வீட்டு மருத்துவம்

தேங்காய் எண்ணெய்யின் 5 அற்புத பலன்கள் coconut oil benefits in tamil

coconut oil benefits in tamil  வணக்கம் நண்பர்களே, நாம் இந்த பதிவில் தேங்காய் எண்ணெய்யின் பயன்களை பற்றி பார்க்கலாம். பொதுவாகவே நாம் அன்றாட சமையலில் எண்ணெய்களை அதிகமாகவே பயன்படுத்துகிறோம்.ஏனென்றால் பொரிப்பதற்கு,வறுப்பதற்கு,தாழிப்பதற்கு என்று எல்லாவற்றிற்கும் எண்ணெய் தேவைப்படுகிறது.

அப்படி நம் பயன்படுத்தும் எண்ணெய்களில் எது நல்லது எது கெட்டது என்று தீர்மானித்து சமைப்பது மிக நல்லது ஏனென்றால் ஒருவரின் சமையல் அறையில் தான் அந்த அந்த குடும்பத்தின் ஆரோக்கியமே உள்ளது அப்படினு  சொல்வாங்க. எனவே சத்தான பொருள்களை சமைப்பதின் மூலமே அவர்களின் ஆரோக்கியமே அமைந்துள்ளது.

coconut oil benefits in tamil  தேங்காய் எண்ணெய் நன்மைகள்

coconut oil benefits in tamil  தேங்காய் எண்ணெய் நன்மைகள்

 • தேங்காய் எண்ணெய் சமையலில் பயன்படுவதன் மூலம் அந்த உணவு சீக்கிரமாக செரிமானம் அடைய உதவியாக இருக்கிறது.
 • பொதுவாக சித்த மருத்துவத்தில் அதிக அளவு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தபடுகிறது 
 • இந்த தேங்காய் எண்ணெய்யை உணவில் நம் பயன்படுவதன் மூலம் அது கெட்ட கொழுப்புகளை உடம்பில் சேர விடுவதில்லை.
 • மேலும் இது உடம்பில் ஹார்மோன்களின் நிறத்தை அதிகப்படுத்தி தோல்களின் நிறத்தை மாற்றுகிறது.
 • பிறந்த குழந்தை முதல் பெரியவங்க வரை இந்த தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம்.
 • பிறந்த குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் அவங்க சரும மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்கும்.
 • குளிர்காலத்தில் நமது சருமம் வறட்சியாக காணப்படும் அப்பொழுது தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் நமது சருமம் ஈரப்பதமாக காணப்படும்.
 • தேங்காய் எண்ணெய்யை நம் முகத்தில் தேய்ப்பதன் மூலம் முகம் புத்துணர்வாக இருக்கும் .
 • மேலும் தேங்காய் எண்ணெய்க்கு மருத்துவ பலன்களும் உண்டு.
 • குழந்தைகளுக்கு ஜலதோஷ காலத்தில் தேங்காய் எண்ணெயில் கற்பூரத்தை சூடுசெய்து அந்த எண்ணெய்யை குழந்தைகளின் மார்பு பகுதியில் தடவுவதன் மூலம் நல்ல பயனை அது கொடுக்கும்.

aavaram poo benefits for health in tamil ஆவாரம் பூ முகத்திற்கு ஆவாரம் பொடி செய்யும் முறை ஆவாரம் பூ உடல் பாதுகாப்புக்கு ஆவாரம் பூ நீரிழிவு நோயாளிகளுக்கு ஆவாரம் பூ மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு 

 தேங்காய் எண்ணெய் முடி வளர  

 • தேங்காய் எண்ணெய் தலைமுடிக்கு நல்ல போஷாக்கு அளிப்பதோடு தலைமுடி வளர உதவுகிறது.
 • பெரும்பாலும் எல்லாருக்குமே தலைமுடி பிரச்சினை அதிகமாகவே காணப்படுகிறது.
 • அதற்கு காரணம் இப்ப நாம பயன்படுத்துகிற ஷாம்பு,ஒழுங்காக எண்ணெய் வைப்பது இல்லாமல்தான்.
 • பொதுவாக தேங்காயில் கிடைக்கும் அனைத்திற்குமே அதிக நன்மை தரக்கூடியது.
 • இயற்கையில் நம் தலைமுடிக்கு சுத்தமான தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் தலைமுடிஉதிர்வை தீர்வுக்கு கொண்டுவரலாம்.
 • நம் குளிப்பதற்கு முன்பு தேங்காய் எண்ணெய் கொண்டு 10நிமிடங்கள் தலைமுடிக்கு மசாஜ் செய்வதன் மூலம் இரத்த ஓட்டம் அதிகரித்து தலைப்பகுதிக்கு இரத்தம் ஓட்டம் சீராக்கப்பட்டு அது மூடி வளர வழிவகுக்கிறது.
 • மேலும் வறட்சியின் போது சிலருக்கு தலைமுடியில் பொடுகு காணப்படும்.
 • அப்பொழுது தேங்காய் எண்ணெய்யை சிரிது சூடுசெய்து மிதமான சூட்டில் காட்டன் பஞ்சு கொண்டு அதன் வேர்க்கால்கள் முதல் தேய்த்து பின்பு 10நிமிடங்கள் கழித்து குளிப்பது பொடுகுக்கு நல்ல தீர்வாகும்.
 • மேலும் தேங்காய் எண்ணெய்யுடன்  செம்பருத்தி பூ , மருதாணி ,கறிவேப்பிலை , நெல்லிக்காய் போன்றவற்றை சேர்த்து தேய்ப்பதன் மூலம் முடி நன்கு வளரும்.
 • மற்ற எண்ணெய்களை காட்டிலும் தேங்காய் எண்ணெய் தலைமுடி வளரவும்,தலைமுடிக்கு சிறந்த சைனையும் தருகிறது. coconut oil benefits in tamil

