கீரை

அகத்திக்கீரை நன்மைகள் தீமைகள்

Table of Contents

அகத்திக்கீரை

agathi keerai benefits in tamil அகத்திக்கீரை நன்மைகள் மருத்துவக் குணம் மிகுந்தது. அது நமக்குப் பல வகையில் நன்மை செய்கிறது என்பதை உணர்ந்து மாதத்தில் ஒரு நாள் அமாவாசை அன்றும், விசேஷ நாட்களிலும் அகத்திக்கீரைசமையல் செய்து உணவுடன் சேர்த்துக் கொள்வார்கள்

எந்த ஊரிலும் கீரைக் கடைகளில் சுலபமாகக் கிடைக்கக்கூடியது அகத்திக் கீரை. அகத்திக்கீரைவருட முழுவதும் கிடைக்கும்.

வெற்றிலைத் தோட்டத்திற்கு உறுதுணையாக உள்ளது அகத்திமரமேயாகும். ஆகையால் வெற்றிலைத் தோட்டம் உள்ள பகுதிகளில் அகத்திக்கீரை ஏராளமாகக் கிடைக்கும். சிலர் அகத்தி மரத்தை தனியே வைத்தும் வளர்க்கின்றனர் agathi keerai benefits in tamil அகத்திக்கீரை நன்மைகள்.

அகத்திக்கீரையில் வைட்டமின் உயிர்ச்சத்தும், சுண்ணாம்புச் சத்தும் ஏராளமாக இருப்பதால் இது உடலுக்குப் பலம் தரக்கூடியதாக இருக்கிறது .

அகத்தி அகத்திக் கீரை என்பது நமக்கெல்லாம் பரிச்சயமான ஒரு மூலிகை, அகத்தி ஒரு சிறிய மர வகையைச் சேர்ந்ததாகும். இது சுமார் 10 அடிகள் முதல் 12 அடிகள் வரை நீண்டு வளரக் கூடியதாகும்.

அகத்திக் கீரையைக் கட்டாயம் வாரம் ஒருமுறை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஆனால் அகத்திக் கீரையை வீடுகளில் அமாவாசை அன்று கண்டிப்பாகச் சேர்த்துக்கொள்வார்கள்.

அகத்திக் கீரையில் மிகுந்த கால்சியம், பாஸ்பரஸ் இருப்பதினால் எலும்பு வளர்ச்சிக்கு அகத்திக் கீரை மிகவும் நல்லது.

இந்தக் கீரையை அளவோடுதான் சாப்பிட வேண்டும். உடல் நலத்திற்கு உகந்தது என்று எண்ணி அதிகமாகச் சாப்பிட்டால் கழிசல், வாயுத் தொல்லை போன்றவை உண்டாகும்.

தாய்மார்க்கு அதிக பால் சுரக்க அகத்திக் கீரை பயன் தருகிறது. உடல் நலமில்லாமல் மருந்து சாப்பிடுபவர்கள் கண்டிப்பாக அகத்திக் கீரையைச் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அது மருந்தின் வீரிய சக்தியை முறித்துவிடும் ஆற்றலுள்ளது.

100 கிராம் அகத்திக் கீரையில் புரதம் 8 கிராம், கொழுப்பு 2 கிராம், தாதுப் பொருள் 3 கிராம், மாவுச் சத்து 12 கிராம், சுண்ணாம்புச் சத்து 1 மில்லி கிராம், இரும்பு 3 மில்லி கிராம் உள்ளன.

அகத்திக்கீரை நன்மைகள் (agathi keerai benefits in tamil)

எலும்புகளை வலுப்படுத்தும்

அகத்திக்கீரை நன்மைகள் தீமைகள் agathi keerai benefits in tamil

எலும்பு பலம் பெற்று வளரவும், அதன் காரணமாக உடல் வளர்ச்சி பெறவும் சுண்ணாம்புச் சத்து நமது உடலுக்குத் தேவை. அடிக்கடி அகத்திக் கீரையைச் சாப்பிட்டு வந்தால் நமது உடலுக்குத் தேவையான சுண்ணாம்புச் சத்தை அகத்திக் கீரையிலிருந்து பெறலாம்.

சிலர் விரதம் இருக்கும் நாளில் அகத்திக் கீரையைச் சமைத்துச் சாப்பிடுவார்கள். காரணம் அன்று அவர்கள் குறைந்த உணவை உட்கொள்வதால் ஏற்படும் குறைபாட்டை இந்தக் கீரையிலுள்ள சத்து நிறை வேற்றிவிடும்.

