகளுக்கு சிற்றுண்டி உணவாகவும்  (எள்ளு உருண்டை)இதை நாம் செய்து கொடுக்கலாம்.

ellu benefits in tamil எள் நன்மைகள் 

வெள்ளை எள் நன்மைகள் 

 • பொதுவாகவே கருப்பு எள்ளை காட்டிலும் வெள்ளை எள்ளுக்கு அதிக மருத்துவகுணம் அதிகம். உடல் மெலிந்தவர்கள், உடல் வலுவற்று இருப்பவர்களுக்கு வெள்ளை எள்ளு அதிக அளவு சக்தியை கொடுக்கிறது .
 • பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய எல்லாம் பிரச்சினைகளுக்கும் வெள்ளை எள்ளு தீர்வாக இருக்கிறது.
 • வெள்ளை எள் பொதுவாக குறுக்கு வலி , எலும்பு தேய்மானத்துக்கு ஒரு நிவாரணமாக அமைகிறது.

எள்ளு தீமைகள் 

எள்ளு நிறைய நன்மைகளை தந்தாலும் அதை அதிக அளவு எடுக்கும்போது சில பக்கவிளைவையும் தருகிறது. அதை பற்றி பார்க்கலாம்.

 • சிலருக்கு அதனின் விதைகளை அதிக அளவு எடுக்கும்போது அதிலுள்ள எண்ணெய் குடல் அலர்ஜியை ஏற்படுத்துகிறது 
 • அதிக அளவு எடுக்கும்போது சிலருக்கு உடல் ஒவ்வாமை ஏற்படுகிறது.
 • மூச்சு திணறல் , நெஞ்சு இறுக்கம் போன்றவை ஏற்படுகிறது.
 • அதிக அளவுக்கு எடுத்துக்கொள்ளும்போது குடல்வால் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

​எவ்வளவு உட்கொள்ள வேண்டும்?

 பெரும்பாலும் நாம் உட்கொள்ளும் உணவு பொருள்களின் அளவு நமது உடலே தீர்மானிக்கிறது. எதையுமே அளவோட சாப்பிடும்போது அது நன்மையை கொடுக்கிறது. அதுபோலவே வயது , உடல் அளவு , செயல்திறன் கொண்டு உணவு அளவு மாறுபடும். 

ellu benefits in tamil எள் நன்மைகள் 

எள்ளு உணவுகள் 

விளையாடும் குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது கொஞ்சம் சிரமம் அதையே நாம் அவர்களுக்கு பிடித்த உணவாக கொடுப்பது எளிது.

 • அந்த வகையில் எள்ளு மிட்டாய் ,எள்ளு உருண்டை ..
 • எள் பொடி இட்லி , தோசைக்கு ஏற்ற side dish.
 • பள்ளி செல்லும் குழந்தைக்கு காலை உணவாக எள் சாதம் செய்து கொடுப்பது அவர்களின் உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. 

திணை அரிசி பயன்கள்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button