கீரை

முட்டைக்கோஸ் கீரை நன்மைகள் | cabbage spinach benefits in tamil

முட்டைக்கோஸ் கீரை நன்மைகள் cabbage spinach benefits in tamil  முட்டைக்கோஸ் கீரை அடைவோளை காய்கறி வகைகளில் ஒன்றாகவே நாம் கருது அதற்குக் காரணம் அது மற்ற கீரைகளை போல் தனித்தனி இல்லாமல் ஒரு காயைப் போல உருண்டை வடிவம் பெற்றிருப் தெயாகும். ஆனால் இது கீரை வகையைச் சேர்ந்ததாகும். இதற்கு முட்டை கிரை இலைக் கோஸ் என்று பெயர் வழங்குவதிலிருந்தே இது கீரை சேர்ந்தது என்பதற்கு நல்லதொரு சான்றாகும்.

முட்டைக்கோஸ் கீரை நன்மைகள் – cabbage spinach benefits in tamil

முட்டைகோஸ் கீரை இரண்டடி முதல் மூன்றடி உயரம் வரை வாரம் கூடியது. இலைகள் ஒன்றன் மீது ஒன்றாக மூடி முட்டை போன்றவடிவத்தைப் வறுகிறது. தண்டின் நுனியில் உள்ள மருத்து மட்டும் வளர்ந்து தலையாக உருப்பெறுகிறது.

முட்டைக்கோஸ் ஒரு மிகச் சிறந்த உணவாக உலகம் முழுவதும் வெற்றப்பட்டு உண்ணப்படுகிறது. அமெரிக்காவில் உணவுப் பொருட்களின் வலையில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

அமெரிக்கா உருளைக் கிழங்கு, லெட்டுஸ் மற்றும் தக்காளி ஆகிய வற்றுக்கு அடுத்தப்படியாக முட்டைக்கோலக்கு இடம் தந்துள்ளது.

முட்டைக்கோஸ் கீரையில் உயிர்ச்சத்துக்களான வைட்டமின் ஏ, பி. சி ஆகியவைகள் நிறைவான அளவில் கலந்துள்ளன. மற்றும் கண்ணாம்பு இரும்பு, மணிச்சத்துகளும், பொட்டாசியம், சோடியம் போன்ற தாதுச் சத்துகளும் குறைவற கலந்துள்ளன.

முட்டைகோளின் மேலுள்ள பாசைக் கொழுந்து இலைகளில் கண்ணாம்பு சத்து அதிகம் இருக்கிறது. முட்டைக் கோஸிலுள்ள வெள்ளைப் பல அவ்வளவு சத்துடையது இல்லை. பச்சை இலைகள் இருதயம், தசை மற்றும் எலும்புகளை வளர்க்கும். கண்ணாம்பு, இரும்புச் சத்துகளை இந்தப் பனை இலைகள்தான் அதிகம் கொண்டிருக்கின்றன.

முட்டைக்கோஸில் தடித்த தண்டுப்பகுதியைத் தவிர மற்றப் பாகங்கள் அனைத்தும் உணவாக உண்பதற்கு ஏற்றதாகும்.

முட்டைக் கோஸை பலவகையான உணவுப் பண்டங்களாகத் தயாரித்து உண்ணலாம். வேக வைக்காமல் பச்சையாக உண்பது இப்புடையது. இக்கீரையைப் பொரியல் செய்யலாம். பருப்புகளுடன் சேர்த்து வட்டு செய்யலாம். சாம்பார் மற்றும் குழம்பு வகைகள் தயாரிக்கலாம் கட்டைக் கோஸ்வாறுனத்துமிளகு நீர் தயாரிக்கலாம்.

கேரட், பீட்ருட், உருளைக் கிழங்கு இவற்றுடன் சேர்த்து பலவகையான உணவுப் பண்டங்கள் தயாரிக்கலாம். கீரைவடை போன்று முட்க்ைகோஸ் வடையும், போண்டா முதலிய சோமாஸ் வகைகளும் தயாரிக்கலாம்.

கேரட் தினமும் சாப்பிடுவதால் வரும் நன்மைகள்

இறைச்சி வகைகளுடன், குறிப்பாக ஆட்டிறைச்சியுடன் சேர்த்து சமைத்து உண்ணலாம். மேலைநாட்டார் வேக வைத்த இறைச்சியை முட்டைக் கோஸ் இலைகளுக்கள் வைத்து மூடி பொடியாக செய்து உண்ணுகின்றனர். இவ்வகை உணவில் கோஸ் இலைகளை வேகவைக்காமல் பச்சையாக வைத்து உண்பது ஒரு சிறப்பாகும்.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சல்வர் கிரெஸ்ட் என்னும் உணவு வகையானது மிகச் சிறப்புடையது. இது முட்டைக்கோஸால் தயாரிக்கப்பட்டது. இவ்வுணவை ரஷ்யர்களும், ஜெர்மனியர்களும் விரும்பி உண்ணுகின்றனர். முட்டைக்கோஸை நன்றாக நறுக்கி துண்டுகளாக்கி அதன் மீது முட்டைக் கோஸ் சாறைப் பிழிந்து உப்பு சேர்த்து தயாரிப்பதே இவ்வுணவாகும் cabbage spinach benefits in tamil.

