மூலிகைசெடி மரம்

ஆடாதோடை பயன்கள்

ஆடாதோடை பயன்கள் adathodai leaf benefits in tamil ஆடாதோடை அபூர்வ குணங்களைக் கொண்டது. மூலிகைகளில் முக்கியப் பங்கு வகிப்பது ஆடாதோடயைாகும். எங்கும் வளரக் கூடியது. ஆடாதோடையின் இலை சற்று நீளமாகப் பச்சையாக இருக்கும்.

பூக்கள் மணத்துடன் வெள்ளையாக இருக்கும். இதனுடைய வேர், பட்டை, இலை ஆகியவை எல்லாமே மருத்துவத்திற்குப் பயனளிக்கிறது. தீராத சுவாச காச நோயினாலும், கபத்தினாலும் கஷ்டப்படுபவர்கள் ஆடாதோடை இலையினால் நலம் பெறலாம்.

ஆடாதோடை பயன்கள் – adathodai leaf benefits in tamil

கண்களில் சிவப்பு

கண்களில் சிவப்பு

ஒரு சிலருக்குக் கண்கள் எப்போதும் கோவைப் பழம் போன்று சிவந்து காணப்படும். சில சமயம் வலியும் உண்டாகும். இதனைப் போக்கிக் கொள்ள ஆடாதோடை இலை பலனளிக்கிறது. ஆடாதோடைப் பூக்களைக் கொண்டு வந்து இரவுப் படுக்கைக்குப் போகும் முன்னர் கண்களின் மேல் கட்டிக் கொண்டு படுத்துக் கொள்ள வேண்டும்.

இது போன்று மூன்று முறை செய்தால் கண்களில் உள்ள சிவப்பு நிறம் மாறும். மேலும் மூன்று நாட்கள் இவ்வாறே கட்டினால் கண்களில் முழுமையாக சிவப்பு நிறம் மாறி கண்வலியும் இல்லாமல் போய்விடும்.

குன்றிமணி பயன்

வாயிலிருந்து இரத்தம் வடிதல் ஆடாதோடை பயன்கள்

சுவாச காசம் குணமாக கீழ்க்காணும் முறையில் செயல்பட்டு குணமாக்கிக் கொள்ளலாம். ஆடாதோடை இலையை ஆறுமட்டும் எடுத்து நன்றாக மைய அரைத்து, ஆலிலை ஒன்றின் மேல் வைத்து மறுபக்கமும் ஓர் ஆலிலையினால் மூடித் தைக்க வேண்டும்.

பின்னர் செம்மண்ணினால் நனைக்கப்பட்டத் துணியால் ஆலிலைப் பொட்டலத்தைச் சுற்றி நன்கு ஆவியில் வேக வைக்க வேண்டும். வெந்த பின்பு பொதித்துள்ள துணியையும் ஆலிலையையும் எடுத்து விட்டு உள்ளே இருக்கும் ஆடாதோடை பயன்கள் adathodai leaf benefits in tamil.

ஆடாதோடை இலையின் விழுதை அப்படியே பிழிந்து ஒரு பெரிய கரண்டி அளவு சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் சுத்தமான தேன் அரை ஸ்பூன் கலந்து சாப்பிடவும். இது போன்று தொடர்ந்து செய்து வந்தால் தீராத கபம், சுவாச கோசம் ஆகியவைகள் நீங்கும். தவிர வாயிலிருந்து இரத்தம் வடிந்தாலும் உடனே நின்றுவிடும்.

இழுப்பு இருந்து மூச்சுவிட சிரமமாக இருந்தால்

மேற்கண்ட வியாதிகள் விலக கீழ்க்காணும் முறையில் ஆடாதோடை கஷாயம் செய்து குடித்து வந்தால் பூரண குணமாகும்.

ஆடாதோடை இலை 75 கிராம், விதைத் திராட்சைப் பழம் 50 கிராம், கடுக்காய்த் தோல் 50 கிராம் ஆகியவற்றைச் சேகரித்து இவைகளை நைத்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு 2 லிட்டர் தண்ணீர் விட்டு 1 லிட்டராகக் சுண்டக் காய்ச்சி, ஆறவிடவும்.

ஆறியதும் அதனை நன்றாகப் பிசைந்து வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றிப் பத்திரப்படுத்திக் கொள்ளவும். இந்த கஷாயத்தைத் தினசரி காலை, மாலை ஒரு வேளையும் வேளைக்கு அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட நோய்கள் குணமாகும்.

கல் வாயுவினால் பிடிப்பு, வலி அகல: ஆடாதோடை இலை 50 கிராம், அதன் பட்டை 50 கிராம் சேர்த்து நீர் விட்டு அடுப்பில் ஏற்றி கஷயாமாக்கிக் கொள்ளவும். கீல் வாயுப் பிடிப்பினால் வலி ஏற்பட்டு வேதனைக் கொடுக்கும் இடத்தில், இக்கஷாயத்தைச் சூட்டோடு கழுவினால் கீல்வாயு வலியும், வீக்கமும் அகலும் ஆடாதோடை பயன்கள் adathodai leaf benefits in tamil.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button