நாட்டு மருந்து

அதிமதுரம் பயன்கள்

அதிமதுரம் பயன்கள் athimathuram benefits in tamil அதிமதுரம் இருமலுக்கு அதிமதுரம், சுக்கு, சிற்றரத்தை, பேரிச்சங்காயின் சதை இவற்றில் வகைக்கு 10 கிராம் எடை எடுத்து, பொடி செய்து, ஆறு பங்கு வைத்து மடித்து வைத்துக் கொள்ளவும்.

ஆழாக்குப் பாலை ஒரு பாத்திரத்தில் விட்டு, இந்தத் தூளில் ஒரு பங்கை எடுத்து ஒரு துணியில் சிறிய மூட்டை போலக் கட்டி இந்தப் பாலில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து, அந்தப் பாலை இறக்கி இளஞ்சூடாக இருக்கும் பொழுது கற்கண்டு பொடித்துப் போட்டுக் கலக்கிக் குடிக்க வேண்டும். இந்த விதமாகக் காலை, மாலை மூன்று நாள் சாப்பிட இருமல் குணமாகும்.

Table of Contents

அதிமதுரம் பயன்கள் – Athimathuram benefits in tamil

அதிமதுரம் பயன்கள் athimathuram benefits in tamil

கண் சம்பந்தமான வியாதிகள் குணமாக

கண் சம்பந்தமான கோளாறுகள் குணமாக.

அதிமதுரம், கிராம்பு, கஸ்தூரி மஞ்சள், விளாமிச்சை வேர், கோடைம், எலக்காய், நெல்லிமுற்றி இவைகளைப் பொடி செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு, ஆழாக்கு நெய் விட்டு மருந்து சிவக்கும் வரைக் காய்ச்சி இறக்கி, வடிகட்டி வைத்துக் கொண்டு, காலை, மாலை தேக்கரண்டியளவு வீதம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.

இலவங்கப்பட்டை பயன்கள்

வெட்டை நோய் குணமாக

அதிமதுரம், உரித்த பூசணி விதை, பொன்னாங்கண்ணி வேர், வெள்ளரி விதை உரித்த பருப்பு இவற்றில் வகைக்கு 10 கிராம் எடை வீதம் எடுத்து, மை போல அரைத்து வைத்துக் கொண்டு, வாணலியை அடுப்பில் வைத்து இரண்டு ஆழாக்குப் பசு நெய்யை விட்டு, காய்ந்து வரும் சமயம் இந்த மருந்தை ஆழாக்குப் பசுவின் பாலில் போட்டுக் கரைத்து, இதையும் நெய்யில் விடவும், நெய் நன்றாகக் கொதித்து வரும் சமயம் இறக்கி, மருந்தை வடிகட்டி, சீசாவில் விட்டு வைத்துக் கொண்டு தினசரி காலையில் மட்டும் தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் வெட்டை நோய் குணமாகும்.

கூந்தல் வளர அதிமதுரம் விதை

கூந்தல் வளர

அதிமதுரம், கோஷ்டம், சீரகம், கார்போக அரிசி வகைக்கு கிராம் எடை எடுத்து அரைத்து இரண்டாழாக்குத் தேங்காயெண்ணெயுடன் கலந்து வாணலியில் விட்டுக் காய்ச்சி மருந்து சிவந்தவுடன் இறக்கி, ஆறவிட்டு வடிகட்டி வைத்துக் கொண்டு, இந்த எண்ணெயைத் தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் வளரும் தலைக்குத் தேய்த்து தலை முழுகியும் வரலாம் அதிமதுரம் பயன்கள் athimathuram benefits in tamil.

அதிமதுரம் பொருள் 

அதிமதுரத்திற்கு  அதிங்கம், மதுங்கம்,ஆட்டி ஆகிய வேறு பெயர்களும் உண்டு. இனிப்பு சுவை அதிகம் இருப்பதால் ‘அதிமதுரம்’, ‘மது’கம் போன்ற பெயர்களும் உண்டு.