நமது ஆகாரத்துடன் நமது உடலுக்குத் தேவையான சுண்ணாம்புச் சத்துக் கிடைக்கவில்லையானால், உண்ட ஆகாரம் சீக்கிரம் சீரணியாது மந்தப்படும்.

போதிய சுண்ணாம்புச் சத்துக் கிடைக்கவில்லை யானால் எலும்புகளின் பலம், வளர்ச்சிக் குறையும். வயதான காலத்தில் சிலருக்கு எலும்புகள் பலமற்று உடைந்து போவதுண்டு agathi keerai benefits in tamil அகத்திக்கீரை நன்மைகள்.

அருகம்புல் சாறு நன்மைகள்

இதை ஆங்கில வைத்திய முறையில் ”ஆஸ்ட்டியோ பெரொஸிஸ்’ என்று கூறப்படுகிறது. ஆகாரத்துடன் அடிக்கடி அகத்திக் கீரையையும் சேர்த்துச் சாப்பிட்டு வருபவர்களுக்கு வயோதிக பருவத்தில் கூட எலும்பு உறுதியாக இருக்கும்.

சில வயோதிக ஆண், பெண்களின் இடுப்பு எலும்பு பலமற்று, முன்பக்கமாக உடல் சாய்ந்த நிலையில் இருக்கும்.

இடுப்பு எலும்பு பின் பக்கமாக வளைந்து நிற்கும். இதை ஆங்கில வைத்திய முறையில் ‘ஆஸ்ட்டியோ மலாசியா” என்று கூறப்படுகிறது. வாழ்நாளில் அகத்திக் கீரையை அதிக அளவில் சாப்பிட்டு வந்தால் இந்த வியாதி ஏற்படாது.

அகத்திக்கீரைவாயுவை உண்டு பண்ணக்கூடயதாக இருந்தாலும், அத்துடன் பெருங்காயம், வெள்ளைப் பூண்டு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால் வாயு அகன்று விடும்.

உடலை சுறுசுறுப்பாக்கும்

மூளை சம்பந்தமான பகுதியில் கோளாறு ஏற்பட்டு புத்தி மிந்தம், சோம்பல், அறிவு தடுமாற்றம், ஞாபகக் குறைவு உள்ளவர்கள் அடிக்கடி அகத்திக் கீரையைச் சாப்பிட்டு வந்தால் இவைகள் பூரணமாகக் குணமாக்கும்.

இடு மருந்து

ஒரு சில கெட்ட பெண்கள் தங்களை அண்டிய கண்களைத் தன் வசப்படுத்திக் கொள்ள இடு மருந்து கொடுத்து விடுவது உண்டு இந்தக் கெட்ட மருந்து ஆண்களின் ஆகாரத்துடன் கொடுக்கப்பட்டுவிடும்.

இந்த மருந்து உள்ளே சென்று விட்டால், அதைச் சாப்பிட்ட ஆண் கொடுக்கப்பட்ட பெண்ணின் மேல் தனிப்பட்ட பாசம் கொள்வான. சதா அவனது மனதில் அவளது ஞாபகம் இருக்குமே தவிர, மனைவி, மக்கள், பெற்றோர் பேரில் ஞாபகமே வராது.

இந்தவிதமான இடுமருந்தினால் பேங்கித் திரிபவாகளுக்கு இந்த அகத்திக்கீரை சஞ்சீவி போல வேலை செய்யும் இவர்கள் உணவுடன் அகத்திக் கோயை அடிக்கடி அதிக அளவில் ருசியாகத் தயாரித்துக் கொடுத்துவந்தால் இந்த இடு மருந்தின் வேகம் குறைந்து பரிப்படியாக பலமற்று தன் சக்தியை இழந்துவிடும். இடு இருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் தன் சுயநிலைக்கு வந்து விடுவார்கள் agathi keerai benefits in tamil அகத்திக்கீரை நன்மைகள் .

சுரைக்காய் நன்மைகள்

மலச்சிக்கல் உடனடி தீர்வு

அகத்திக்கீரை நன்மைகள் தீமைகள் agathi keerai benefits in tamil

சிலருக்கு தினசரி மலம் இறங்குவதில்லை. இரண்டு நான், மூன்று நாளைக்கு ஒரு முறையே மலம் இறங்கும்.

இவர்கள் சுகதேகியாக இருந்தாலும் மலச்சிக்கல் இன்றி தினசரி மலம் சுலபமாகக் கழிய வழிவகை செய்து கொள்ள இதற்கு அகத்திக்கீரைநன்கு பயன்பட்டு வருகிறது.

