நாட்டு மருந்து

சித்தரத்தை மருத்துவ பயன்கள்

சித்தரத்தை மருத்துவ பயன்கள் – Chitharathai benefits in tamil

சித்தரத்தை மருத்துவ பயன்கள் chitharathai benefits in tamil சிற்றரத்தை சிற்றாத்தையைச் சிலர் “சந்திராஷ்டம்” என்றும் கூறுவர். காய்ச்சலுக்கு சிற்றரத்தை, சுக்கு, அதிமதுரம், கோஷ்டம், தேவதாரு இவற்றில் 5 கிராம், பத்து கிராம்பு இவைகளை ஒரு சட்டியில் தட்டிப் போட்டு ஆழாக்குத் தண்ணீர் விட்டு அரை ஆழாக்காகச் சுண்டக் காய்ச்சி, வடிகட்டி காலை, பகல், மாலை ஆக மூன்று வேளைக்கு இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட காய்ச்சல் குணமாகும்.

இருமலுக்கு

turmeric in tamil மஞ்சள் மருத்துவ பயன்கள்

ஐந்து கிராம் எடை சிற்றரத்தையை உடைத்து, ஒரு சட்டியில் போட்டு, ஆழாக்குத் தண்ணீர் விட்டுச் சுண்டக்காய்ச்சி இறக்கி இரண்டு தேக்கரண்டியளவு கஷாயத்துடன் தேக்கரண்டியளவு இஞ்சி சாறு சேர்த்துக் கொடுத்து வந்தால் இருமல் குணமாகும்.

இலவங்கப்பட்டை பயன்கள்

வாய்வு குணமாக

சிற்றரத்தை, கிராம்பு, சுக்கு, மிளகு, ஏலரிசி, திப்பிலி, அக்ரகாரம் வகைக்கு 5 கிராம் எடை எடுத்து இடித்துத் தூள் செய்து, இரண்டு பட்டாணி அளவு தூளுடன் தேன் கூட்டி காலை, மாலை சாப்பிட வாய்வு நீங்கும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button