செடி மரம்மூலிகை

ஆவாரம் பூ பயன்கள்

avaram poo benefits in tamil ஆவாரை பயன்கள் ஆவாரம் இலை பயன்கள் ஆவாரை ஒரு அற்புதமானதொரு மூலிகையாகும். இது செடியினத்தைச் சேர்ந்த ஒன்றாகும். ஆவாரைச் செடியில் எல்லாவிதப் பாகங்களுமே மருத்துவத்தில் பயன் அளிப்பதாகும். ஆவாரையின் இலை, வேர், பூ, பட்டை, காய் போன்றவைகள் பற்பல வியாதிகளைக் குணமாக்கு கின்றன. ஆதலின் இதன் மருத்துவ பயன்களைப் பார்ப்போம்.

மஞ்சள் காமாலை நோய்க்கு மாமருந்து

மஞ்சள் காமாலை நோய் கண்டவர்கள் உயிருக்கே ஆபத்துவந்து விடுமோ என்று எண்ணிப் பயப்படுவார்கள் varam poo benefits in tamil ஆவாரை பயன்கள்.

இந்த பயத்தைப் போக்கிட ஆவார இலையின் கொழுந்து உதவுகிறது. ஆவாரம் இலைகளில் கொழுந்தாகப் பார்த்துப் பறித்து வந்து சுத்தப் படுத்திக் கொண்டு சுத்தமான மண்சட்டியில் கொழுந்துகளைப் பரப்பிக் கொண்டே வரவும்.

இந்த கொழுந்துகள் இரண்டு விரல் கனத்துக்கு வந்ததும் அடுக்குவதை நிறுத்திக் கொள்ளவும். அதன்பின்னர் வெள்ளாட்டு ஈரல் துண்டு ஒன்றினை வாங்கி வந்து இதனை தேவையான அளவில் துண்டுகளாக வெட்டி சட்டியில் பரப்பப் பட்டிருக்கும் கொழுந்தின் மேல் பரவலாக வைக்க வேண்டும்.

இப்போது சட்டியை ஒரு மூடியினால் மூடி அப்படியே அடுப்பில் ஏற்றி வேக வைக்க வேண்டும் varam poo benefits in tamil ஆவாரை பயன்கள்.

ஆட்டு ஈரல் வெந்தவுடன் சட்டியைக் கீழே இறக்கி விடவும். இறக்கிய ஈரல் துண்டுகளை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

இது போன்று ஒருநாள் விட்டு ஒருநாள் என்று ஏழு முறை உண்டுவந்தால் மஞ்சள்காமாலை நோய் பூரண குணமாகும்.

நீரிழிவு நோய்க்கு

நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் அருமருந்தாக ஆவாரம் விதை விளங்குகிறது.

ஆகையினால் கீழக்காணும் முறையின்படி தயாரித்து நலம் பெறலாம். ஆவாரம் விதைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துவந்து ஒரு சட்டியில் போட்டு பழைய புளித்த மோரை ஊற்றி விதையை ஊறவிடவும்.

விதைகள் நன்றாக ஊறியதும் அதனை எடுத்துச் சுத்தமான அம்மியில் வைத்து விழுது பதத்திற்கு அரைத்து எடுத்து அரைப்படி மோரில் கலந்து குடித்துவிடவும்.

இதுபோன்று காலை ஒரு வேளையும் மாலை ஒரு வேளையும் சாப்பிடவும். தொடர்ந்து பத்து நாட்கள் சாப்பிட்டாலே நீரிழிவு நோய் குணமாகும் varam poo benefits in tamil ஆவாரை பயன்கள்.

இலவங்கப்பட்டை பயன்கள்

எலும்புருக்கி நோய்க்கு ஆவாரம் இலை பயன்கள்

எலும்புருக்கி நோயினால் அவதிப்படுபவர்களுக்கு ஆவாரம் இலைச் சாறு மாமருந்தாக விளங்குகிறது. இந்த நோயினால் இன்னல் படுகின்றவர்கள் கீழக்காணும் முறையினைக்கையாண்டு பயன் பெறலாம்.

ஆவாரம் இலைகளைத் தேவையான அளவுக்குக் கொண்டுவந்து குளிர்ச்சியான தண்ணீரைத் தெளித்து, கல்வத்திலிட்டு நன்றாக இடித்தும் சாறாகப் பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.

இந்த சாறை அரைலிட்டர் அளவுக்கு எடுத்துக் கொண்டு தினசரி காலை, மாலை என இருவேளை குடித்துவரவும். இதனால் எலும்புருக்கி எனும் நோய் நீங்கும் varam poo benefits in tamil ஆவாரை பயன்கள்.

அரோசிகத்தை அகற்றிட ஆவாரம் வேர்ப்பட்டை அரோசிகம் என்பது நோய்வாய்ப்பட்டுத் தேறிவரும் போது நாக்கு சுவையற்றுப் போவதைக் குறிப்பதாகும்.

