Cucumber benefits in tamil | வெள்ளரிக்காய் பயன்கள்

Cucumber benefits in tamil வெள்ளரிக்காய் பயன்கள் வெள்ளரிக்காய் சமையலில் சேர்த்து உண்பதைவிட பச்சையாக உண்பது மிகவும் நல்லது. இதில் நீர்ச் சத்து மிகுந்துள்ளமையால் நல்ல பலனைக் கொடுக்கும். வெள்ளரிக்காயில் வைட்டமின் ஏ- குறைந்த அளவிலும், வைட்டமின் பி, சி, ஈ, கே போற்ற உயிர்ச்சத்துகள் உள்ளன.
Table of Contents
Cucumber benefits in tamil – வெள்ளரிக்காய் பயன்கள்
கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், கந்தகம், சிலிகன், குளோரின் போன்ற தாதுச் சத்துகளும் ஏராளமாக உள்ளன.
இந்தக் காய் குளிர்ச்சி மிகுந்தது என்பதால் வெயில் காலத்தில் சாப்பிடுவதற்கு ஏற்றது.
மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தயிர் சாதத்துடன் இதனைச் சேர்த்துச் சாப்பிட்டால், கல்லீரல் பலம்பெற்று மஞ்சள் காமாலை விரைவில் குணமாகிட வழி வகுக்கிறது.
சிறுநீர் சரியாகப் பிரியாமல் அடிவயிறு ஊதிப்போய் அவதிப்படு கிறவர்களுக்கு வெள்ளரிக்காய் விதைகளை அரைத்து அடிவயிற்றில் பூசி பற்றுப் போட்டால் அரைமணி நேரத்தில் சிறுநீர் பிரிந்து தொல்லை விலகும்.
சிறுவர்கள் வெள்ளரிக்காயைக் கடித்து தின்பதினால் பற்களுக்கு ஆரோக்கியம் ஏற்படுகிறது.
இது பொதுவாக கல்லீரலில் ஏற்படும் நோய்கள், சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்களுக்கு மிகவம் நல்ல பயனை அளிக்கும்.
தாகத்தைத் தணிக்கிறது. நரம்புகளுக்கு வலிமை தருகிறது.