பழங்கள்

ஆப்பிள் பழத்தின் நன்மைகள்

apple benefits in tamil ஆப்பிள் பழத்தின் நன்மைகள் ஆப்பிள் ஒரு குளிர்ப்பிரதேச பழம் ஆகும். பழுத்த ஆப்பிள் வெளிப்புறம் பெரும்பாலும் சிவப்பாகவும், சில ரகங்களில் இளம்பச்சை அல்லது மஞ்சளாகவும் காணப்படும். ஆப்பிள் பழத்தின் தோல் மெல்லியதாயும், பழச்சதை உறுதியாகவும் இருக்கும்.

சதையின் உள்ளே சிறு சிறு விதைகள் இருக்கும். மத்திய ஆசியாவில்தான் ஆப்பிள் முதலில் பயிர் செய்யப்பட்டது. தற்போது ஆப்பிள் உலகின் எல்லாவிதமான குளிர்ப்பகுதிகளிலும் வளர்க்கப் படுகிறது. ஆப்பிள் மற்ற பழங்களைப் போலப் பெரும்பாலும் சமைக்கப்படாமலேயே சாப்பிட்டாலும் அது பல பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரையே அணுக வேண்டிய அவசியமில்லை என சொல்கிறது ஆங்கில பழமொழி. ஆனால் ஆப்பிள் ஒரு அழகுக்கலை நிபுணரையே உள்ளே அடக்கியிருக்கிறது என்பதுதான் தற்போதைய அழகுமொழி.

ஆப்பிள் பழத்தின் நன்மைகள் – apple benefits in tamil

வாய் நுண்கிருமிகள் நீங்கும்

ஆப்பிளில் உள்ள மாலிக் அமிலம் மலச்சிக்கலை நீக்குகிறது. குடல்பாதையில் உள்ள நுண்கிருமிகளைக் கொல்கிறது. ஆப்பிளை நன்கு மென்று சாப்பிட்டால் வாய் மற்றும் தொண்டைப்பகுதியில் நுண்கிருமிகள் நீங்குகின்றன.

வயதானவர்களுக்கு

வயதானவர்களுக்கு ஆப்பிளின் மேற்புறத் தோலானது செரிக்கக் கடினமாக இருக்கும். அதனால் அவர்கள் அதன் மேற்புறத் தோலை நீக்கி உட்கொள்வது நல்லது.

சர்க்கரை நோயாளிகள்

நீர்ச்சத்து அதிகம் கொண்ட ஆப்பிள் பழத்தை கோடைக்காலத்தில் அதிகம் உட்கொள்ளலாம். இதில் மாவுச்சத்தும் நிறைந்திருப்பதால் சர்க்கரை நோயாளிகள் தங்கள் சரிவிகித சம உணவுக்கு ஏற்றவாறு மருத்துவரின் ஆலோசனையின்படி ஒன்று அல்லது இரண்டு கீற்றுகளாக ஆப்பிளை எடுத்துக் கொள்ளலாம்.

ஆப்பிள் பழத்தின் நன்மைகள் apple benefits in tamil

ஆப்பிள் பழத்தின் நன்மைகள் apple benefits in tamil

  • ஆப்பிள் பழம் விலை உயர்ந்திருந்தாலும் அதனுள் அடங்கியுள்ள சத்துக்களும் அதிகம்.
  • இதனை சீசன் காலங்களில் விலை சற்றுக் குறைவு என்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.
  • ஆப்பிள் பழத்தில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, உயிர்ச்சத்து என்று ஏராளமான சத்துகள் இதில் அடங்கியுள்ளன.
  • இதன் தோலை சீவாமல் அப்படியே சாப்பிட வேண்டும். இதனால் இதன் முழுசத்துகளையும் பெறலாம்.
  • வரட்டு இருமலால் வேதனைப்பட்டால் ஆப்பிள் பழத்தைக் காலையில் ஒரு பழமும், மாலையில் ஒரு பழமும் கடித்துத் தின்றால் இருமல் சரியாகும்.
  • ஆப்பிள் பழத்தை ஆவியில் வேகவைத்து சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறுகள் அகன்றுவிடும்.
  • தினசரி ஒரு ஆப்பிள் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் அழகோடும் ஆரோக்கியத்தோடும் இருக்கும்.
  • ஆப்பிள் பழத்தையும், பாதாம் பருப்பயுைம் நன்றாக அரைத்து, சுத்தமான பசுவின் பாலைக் காய்ச்சி அதில் கலந்து சாப்பிட்டால் ஞாபக மறதியைப் போக்கும், மூளை வளர்ச்சி பெறும்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Back to top button