அடிக்கடி அகத்திக் கீரையை ஆகாரத்துடன் சேர்த்து வந்தால் மலம் இளகலாக வெளியேறும். மலச்சிக்கலே ஏற்படாது.

வயிற்று வலி குணமடைய

அகத்திக்கீரை நன்மைகள் தீமைகள் agathi keerai benefits in tamil

கடுமையான வயிற்று வலியினால் துன்பப்படுபவர்கள் அகத்திக் கீரையைச் சாறு பிழிந்து அதில் தேன் சேர்த்து உண்டால் வயிற்று வலி அகன்றுவிடும்.

இரத்தம் உறைதல் குணமாக

அகத்திக்கீரை நன்மைகள் தீமைகள் agathi keerai benefits in tamil

அடிபட்டு இரத்தம் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தால் அகத்திக் கீரையை அரைத்துக் காயம்பட்ட இடத்தில் வைத்துக் கட்டினால் இரத்தம் நின்று சீழ்பிடிக்காமல் விரைவில் காயம் குணமாகும்.

பித்தம் குறைய

அகத்திக் கீரையைச் சாம்பாரில் சேர்த்து உணவுடன் உண்டால் பித்தம் குறையும், கபம் குறையும், வாதம் மட்டுப்படும்.

நரம்பு புத்துணர்ச்சி

அகத்திக்கீரை நன்மைகள் தீமைகள் agathi keerai benefits in tamil

இந்தக் கீரையை வெங்காயம் சேர்த்துப் பொறியல் செய்து சாப்பிட்டால் குடலுக்கு வலிமை தரும், நரம்பு புத்துணர்வு பெறும்.

உடல் உஷ்ணத்தை குறைக்க

அகத்திக் கீரையை வாரத்திற்கு இரண்டு முறை உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் குறையும், சிறுநீர் தடையின்றி போகும், கண்கள் குளிர்ச்சிபெறும்.

வைட்டமின் ‘A’ உயிர்ச்சத்து

உடல் மெலிந்து இருப்பவர்கள் பலம் பெற்று வாழ வைட்டமின் ‘A’ உயிர்ச்சத்து அவசியம் தேவை. இதை மருந்துகளின் மூலம் பெறலாம். அடுத்தபடியாக கீரை வகைகளில் பெறலாம்.

இந்த வகைக்கு அகத்திக் கீரையை நன்கு பயன்படுத்தலாம். ஒரு அவுன்ஸ் அளவு அகத்திக் கீரையில் 2556 மில்லிகிராம் அளவு வைட்டமின் A உயிர்ச்சத்து இருப்பதிலிருந்தே இதன் சக்தியை அறிந்துக் கொள்ளலாம்.

பல் வளர்ச்சி ஏற்பட சுண்ணாம்புச் சத்தும், வைட்டமின் ‘A’ உயிர்ச்சத்தும் தேவைப்படுகிறது. வளரும் குழந்தைகளுக்கு எலும்பு வளர்ச்சியடைய இந்த உயிர்ச்சத்துக்கள் நிறையத் தேவை.

சிறுவர்களுக்கு அகத்திக் கீரையை நேரிடையாகச் சமைத்துக் கொடுப்பதை விட அகத்திக் கீரையை இடித்துச் சாறு எடுத்து, அந்தச் சாற்றை மற்ற பதார்த்தத்துடன் சேர்த்துச் சமைத்துக் கொடுப்பதால் நல்ல பலனைக் காணலாம்.

உண்ட உணவு ஜீரணிக்க முடியாத நிலையில் இருக்கும் பெரியவர்களுக்கும் கூட அகத்திக் கீரைச் சாற்றைப் பதார்த்தங்களுடன் சேர்த்துச் சமைத்துக் கொடுக்கலாம்.

அகத்திக்கீரையில் உள்ள உயிர்ச்சத்துக்கள்

20 கிராம் அளவு அகத்திக்கீரையில்

  • 2556 மில்லிகிராம் A வைட்டமின் உயிர்ச்சத்தும்,
  • 230 மில்லிகிராம் அளவு சுண்ணாம்புச் சத்தும்,
  • 101 மில்லிகிராம் இரும்புச் சத்தும் உண்டு.
  • இதனுடைய காலரி என்னும் உஷ்ண அளவு .

அகத்திக் கீரையில் புரதம், இரும்பு, சுண்ணாம்பு, உயிர் சத்துக்கள் அடங்கியுள்ளன.

