மூலிகைசெடி மரம்

அரச மரம் பயன்கள்

arasa maram benefits in tamil sacred fig அரச மரம் பயன்கள் அரசு மர இனத்தைச் சேர்ந்தது. பொதுவாக கோவில்களில் வளர்ப்ப தினால் இது தெய்வீகத்தன்மை கொண்டது என்று கூறலாம். இதற்கு திருமரம், அசுவத்தம், கனவம், சராசனம், பிப்பிலம் என பல பெயர்கள் உண்டு. அரச மரத்தைச் சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார் என்பது பழமொழி.

பிள்ளைச் செல்வம் இல்லாத பெண்மணிகள் கோவிலுள்ள அரச மரத்தைச் சுற்றுவதை இன்றும் பார்க்கலாம். அரசமரம் வெளியிடும் காற்று மிகவும் பலன் அளிக்கக் கூடியது.

குறிப்பாக கருப்பையிலுள்ள குறைபாடுகளை நீக்க வல்லது. ஆகவேதான் பெண்கள் பிள்ளைவரம் வேண்டி அரச மரத்தைச் சுற்றி வருகின்றனர்.

இதன் இலை, பட்டை, விதை, பால் ஆகியன எல்லம் மருத்துவக் குணங்கள் உடையன arasa maram benefits in tamil sacred fig அரச மரம் பயன்கள்.

குழந்தையில்லாத பெண்களுக்கு

குழந்தைக்கு டானிக்

குழந்தை இல்லாத பெண்கள் அரச மரத்தில் வளரும் புல்லுருவியின் இலையை அரைத்து எலுமிச்சம் பழம் அளவு எடுத்து வீட்டு விலக்கு உண்டாகும் மூன்று நாட்களும் சாப்பிட்டு வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். புல்லுருவி என்பது அரச மரத்தின் மீது வேறு ஏதாவது மரமோ, செடியோ முளைத்திருப்பதாகும். அதில் எது வளர்ந்திருந்தாலும் அதன் இலையைக் கொண்டு வந்து பயன்படுத்த வேண்டும்.

கொன்றை மரம் பயன்கள்

அரச மரம் பயன்கள்

arasa maram benefits in tamil sacred fig அரச மரம் பயன்கள்

 1. அரசுக் கட்டைக் கஷாயத்தில் தேன் கலந்து உட்கொண்டால் இரத்த பித்தம்தணியும்.
 2. அரச இலைகளை விரணங்களின் மேல் வைத்துக் கட்டினால் விரைவில் நோய் ஆறும்.
 3. மருதம்பட்டை, அத்திப்பட்டை, அரசின் பட்டை இவற்றின் தூளை விரணங்களின் மேல் தூவினால் விரைவில் தோல் மூடிக்கொண்டு விரணங்கள் ஆறும்.
 4. அரசின் கட்டைக் கஷாயத்தைப் பருகி வந்தால் நீலமேகம் (நீல நிறமாக உடலில் பரவும் மேகநோய்) தணியும்.
 5. அரசு, புரசு, மருதம் இவற்றின் பட்டைகளை விரணங்களின் மேல் வைத்துக் கட்டினால் அவை விரைவில் ஆறும்.
 6. அரசு, வில்வம், எருக்கண், ஆமணக்கு இவற்றின் இலைகளை நல்லெண்ணெய், இந்துப்பு இவற்றுடன் பக்குவம் செய்து சுரசம் செய்து இளஞ்சூடான நிலையில் காதில் விட்டால் காதுநோய்கள் தணியும்.
 7. ஆல், அத்தி, அரசு இவற்றின் பட்டைகளை மைய அரைத்து மிகுதியாக நெய் கலந்து விரணத்தால் தோன்றி வீக்கத்தின் மேல் பூசினால் நோய் தணியும்.
 8. அரச மரத்தின் கிளைகளில் தோன்றும் “பதனிகா” (காளான்களைப் போல தோன்றும் சிறுகொடி ) என்பதைச் சேர்த்துக் காய்ச்சிய பாலை உட்கொண்டால் கருநிற்கும்.
 9. உலர்ந்த அரசப்பட்டையை எரித்த சாம்பலை நீரில் கரைத்துச் சிறிது நேரம் வைத்திருக்கவும். பிறகு தெளிவை வடிகட்டி உட்கொண்டால் கடுமையான வாந்திநிற்கும்.
 10. உலர்ந்த அரசின் பட்டையை மைய தூளாக்கித் தீப்புண்களின் மேல் தூவினால் அவை விரைவில் ஆறும்.
 11. அரசின் வேர், பட்டை, விழுது. பழம் இவற்றைச் சேர்த்துக் காய்ச்சிய பாலில் தேனும், சர்க்கரையும் கலந்து பருகினால் ஆண்மை மிகும் arasa maram benefits in tamil sacred fig அரச மரம் பயன்கள்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button