coconut oil benefits in tamil  தேங்காய் எண்ணெய் நன்மைகள்

செக்கு தேங்காய் எண்ணெய் பயன்கள்  – coconut oil benefits in tamil

 • செக்கு எண்ணெய் என்பது இயற்கை முறையை கொண்டு தயாரிக்கப்படுவது ஆகும்.
 • தேங்காய்களை நன்கு காயவைத்து பின்பு அதனை மரச்செக்கில் கொண்டு நல்ல கடைந்துஎடுக்கப்பட்டதேயாகும் .
 • இவ்வாறு தயாரிக்கப்படும் எண்ணெய் சமையலுக்கு,தலைமுடி போன்றவற்றிக்கு பயன்படுத்துவது நல்லது.
 •   செக்கு எண்ணெய் சமையலுக்கு பயனப்டுத்துவதன் மூலம் அது உடலுக்கு சிறந்த நன்மையை தருகிறது.
 • உணவு செரிமானத்துக்கு நல்ல பயனை தருகிறது.
 • பொதுவாக நம் சமையலுக்கு மற்ற எண்ணெய்களை பயன்படுத்தாமல் சுத்தமான தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் உடல்நலத்துக்கு நல்ல ஆரோக்கியத்தை தருகிறது.
 • இதய நோய் உள்ளவர்களுக்கு தேங்காய் எண்ணெயில் சமைத்து கொடுப்பது நல்லது.
 • வளரும் குழந்தைகளுக்கு கூட தேங்காய் எண்ணையில் சமைத்து கொடுப்பது நல்ல  ஆரோக்கியத்தை தரும்.
 • செக்கு தேங்காய் எண்ணெய் கொண்டு முகத்திற்கு நல்ல மசாஜ் செய்து விட்டு பின்பு முகத்தை கழுவ நல்ல பொலிவை தரும்.
 • சிறிதாக அடிபட்ட இடங்களில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது நல்ல பயனை கொடுக்கும்.
 • பொதுவாக அந்த காலங்களில் அடிபட்ட புண்களில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி வந்திருக்காங்க.
 • முகப்பருக்கள் உள்ளவர்கள் இரவில் தூங்கசெல்வதற்கு முன்பு இந்த செக்கு எண்ணெய் கொண்டு முகத்தில் தேய்க்க ஓரிரு நாட்களில் அது சரியாகிவிடும்.
 • குழந்தைகளை குளிக்க வைப்பதற்கு முன்பு தேங்காய் எண்ணெய் கொண்டு நல்ல தேய்த்து குளிக்கவைக்க சருமம் மிருதுவாக இருக்கும்.
 • தேங்காய் எண்ணெய் கொண்டு முதலில் வாய் கொப்பளித்த பின்பு பல் தேய்ப்பது பற்களை நல்ல வலுப்படுத்துவதோடு பற்களின் கறைகளை நீக்கி சுத்தமாக வைக்க உதவுகிறது.
 • தேங்காய் எண்ணெய் ஈறுகளின் தங்கியுள்ள அழுக்குகளை நீக்கி பற்களை சுத்தமாக வைக்க உதவுகிறது.

குறிப்பு

இன்று ஆர்கானிக் என்ற பெயரில் சுத்தமான செக்கு எண்ணெய் என்று பல பெயர்களில் கலப்பிடமான எண்ணெய் விற்கப்படுகிறது.அதை பயன்படுத்தாமல் சுத்தமான எண்ணெய் பயன்படுத்துங்கள்.அம்மிதற்சார்பு website ல் சுத்தமான தேங்காய் எண்ணெய் கிடக்கிறது என்பதை தெரியப்படுத்துவதில் மகிழ்ச்சி.  

coconut oil benefits in tamil  தேங்காய் எண்ணெய் நன்மைகள்

தேங்காய் எண்ணெய் தீமைகள் 

தேங்காய் எண்ணெய் என்றாலே நன்மைகள் மட்டும் தான் நினைத்து கொண்டுஇருக்கிறோம்.அது போல சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும். 

பாற்கடலில் இருந்த வந்த அமிர்தம் முதலில் உருவாகும் முன்பு அதில் இருந்து வந்தது விஷம் தான். அதுபோல எப்பொழுதுமே நன்மை இருக்குமிடத்தில் தீமையும் கொஞ்சம் இருக்கும் அதன் பக்கவிளைவுகளை பற்றி பார்க்கலாம்.

 • தேங்காய் எண்ணெய் குழந்தைகளுக்கு நல்லது என்றாலும் தைராய்டு பிரச்சினை உள்ள குழந்தைகளுக்கு கொடுப்பது தவிர்ப்பது நல்லது .
 • ஏனென்றால் அது சில அலர்ஜிகளை ஏற்படுத்தும்.
 • இதய நோயாளிகளுக்கு மற்ற எண்ணெய்களை காட்டினாலும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது நல்லது என்றாலும் அதிக அளவு பயன்படுத்துவது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
 • செக்கு எண்ணெய் சில சமயங்களில் குளிர்ச்சியை ஏற்படுத்துவதால் அது தலைவலியை கொடுக்கும்.
 • சில நேரங்களில் அது கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
 • முகத்திற்கு பயன்படுத்துவதால் சில சமயங்களில் முகம் பிசுபிசுப்புடன் காணப்படும் நிலை ஏற்படுகிறது.
  வால்நட் பயன்கள் – Walnut benefits in tamil

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button