இதற்கு ! ‘இனிப்பு வேர்’  என்பதை குறிக்கும் விதமாக , ‘லிகோரைஸ்’ (Liquorice) என்னும் பெயர் அதன்  வேருக்கு உண்டு .

அதிமதுரம் குழந்தைகளுக்கு 

ஒரு வயதிற்கு மேல் உள்ள  குழந்தைகளுக்கு சளி,இருமல் தொல்லை வராமல் அதிமதுரம் பயன்படுத்துவதன் மூலம் கட்டுக்குள் வைக்கலாம்.    

அதிமதுரம் பொடி கலந்த நீரை குழந்தைகளுக்கு அடிக்கடி தருவது நல்ல பலன் தரும். நியாபக சக்தியை அதிகரிக்கவும், உடல் வளர்ச்சிக்கும் பயனுள்ளதாய் இந்த மூலிகை இருக்கும்.

அதிமதுரத்தின் பயன்கள் – athimathuram benefits in tamil

அதிமதுரம் தூள்  கலந்த நீரை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் பருகி வந்தால் மூட்டு வலிகள் நீக்கும்.

 1. உடலின் வாதத்தன்மை அதிகரிப்பை கட்டுக்குள்  கொண்டு வரும்.
 2. சிறுநீரகங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. 
 3. அதிமதுரத்தின் போடி சளி மற்றும் இருமல் போன்றவற்றை நீக்கும்.

ஆண்மை குறைவை நீக்க 

அதிமதுரம்  தூள் கலந்த நீரை தினமும் காலை மாலை என இரு  வேலை  ஆண்கள் எடுத்துக்கொள்வதன் மூலம் ஆண்மை குறைவை தடுக்கலாம்.

இந்த அதிமதுரத்தை ஊற வைத்து எடுத்துக் கொள்ளலாம் .

ஆண்களுக்கு அதிமதுரம் 

ஆண்களுக்கு ஏற்படும் இளநரை மற்றும் ஆஸ்துமா போன்ற சிக்கல்களையும் எளிதில் சரி செய்கிறது .

மூட்டு வலி நீங்க 

அதிமதுரம் தூள் ஊற வைத்து பருகி வருவதால் மூட்டு வலி இருக்காது.

இருமல் நிவாரணியாக அதிமதுரம் 

அதிமதுரம்  இருமல் நீக்கி மருந்தாக  செயல்படுகிறது .இதனால் இருமலின் அறிகுறி முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. வறண்ட தொண்டையை பாதுகாக்கவும் உதவுகிறது .

சுக பிரசவத்திற்கு அதிமதுரம் 

அதிமதுரம், தேவதாரம்  இவைகள் வகைக்கு 35 கிராம் போடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு  நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

தேனுடன் அதிமதுரம்

அதிமதுர சூரணம் தயாரித்து வைத்துக் கொண்டு 1-2 கிராம் அளவு தேனில் குழைத்து, தினமும் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டை கட்டு, இருமல், சளி குணமாகும் .

முகம் பொலிவு பெற 

அதிமதுரம் இயற்கையாகவே நிறமூட்ட கூடியது .

அதிமதுரத்தை பாலில் கலந்து முகத்திற்கு பேக் போடுவதால் சருமம் பிரகாசமாகும்.

சசூய கதிர்களால் ஏற்படும் முக பாதிப்பை நீக்கும்.

அதிமதுர டீ 

அதிமதுர டீ ஆனது வயிறு சிக்கல்கள், நெஞ்சு எரிச்சல்,மலச்சிக்கல்  போன்றவற்றை நீக்குகிறது.

எளிதில் செரிமாணமாகவும்  உதவுகிறது.

நுரையீரல் சுத்தமாக 

அதிமதுரம் ஒருவர் தொடர்ந்து அதிமதுர டீ  சில நாட்கள் குடித்து வந்தால், நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள் இருந்து விடப்படும்.

அதற்கு 1 டம்ளர் சுடு நீரில் 1 டீஸ்பூன் அதிமதுரம் பொடி சேர்த்து கலந்து, 10 நிமிடம் மூடி வாய்த்த பின் தேன் கலந்து குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால் நுரையீரல் சுத்தமாகும்

அதிகம் சாப்பிடுவதால் வரும் விளைவுகள் 

அதிமதுரமானது நல்ல மருந்தாக இருந்தாலும் அதை அதிகம் எடுப்பது நல்லதல்ல.

அதிகம் எடுத்துக் கொண்டால் உயர் இரத்த அழுத்தம், வீக்கம், சோம்பல் மற்றும் இதய செயலிழப்பு போன்றவை  நேரிடும்.

கருப்பு அதிமதுரம் 

2 வாரம் தொடர்ந்து தினமும் 2 அவுன்ஸ் அதிமதுரம் சாப்பிட்டால் அது இதய தாள பிரச்சனைகள் நேரிடலாம்.

அதிமதுரத்தினால் ஏற்படும் ஆபத்து 

இது உயிருக்கு ஆபத்தானது அடிக்கடி குடல், சிறுநீரக இழப்பு,வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை தரக்கூடியதாகும்.

ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு

அதிமதுரம் ரத்த அழுத்தத்தை உண்டாக்கும்.  ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதிமதுரம் எடுத்துக்கொள்ளலாம்.

கர்ப்பிணி பெண்களுக்கு அதிமதுரம் 

கர்ப்பிணி பெண்கள் அதிமதுரம் அதிகம் எடுத்துக்கொள்வது  வளர்வதில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எவ்வளவு பாதுகாப்பானது 

40 வயது மேற்பட்டவர்கள் உயர் ரத்த அழுத்தம் மாற்றட்டும் இதய பிரச்சனைகள் உள்ளவர்கள் 57  கிராமுக்கு  அதிகமாக அதிமதுரத்தை எடுத்துக் கொள்வது மிகவும் ஆபத்தானது.

சருமத்திற்கு வெள்ளை அதிமதுரம் பொடி 

இந்த வெள்ளை அதிமதுர பொடியானது  சருமத்திற்கு இயற்கை அழகை தரக்கூடியது. 

ஒரு டேபிள் டி ஸ்பூன் வெள்ளை அதிமதுரம் பொடி உடன்  மஞ்சள் பொடி, அரிசி மாவு மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவினால் இயற்கை பொலிவை தரும்.

அதிமதுர வேர்கள் 

அதிமதுர வேர்களும் மிகவும் பயனுள்ளதாகும். இதன் வேர்கள் பற்கள் மற்றும் சுவாசத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

அதிமதுரம் தலைமுடிக்கு 

அதிமதுரம் பொடி  தலை முடி வளர்வதற்கு உதவுகிறது. 1 டீஸ்பூன் முல்தானி பொடியுடன் அதிமதுரம் பொடி சேர்த்து உபயோகிக்க வேண்டும்.

இது புஞ்சை, காளான், ஆக்சிஜனேற்றம் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு   செயலியாக பயன்படுகிறது.

அதிமதுர செடி எப்படி இருக்கும்

 1 ஆதி கொண்டு ஊதா நிற பூவுடன் காய் 3 சென்டிமென்டரில்  சிறு முற்களுடன் இருக்கும்.

அதன் வேர்கள் சிறிது பெரிதாக உட்புறம் மஞ்சள் நிறம் மற்றும் வெளிப்புறம் பழுப்பு நிறமுடையதாக காணப்படும்.

அதிமதுர மருத்துவ பயன்கள் 

பித்தம்,வீக்கம், வாதம், இரத்த சோகை,  வாந்தி மற்றும் நாவறட்சி சரிசெய்யும்.

அதிமதுர வேர்கள் பயன்கள் 

அதிமதுர வேர்கள் இனிப்பு சுவையுடன் குளிர்ச்சியாக  இருக்கும்.அதன் வேர்கள்  புண், தாகம், அசதி, கண் நோய்களை குணப்படுத்தும்.

அதிமதுர சூரணம் பெண்களுக்கு 

பெண்களுக்கு அதிமதுர சூரணம் மலட்டுத்தன்மை, மலச்சிக்கல் மற்றும் தாய்ப்பால் சுரக்கவும் பெரிதும் உதவும்.

அதிமதுர சூரணம் செய்முறை 

1 கிராம் அதிமதுரம் சூரணமுடன் பால் கலந்து சிறிதளவு  இனிப்பு சேர்த்து சாப்பிட்டால் தாய்ப்பால்  பெருக்க மிகவும் உதவும்.

தாது விருத்திக்கு அதிமதுரம் 

அதிமதுரம் பொடியில்  பால் கலக்கி கொஞ்சம் தேன் சேர்த்து சாப்பிட்டு வர தாது விருத்தியடையும்.

அதிமதுரத்தின் அழகு குறிப்புகள் மற்றும் செய்முறை 

 • விதைகளை நீக்கிய 4 எலுமிச்சை துண்டுகள் 
 • 4 துண்டு தக்காளி 
 • 4-5 துண்டுகள் வெள்ளரிக்காய் 
 • 1 டேபிள் ஸ்பூன் தயிர் 
 • 2 டேபிள் ஸ்பூன் அதிமதுரம் பொடி 

இவைகளை எடுத்துக் கொள்ளவும். தக்காளி, எலுமிச்சை, வெள்ளரிக்காய்  அதிமதுரம் பொடி உடன் தயிர் வைகளின் மிக்ஸியில் போட்டு மிதமான பதத்திற்கு வரும் வரை அரைத்து கொள்ள வேண்டும்.

உணர் தன்மையான முகம் கொண்டவர்கள் முகத்தில் போட்டால் அது எரிச்சல் தரக்கூடியதாக அமையும்.

இந்த கலவையை  10 முதல் 15 நிமிடங்கள் காய் கால் முகங்களுக்கும் போடலாம்.

தினமும் இந்த பேக் ஒரு மாதம் போடுவதன் மூலம் நல்லதொரு முக பொலிவு பெறலாம்.

அதிமதுரம் விலை 

அதிமதுரம் சிறந்த மூலிகையாகும். ஆனால் அதிமதுர பொடியின்  விலை மிக குறைவு தான் மூலிகை கடைகளில் எளிதாக கிடைக்க கூடியதாகும். 

அதிமதுர கஷாயம் செய்முறை 

பணக்கறுபட்டி, எலுமிச்சை, அதிமதுரம் பொடி,சுக்குப் பொடியுடன் கொஞ்சம் உப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.

தண்ணீரை கொதிக்க வைத்து அதில் 1 டீஸ்பூன்  ஸ்பூன் அதிமதுரம் பொடி  சேர்த்து சுக்கு பொடி சேர்க்க வேண்டும். நன்கு கொதித்த பிறகு சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்க்கவும்.

இந்த கஷாயத்தை தினமும் 1 நேரம் குடிக்கலாம். சளி, இருமல் தொல்லைகளுக்கு இந்த கஷாயம் எளிதில் தீர்வு தரும். 

அதிமதுரத்தின் பக்க விளைவுகள் 

அதிமதுரம் தீமைகள் : அதிமதுரத்தில் இருக்கும் கிளைசிரைசின்  தலைவலியை தூண்டும் என்று ஆய்வில் சொல்லப்படுகிறது.

அதிமதுரம் சாற்றின்  அதிகப்படியான நுகர்வு பெருமூளை தனிமங்களின் சுரக்கும் மற்றும்  வழிவகுக்கும், இது பெரும்பாலும் மிக மோசமான தலைவலி  உண்டாகும் .

பொதுவான பக்க விளைவுகள்

 • இதயசெயலிழப்பு 
 • பாலியல் ஆர்வம் குறைவது.
 • விறைப்புத்தன்மை குறைபாடு
 • மாதவிடாய் இன்மை 
 • நுரையீரலில் அதிகப்படியான திரவம் வெளிவருவது 
 • திரவம் மற்றும் சோடியம் தக்கவைத்தல்
 • தலைவலி 
 • ரத்த அழுத்தம் 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button