அகத்திக்கீரை பயன்கள்

அகத்திக்கீரை பயன்கள்

அகத்திக் கீரையை தூசி படியாமல் காய வைத்து சறுகு போல் நன்கு காய்ந்ததும் இலைகளைத் உருவி எடுத்து நன்றாக இடித்துத் தூளாக்கி சுத்தமான துணியில் சலித்து ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்தி கொள்ள வேண்டும். அதிகாலையில் எழுந்ததும் நீராகாரத்தில் இரண்டு ஸ்பூன் போட்டு கலக்கிச் சாப்பிட்டுவந்தால் குன்மநோய்கள் அகன்றுவிடும்.

புட்டாலம்மை என்னும் நோய்க்குக் கீழ்க்கண்டவாறு பயன் படுத்தினால் அந்நோய் அகன்றுவிடும்.

அகத்திக் கீரையின் சாறை எடுத்துக் கொள்ள வேண்டும். மெல்லிய வெள்ளைத் துணியை எடுத்து இந்த சாறில் நனைத்து வீங்கியள்ள இடத்தில் துணியைப் பற்றுப் போடவேண்டும்.

ஈரம் உலர்ந்த துணியை எடுத்துவிட்டு மீண்டும் அகத்திக் கரையின் சாற்றில் நனைத்து பற்றுப் போடவேண்டும். இவ்வாறு நான்கு அல்லது ஐந்து முறைகள் பற்றுப் போட்டு பிறகு வெந்நீரால் அந்த இடத்தைத் துடைத்துவிட பெண்டும். இதுபோல் இரண்டு நாட்கள் செய்தால் புட்டாலம்மை நோய் குணமாகும் agathi keerai benefits in tamil அகத்திக்கீரை நன்மைகள்.

அகத்திக்கீரை தீமைகள்

  • அகத்திக்கீரை முற்றிவிட்டால் அது சற்று கடினத் தன்மையை அடைந்து விடும். முற்றின கீரையைச் சமையலுக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது. இளங் கீரையையே எடுக்க வேண்டும்.
  • சித்த மருந்து உபயோகிப்பவர்கள் அகத்திக்கீரையை சாப்பிட கூடாது.
  • அகத்திக்கீரையை அதிகம் சாப்பிட்டுவந்தால் தோல் அரிப்பு ஏற்படும்.
  • மது அருந்திவிட்டு அகத்திக்கீரையை சாப்பிடக்கூடாது

அகத்திக்கீரை சூப்

அகத்திக்கீரை சூப்
அகத்திக்கீரை சூப்

அரிசி கழுவிய நீரில் அகத்திக் கீரையைச் சேர்த்து சூப் வைத்துக் குடித்தால் கல்லீரல், இருதயம், ஆகியவைவலிமை அடையும்.

அகத்திக்கீரை குழம்பு

அகத்திக் கீரையைப் பருப்புச் சாம்பார், பருப்புக் குழம்பு இவைகளுடன் போடலாம். கூட்டு, பொரியல் செய்யலாம் agathi keerai benefits in tamil அகத்திக்கீரை நன்மைகள்.

முகம் பொலிவுடன் இருக்க

முகம் பொலிவு பெற

முகம் மாசு மறுவற்றுப் பொலிவுடன் இருக்க வேண்டுமாயின் கீழ்க்காணும் முறையைக் கையாளுங்கள்.

அகத்திக் கீரையை நன்றாக கசக்கிப் பிழிந்து சாறு எடுத்துக் கொண்டு இரவில் படுக்கைக்குப் போகும் முன் இந்த சாறை முகத்தில் பூசிக் கொண்டு காலையில் எழுந்ததும் கடலைப் பருப்பு மாவில் சிறிது தண்ணீர் விட்டுக் குழைத்து முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் மாசு மறுவற்று பொலிவுடன் இருக்கும்.

சாறு எடுக்க இயலாதவர்கள் புதினாக் கீரையை அரைத்து சந்தனம் போன்று முகத்தில் தேய்த்துக் காலையில் முதலில் குறிப்பிட்டவாறு முகத்தைக் கழுவினால் முகம் பொலிவு பெறும்.

பித்தம் தணிய

பித்தம் அதிகமானால் உடலில் பல கோளாறுகள் உண்டாகும். ஆதலின் பித்தம் தணிய அகத்தித் தைலம் உபயோகித்துக் குணமாக்கிக் கொள்ளவும்.

அகத்திக் கீரையைக் கொண்டு வந்து சுத்தமாகக் கழுவி, நன்கு இழுத்து அரை லிட்டர் சாறு எடுத்துக் கொள்ளவும். அந்தச் சாறை மட்பாண்டத்தில் ஊற்றி அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து அடுப்பில் ஏற்றி நீர் நன்கு சுண்டும் வரை கிளறிதைலப்பதத்திற்கு வந்ததும் கீழே இறக்கி விடவும்.

அதனை வடிகட்டி கண்ணாடிப் பாட்டிலில் பத்திப்படுத்திக் கொண்டு வாரம் ஒரு முறை தலைக்கு அந்தத் தைலத்தைத் தடவி சிறிது நேரம் வேறவிட்டு தலை முழுகவும். இதனால் பித்தம் தணியும். ஆனால் தலை முழுகிய அன்று பகலில் தூங்கக் கூடாது.

சூரியடுளியினால் உண்டாகும் குறைபாடுகளுக்கு

சூரிய உஷ்ணத்தினால் ஒரு சிலருக்கு அலர்ஜியாகி சில குறை பாடுகள் தோன்றக் கூடும். குறிப்பாக கண்ணெரிச்சல், தலை சுற்றல் போன்றவை உண்டாகி கஷ்டத்தைக் கொடுக்கும்.

இதுபோன்ற குறைபாடுகளுக்கு அகத்திப் பூ நல்ல மருந்தாக உள்ளது.

அகத்திப் பூவைக் கொண்டு வந்து சுத்தமாகக் கழுவி பொடியாக நறுக்கி அதில் பசும்பால் விட்டுக் காய்ச்சி எடுத்துக் கடைந்து சர்க்கரைச் சேர்த்து இரவு படுக்கைக்குப் போகும் முன் அருந்தவும்.

இதனால் கடுமையான வெய்யிலில் அலைவதினால் ஏற்படும் கண்ணெரிச்சல், தலைச் சுற்றல், உடல் உஷ்ணம் போன்ற குறைபாடுகள் குணமாகும்.

கை, கால் எரிச்சல், வயிற்று எரிச்சல் நீங்க

இதுபோன்ற குறைபாடுகளுக்கு அகத்திமரப் பட்டைக் கஷாயம் குணமாக்குகிறது. அகத்திமரப்பட்டை 25 கிராம் எடுத்து நன்றாக அரைத்து 200 மில்லி நீர்விட்டுக் காய்ச்சவும்.

நீர்பாதியாகச் சுண்டியதும் இறக்கி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இதனைக் காலை, மாலை என இருவேளைக்குப் பங்கிட்டுக் குடித்துவந்தால் கை, கால்களில் எரிச்சல் இருந்தால் குணமாகும்.

அகத்திக் கீரையை உண்பதினால் நீங்கும் வியாதிகள்

அகத்திக் கீரையை உணவில் வாரத்திற்கு இரண்டு முறையாவது பயன்படுத்த வேண்டும்.

வாரத்திற்கு இரண்டு முறை உண்பதினால் உடலிலுள்ள உஷ்ணம் தணியும். கண்கள் குளிர்ச்சி பெறும். சிறு நீர் தடையில்லாமல் கழியும், மலம் இளகி மலச்சிக்கல் இல்லாமல் இருக்கும். பித்த மயக்கம், மகோத வீக்கம் போன்ற குறைபாடுகள் நீங்கும்.

இரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் அகத்திக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு நோய் குணமாகும்.

குடற்புண் உள்ளவர்கள் அகத்திக் கீரையைக் கொஞ்சம் பச்சையாகவே தொடர்ந்து சாப்பிட்டால் குடற்புண் குணமாகிவிடும்.

கடுமையான வயிற்று வலியா?

கடுமையான வயிற்று வலியினால் அவதிப்படுபவர்கள் நிவாரணம் பெற ஒருவழி. அகத்திக் கீரையைச் சுத்தம் செய்து நீர் விட்டு வேக வைத்து அந்த நீரில் சிறிது தேன் கலந்து குடித்தால் கடுமையான வயிற்றுவலி காணாமல் போய்விடும்.

அடிபட்டு இரத்தம் வடிந்தால்

அகத்திக் கீரையைக் கொஞ்சம் அம்மியில் வைத்து மைபோல அரைத்து அடிபட்ட இடத்தில் காயத்தின் மேல் வைத்துக் கட்டினால் இரத்தம் வடிவது நின்றுவிடும். காயம்பட்ட இடம் சீழ் பிடிக்காமல் விரைவில் ஆறிவிடும்.

 

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button