காய்கறி

Coconut Milk Benefits in tamil | தேங்காய் பால் நன்மைகள்

Coconut Milk Benefits in tamil தேங்காய் பால் நன்மைகள் இளநீர் முற்றித் தேங்காய் ஆகிறது. முற்றிய இளநீர் கனியாகாமல் தென்னை மரத்தின் வித் ஆகிறது, இது உலகில் உள்ள வித்துக்களிலேயே மிகப் பெரியதாகும்.

இறைவனுக்கு படைப்பதிலும்,மங்கல நிகழ்ச்சிகளிலும், தேங்காய் முக்கிய இடம் வகிக்கிறது. தேங்காய் ஒரு முழுமையான உணவாகும்.தேங்காய் உடைக்கும் பொழுது அதில் உள்ள நீரை வீணாக்காமல்  உபயோகிக்கலாம். அதில் இளநீரில் உள்ள சத்துக்கள் பெரும்பாலும் உள்ளனர்.

தேங்காயில் உயர்ரகப் புரதம், அமினோ அமிலங்கள்,அதிக அளவில் பொட்டாசியம், சோடியம்,மெக்னிசியம்,  பாஸ்பரஸ், கந்தகம்,அயம் , சுதையம் முதலியவை உள்ளன.உயிர்ச் சத்து B அதிக அளவிலும் A சிறிதும் இருக்கிறது .

Coconut Milk Benefits in tamil – தேங்காய் பால் நன்மைகள்

Coconut Milk Benefits in tamil - தேங்காய் பால் நன்மைகள்

இளம் தேங்காயை ஆட்டி எடுத்து தேங்காய் பாலில் இலகுவில் செரிமானம் அளிக்கக்கூடிய அமினோ அமிலமும்,  உடலைச் சரிப்படுத்தி வளர்ச்சி அளிக்கக் கூடிய கூடுதல் புரதமும் இருக்கிறது .தேங்காய்ப் பால் மூத்திர கோசங்கள் சுத்தமாக்கப் பயன்படுகிறது.

தேங்காய்ப்பாலை முகத்தில் உள்ள மாசுக்கள் குறிப்பாக அம்மை வடுக்கள் அகற்றத் தடவி வரலாம்.தலைக்குத் தேய்த்துக் குளித்தால் முடி பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும் .தேங்காய் பால் குளிர்ச்சி ஊட்டல், ஊட்டம் தருதல் ,மலமிளகுதல், நீர் பிரிதல்,  போன்ற நலன்களை உண்டாக்கியது.

பலாப்பழம் நன்மைகள்

என்புருக்கி நோயின் போது சோர்ந்து பலவீனம் அடைந்த போதும், நாள்தோறும் நான்கு முதல் 8 அவுன்ஸ் தேங்காய் பால் கொடுத்து வந்தால் நல்ல பலன் கிட்டும். தேங்காய் பால் காய்ச்சல் தணிக்கவும், தாகத்தைப் போக்கவும் பயன்படுகிறது.

தேங்காய்ப்பால் சத்துக் குறைவினால் வரும் குழந்தைகள் உடலைச் சரிசெய்து ஊட்டம் அளித்து வளர்ச்சியைத் தருகிறது. தேங்காயைத் துருவிப் போட்டு அரைத்து போட்டும் சமையலில் பயன்படுத்துவார்கள். உலர்த்தப்பட்ட தேங்காய்யும் உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தேங்காய் எண்ணெய் பயன்கள் coconut oil benefits in tamil

தேங்காய் எண்ணெய் பயன்கள் coconut oil benefits in tamil

தேங்காய் பாலை காய்ச்சி தேங்காய் எண்ணெய் எடுக்கலாம். அந்தப் பசும் எண்ணெய் தலை வழுக்கையைப் போக்கி முடி வளர்க்கும். தீப் புண்களை ஆற்றும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Check Also
Close
Back to top button