இச்சமயம் எவ்வித உணவுகளை உண்டாலும் நாக்கு சுவையறியாது மரத்துப் போகும். இதனை அகற்றிக் கொள்ள ஆவாரம் வேர்ப்பட்டை உதவுகிறது.

அரோசிகம் நோயைக் குணப்படுத்த கீழ்க்காணும் பொருட்களை முதலில் சேகரித்துக் கொள்ளவும். ஆவாரம் வேர் பட்டை 100 கிராம், கடவிறஞ்சிப் பட்டை 100 கிராம், பறங்கிப் பட்டை 10 கிராம், நெல்லிமுள்ளி 10 கிராம், தான்றிக் காய் 10 கிராம், தேற்றான் கொட்டை 10 கிராம். மேலே கண்ட சரக்குகளை நன்றாக இடித்து ஒரு பானையில் போட்டுக் கொள்ளவும். இதில் ஐந்து மரக்கால் அளவு சுத்தமான தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றிக் காய்ச்சவும்.

தண்ணீர் 1 லிட்டர் அளவு சுண்டும்படி காய்ச்சி கீழே இறக்கி ஆறவிட்டு வடிகட்டி சுத்தமான பெரிய கண்ணாடிப் பாத்திரத்தில் பத்திரப்படுத்திக் கொள்ளவும் varam poo benefits in tamil ஆவாரை பயன்கள்.

இந்தக் கஷாயத்தை எடுத்து தேவைப்படும் போதெல்லாம் தண்ணீர் அருந்துவது போல அருந்தவும். இதனால் எவ்வகைப்பட்ட அரோசிகமும் விலகி நன்கு சுவை அறியமுடியும்.

ஆவாரம் பூ பயன்கள் (avaram poo benefits in tamil)

avaram poo benefits in tamil ஆவாரை பயன்கள்

ஆவாரம் பூ கீழ்க்காணும் நோய்களைக் குணமாக்குவதினால் இதன் பயன் அறிந்து நிவாரணம் பெறலாம். சொப்பன ஸ்கலிதம், ஆண்குறி எரிச்சல் ஆகிய குறைபாடுகள் இருந்தால் ஆவாரம் பூவை மணப்பாகு செய்து சாப்பிட்டால் நிவர்த்தியாகும்.

உடலில் நமைச்சல் இருந்து தொல்லைகொடுத்தால் ஆவாரம் பூவுடன் பச்சைப் பயறு சேர்த்து அம்மியில் வைத்து அரைத்து உடலில் தேய்த்துக் குளித்தால் குணமாகும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருந்தால் இதன் பிசின் 5 கிராம் இருக்காது.

முதல் 8 கிராம் வரை நீரில் கலந்து குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல் பொதுவாக நீரிழிவுக்கு ஆவாரம் பூ நல்ல பலனைக் கொடுக்கிறது avaram poo benefits in tamil ஆவாரை பயன்கள்.

நீரிழிவுக்கு ஆவாரம் பூ சாறுடன் ஆவாரம் பட்டை, கொன்றைப் பட்டை நாவல்பட்டை, கடல்நுரை, கோஷ்டம் ஆகியவற்றை இடித்துப் பிழிந்து ஆவாரம் பூ சேர்த்துக் காய்ச்சி வடித்துக் கொள்ள வேண்டும்.

இதனை வேளைக்கு ஓர் அவுன்ஸ் வீதம் ஒரு நாளைக்கு இரண்ட வேளைகள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் நன்கு குணமாவதை உணரலாம் ஆவாரம் பூ அழகு குறிப்புகள்.

சிறுநீரில் இரத்தம் ஆவாரம் பூ பயன்கள்

சிறுநீர் கழிக்கும் போது கூடவே இரத்தமும் சேர்ந்து வந்தால் உடனடியாக சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.

ஆவாரை 100 கிராம், நன்னாரி வேர் 100 கிராம் ஆகிய இரண்டையும் முதல்நாள் இரவு அம்மியில் அரைத்தெடுத்து 3 லிட்டர் தண்ணீர் விட்டு அரைலிட்டராக சுண்டக் காய்ச்சி இறக்கிக்கொள்ளவும்.

மறுநாள் காலையில் வடிகட்டி எடுத்துக் கொண்டு சுமார் 30 மில்லி அளவு வீதம் தினசரி மூன்று வேளை குடிக்கவும். ஒரு வாரத்தில் சிறுநீரில் இரத்தம் வருவது நின்று விடும். உணவில் அதிக காரம் இல்லாமலும் உப்பு சேர்க்காமலும் உட்கொள்ள வேண்டும் avaram poo benefits in tamil ஆவாரை பயன்கள் ஆவாரம் இலை பயன்கள்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button