நூறு கிராம் முட்டைக் கோஸில் 68 விழுக்காடு உண்ணக் கூடிய பகுதியாக அமைகிறது. இதில் 91.9 விழுக்காடு நீர் நிறைந்திருக்கிறது. கொழுப்புச் சத்தும், புரதச்சத்தும் முறையே 0.1 விழுக்காடும், 1.18 விழுக்காடு இக்கீரையில் அமைந்திருக்கின்றன.

தாது உப்புகள் 0.6 விழுக்காடு இருக்கின்றது. நார்ப்பகுதியைப் பொறுத்த அளவில் 1.0 விழுக்காடு அமைந்திருக்கிறது. மற்றைய மாவுப் பொருட்கள் 4.6 விழுக்காடு இந்தக் கீரையில் அமைந்துள்ளன. இது கொடுக்கும் வெப்ப ஆற்றல் அளவு 27 கலோரிகள் ஆகும்.

நூறு கிராம் கீரையில் தாது உப்புகளைப் பொருத்த வரையில் சுண்ணாம்புச் சத்து 39 மில்லி கிராமும், மக்னீசியம் 10 மில்லிகிராமும், ஆக்ஸாலிக் அமிலம் 2 மில்லி கிராமும், மணிச்சத்து 44 மில்லி கிராமும், இரும்புச் சத்து 0.8 மில்லி கிராமும், கந்தகச் சத்து 67 மில்லி கிராமும், குளோரின் 12 மில்லி கிராமும் உள்ளன.

உயிர்ச்சத்தின் முக்கிய சத்தான வைட்டமின் ஏ 2000 அனைத்துலக அலகு உள்ளது. தயாமின் 0.06 மில்லிகிராமும், ரைபோஃபிளேவின் 0.03 மில்லிகிராமும், நிக்கோடினிக் அமிலம் 0.4 மில்லி கிராமும், வைட்டமின் சி 124 மில்லி கிராமும், கோவின் 120 மில்லிகிராமும் உள்ளன.

முட்டைக் கோஸை தினம் பச்சையாக உண்டுவர உடல் இளமையும், மலர்ச்சியும் பெறும். மருந்து வகைகளில் முட்டைக்கோஸ் சாறு மிகச் சிறந்த இடத்தைப் பெறுகிறது. இச்சாறுடன் சம பாகம் எலுமிச்சை பழச் சாறு சேர்த்து4 அவுன்ஸ் மூன்று வேளை உணவு நேரத்தில் பருக இளமை மலர்ச்சிபெறும்.

மிகச் சத்துள்ள இந்தச் சாறை எப்போதும் மற்றைய சாறுடன் நல்லது. கலந்துதான் பருக வேண்டும். சிறப்பாக கேரட் சாறுடன் பருகுவது மிகவும் நல்லது.

முட்டைகோஸ் சாறு, காரட் சாறு மற்றும் வெள்ளரி சாறு மூன்றையும் சம அளவு கலந்து பருகினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் ஏற்படும். அத்துடன் திச அணுக்களைப் புதுப்பித்து அவைகளை ஆற்றல் உடையவையாகச் செய்கின்றன.

முட்டைக் கோஸ் சாறை பசலைக் கீரை இரசத்துடன் பருகினால் பயன்பல விளைவிக்கும் என மருத்துவ நூலார் கூறுகின்றனர். பசலைக் கீரை சாறுடன் முட்டைக் கோஸ் சாறை சம அளவு கலந்து பருகுவது மலச்சிக்கலுக்கு ஒரு சிறந்த மருந்தாகும்.

இது உடல் உள் உறுப்புகளைச் சுத்தப்படுத்தப் பயன்படுகிறது. முட்டைக் கோஸ் சாறைப் பயன்படுத்தும் போது மாவுப் பொருளோ, சர்க்கரையோ சேர்க்கக் கூடாது. சர்க்கரைக்குப் பதில் தேனைப் பயன் படுத்துவது சிறந்ததாகும் முட்டைக்கோஸ் கீரை நன்மைகள் cabbage spinach benefits in tamil.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button