வீட்டு மருத்துவம்

தலை முடி உதிர்வை தடுக்கும் ஆவாரம் பூ | aavaram poo benefits for hair in tamil

தலை முடி உதிர்வை தடுக்கும் ஆவாரம் பூ 

aavaram poo benefits for hair in tamil  “இயற்கையுடன் இணைந்து வாழ்வோம் !” வணக்கம் நண்பர்களே , இந்த பதிவில் நாம் ஆவாரம் பூவின் நன்மைகளை பற்றி பார்க்கலாம். பொதுவாகவே ஆவாரம் பூவானது  உடலின் அனைத்து பிரச்சினைகளை தீர்வாக இருக்கிறது. மாதவிடாய் கோளாறுகள் , சர்க்கரை நோய்கள் போன்ற பிரச்சனைகளுக்கு  மட்டும் தீர்வாக இல்லாமல் தலை முடி வளர்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ !

இது சித்தர்கள் கூறும் ஒரு தெய்வ வாக்கியம் .

இது ஒரு காய கல்ப மூலிகை

என்பது சித்தர்களின் வாக்கு சொன்னது.

aavaram poo benefits for health in tamil முகம் பொலிவு தரும் ஆவாரம் பூ ஆவாரம் பூ முகத்திற்கு ஆவாரம் பொடி செய்யும் முறை ஆவாரம் பூ உடல் பாதுகாப்புக்கு ஆவாரம் பூ நீரிழிவு நோயாளிகளுக்கு

ஆவாரம் பூவின் நன்மைகள் – aavaram poo benefits for hair in tamil 

ஆவாரம் பூ தலை முடிக்கு சிறந்த போஷாக்கை அளிக்கிறது. பொதுவாகவே பெண்களுக்கு முடி அதிகமாக இருந்தாலே ஒரு அழகு தான். பெண் என்றாலே அதிக கூந்தல் வளர்ச்சி இருந்தால் அதுவே அந்த பெண்ணுக்கு தனிச்சிறப்பை தரும்.

  • ