நாட்டு மருந்து

அஸ்வகந்தா மருத்துவ பயன்கள்

அஸ்வகந்தா மருத்துவ பயன்கள் ashwagandha benefits in tamil அஸ்வகந்தா இது ஒரு செடியினம் இந்தச் செடி தமிழ்நாட்டில் மலைச்சாரல்களில் காணப்படும். இதனுடைய காய் சுண்டைக்காய் போன்று கொத்துக் கொத்தாக காய்க்கும். காய்சில நாட்களில் சிவப்பு நிறத்தில் பழமாகிவிடும்.

அஸ்வகந்தா செடியின் காய், பழம், இலை, கிழங்கு, வேர்ப்பகுதி ஆகியவை அனைத்தும் மருத்துவத்திற்குப் பயன்படுகிறது.

இதை அமுக்கிராக் கிழங்கு, அமுக்குரவு, இருளிச்செவி என்ற வேறு பெயர்களாலும் அழைப்பார்கள். இதன் இலைகளும், துளிர்களும் தாய்ப்பால் விருத்திக்கு நல்ல பலனைத் தருகிறது.

அஸ்வகந்தா மருத்துவ பயன்கள் (ashwagandha benefits in tamil)

அஸ்வகந்தா மருத்துவ பயன்கள் ashwagandha benefits in tamil ashwagandha in tamil ashwagandha lehyam benefits in tamil அஸ்வகந்தா சாப்பிடும் முறை

தாய்ப்பால் விருத்திக்கு

அஸ்வகந்தா சாப்பிடும் முறை பிறந்த குழந்தைக்குப் தாய்ப்பால் சரியாகக் கிடைக்கவில்லை என்றால் இதனுடைய இலைத் துளிர்களைப் பறித்து வந்து எண்ணெய்யில் வதக்கி துவையல் செய்த சாப்பிடலாம்.

அல்லது இதன் இலைகளைப் பறிந்துவந்து சட்டியில் போட்டு அளவாகத் தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி பாதியாகச் சுண்டியதும் குடித்தால் குழந்தைக்குத் தேவையான தாய்ப்பால் சுரக்கும். அத்துடன் பிரசவமான தாயின் உடலும் தேறும்.

அண்மை குறைவு நீங்க

ஆண்மைக் குறைவுக்கு அற்புதமான நிவாரணியாக இதனைப் பயன்படுத்தலாம். அமுக்கிராக் கிழங்கைத் தூளாக்கி அந்தத் தூளில் கால் ஸ்பூன் எடுத்து நெய்யும் தேனும் விட்டுக் குழம்புப் பதத்திற்குக் குழைத்துத் தினசரி மாலை வேளைகளில் மட்டும் சாப்பிட்டுவந்தால் ஆண்மைக் குறைவு, தாது பலஹீனம் ஆகியவைகள் நீங்கிவிடும்.

ashwagandha lehyam benefits in tamil

ashwagandha lehyam benefits in tamil

ashwagandha lehyam benefits in tamil தாதுவிருத்திக்கு அஸ்வகந்தா லேகியம் கைகண்ட பலனை அளிக்கும். ஆதலின் நீங்கள் இந்த லேகியத்தைத் தயாரித்துப் பயன்படுத்தி நல்லபலனைப் பெறலாம்.

முதலில் இரண்டு லிட்டர் அளவுக்கு நெல்லிக்காய் சாறை தயார் செய்து கொண்டு அதில் அஸ்கெந்தி 10 கிராம், அதிமதுரம் 10 கிராம், சுக்கு 10 கிராம் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளவும்.

அத்துடன் திப்பிலி 20 கிராம், உலர்ந்த திராட்சைப் பழம் 20 கிராம் சேர்த்துக் காய்ச்சி லேகியப் பதமாய் நெய் சேர்த்து ஆறவைத்துச் சுத்தமான பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.

இந்த லேகியத்தில் தினசரி சுண்டைக்காய் அளவு எடுத்துச் சாப்பிட்டுப் பால் குடிக்கவும். இது போல் தினசரி சாப்பிட்டுவந்தால் தாதுவிருத்தியாகும். சந்தோஷத்தைக் கொடுக்கும்.

அதிமதுரம் பயன்கள்

கர்ப்பிணிப் பெண்களின் பலஹீனம் போக்க

அரைக்கீரை பயன்கள் arai keerai benefits in tamil

கர்ப்பமடைந்த சில பெண்கள் பலஹீனமாக இருப்பார்கள். இதனால் பிரசவத்திலும் கஷ்டம் ஏற்படுவதுண்டு. இதனைப்போக்ககஷாயமுறை.

40 கிராம் அமுக்கிராக் கிழங்கை கொண்டுவந்து நன்றாக நசுக்கி அதில் நாலு அவுன்ஸ் தண்ணீர் விட்டுக் காய்ச்சி 2 அவுன்ஸாக சுண்டியதும் கீழே இறக்கி வடிகட்டி அதில் காலை, மாலை ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிடவும்.

இதுபோன்று இந்தக் கஷாயத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் தவிர சுக பிரசவமும் ஏற்படும்.

பெண்களின் மலட்டுத்தன்மை நீங்க

பெண்களுக்குப் பெருந்தொல்லையாக இருப்பது பெரும்பாடு, வெள்ளை போன்ற நோய்களாகும். இதனைப் போக்கிக் கொள்ள மருத்துவம்.

அஸ்வகந்தா சாப்பிடும் முறை

அமுக்கிராக் கிழங்கைத் தூள் செய்து சூரணமாக்கி வைத்துக் கொண்டு அதில் கால் ஸ்பூன் தூள் எடுத்து வெல்லம் 5 கிராம் சேர்த்துப் பசும் பாலில் கலந்து காலை, மாலை தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

சில நாட்களில் பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாடு போன்ற நோய்கள் குணமாகும்.

விக்கங்கள் குறைய

வெள்ளை உடம்பில் எங்காவது வீக்கம் உண்டானால் அமுக்கிராக் கிழங்கை அரைத்துப் பற்றுப் போட்டுவந்தால் இரண்டு மூன்று நாட்களில் வீக்கங்கள் குறைந்து குணமாகிவிடும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button