கீரை

beetroot keerai benefits in tamil | பீட்ரூட் கீரை பயன்கள்

beetroot keerai benefits in tamil  பீட்ரூட் கீரை பயன்கள் கிழங்கை போலவே பீட்ரூட்டின் இலையையையும் கீரையாக சமையலுக்குப் பயன்படுத்தலாம். கிழங்கு வகைகளிலிருந்து கிடைக்கின்ற கீரைகளில் பீட்ரூட் கீரையும் ஒன்று. பொதுவாக பீட்ரூட் கிழங்கை நாம் உணவில் சேர்த்துக் கொள்கின்ற அளவு பீட்ரூட் கீரையைச் சேர்த்துக் கொள்வதில்லை. ஐரோப்பியர்கள் இக் கீரையை மிக விரும்பி தங்கள் உணவோடு சேர்த்துக் கொள்ளுகின்றனர். பீட்ரூட் கீரையை வீணடிக்காமல் உணவோடு சேர்த்துக் கொள்வது நல்லது.

beetroot keerai benefits in tamil | பீட்ரூட் கீரை பயன்கள்

பீட்ரூட் கீரையில் நரம்புகள் அதிகம் உள்ளது. இந்நரம்புகளில் கரோட்டின் என்னும் உயிர்ச்சத்து மிகுதியாய் உள்ளது. இந்த கரோட்டின் வைட்டமின் ஏ சத்தை அதிகம் சேர்த்து வைக்கின்றன.

எனவே இந்தக் கீரையை வைட்டமின் ஏ – யின் சேமிப்புப் பட்டரை என்றே கூறலாம். தளிர் இலைகளைக் கீரை உணவாகப் பயன்படுத்தலாம்.

இக்கீரையைத் தனியாக பொறியல் செய்யலாம். மேலும் துவரம் பருப்புடன் சேர்த்துக் கூட்டுத் தயாரிக்கலாம். பாசிப் பயறு, தட்டைப் பயறு முதலியவற்றுடன் சேர்த்துக் கூட்டுக்கறிகள் ஆக்கலாம். இவ்வாறு செய்யப் படும் கூட்டு சுவையானதாக இருக்கும்.

பச்சை சலாத்துச் செய்யவும் இக்கீரை உதவுகிறது. அன்றியும் பச்சையாகவே கீரையை உண்ணலாம். அவ்வாறு உண்ணும் போது வைட்டமின் ஏ சிந்தாமல் சிதறாமல் தேவைக்கேற்ற அளவு நம் உடலில் சேர்கிறது.

பீட்ரூட் கீரையை உணவுக்காகப் பறிக்கும் போது கத்தியைப் பயன் படுத்தக் கூடாது. கையால் திருகி பறிப்பதே சிறந்தது. இக்கீரையும் கால்நடைத் தீவனமாகப் பயன்படுகிறது. கோழிகள் இக்கீரையை விரும்பி உண்கின்றன. எனவே இது ஒரு கோழித்தீவனமாகவும் பயன்படுகிறது.

பீட்ரூட் கீரை ஊட்டச்சத்து

பீட்ரூட் கீரை ஒரு சிறந்த உணவாக அமைவதோடு புரதம் மற்றும் தாது உப்புகள், உயிர் சத்துகள் நிறைந்த ஒரு கீரையாகும்.

நூறுகிராம் கீரையில் 51 விழுக்காடு உண்ணத் தகுதி பெற்றது. இவற்றில் 36.4 விழுக்காடு நீரும், 9.4 விழுக்காடு புரதமும், 0.8 விழுக்காடு கொழுப்புச் சத்தும் அமைந்துள்ளன.

தாது உப்புக்கள் 2.2 விழுக்காடும், நார்ச்சத்து 0.7 விழுக்காடும், மாவுச் சத்து 6.5 விழுக்காடும் இக்கீரை கொண்டுள்ளது. வெப்ப ஆற்றலை வழங்குவதில் 43 கலோரியை இக்கீரை தருகிறது.

நூறு கிராம் கீரையில் 350 மில்லிகிராம் சுண்ணாம்புச் சத்தும், 30 மில்லிகிராம் மணிச்சத்தும், 16.2 மில்லிகிராம் இரும்புச் சத்தும் உள்ளன.

உயிர்ச்சத்தான வைட்டமின் ‘A’ நிறைந்த கீரையாதலால் 9770 அனைத்துலக அலகு வைட்டமின் ‘A’ இக்கீரையில் அமைந்துள்ளது. தயாமின் 0.26 மில்லிகிராமும், ரைபோஃபிளேவின் 0.56 மில்லிகிராமும், உள்ளது. நிக்கோடினிக் அமிலம் 3.3 மில்லிகிராமும், வைட்டமின் ‘C’- யும் அமைந்து உள்ளன.

துத்தி இலை பயன்கள்

பீட்ரூட் கீரை மருத்துவம்

பீட்ருட் கீரை சிறுநீரைப் பெருக்கி அதனை மிதமாக வெளியேற்றுகிறது. மலத்தை இளக்கி வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. மலச்சிக்கலைத் தவிர்க்கும் இக்கீரை கல்லீரலுக்கு வலிமை கொடுக்கிறது. உடலில் ஏற்படும் எரிச்சலுக்கு இவ்விலையின் சாறை தடவளரிச்சல் குறையும்.

வைட்டமின் ஏ மிகுதியாக இருப்பதால் கண் சம்பந்தமான நோய்களை இக்கீரை போக்குகிறது. கண்ணுக்குத் தெளிவையும் பார்வையில் கூர்மையையும் ஏற்படுத்துகிறது.

உடல்சூட்டால் ஏற்படும் கண் வீக்கம், அழற்சி முதலியவற்றுக்கு இக்கீரையின் சாறை கண் இமைகளில் பூச குணம் கிடைக்கும். கீரையை உணவாக உட்கொண்டாலுமே இப்பலன்கள் கிடைக்கும் beetroot keerai benefits in tamil.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button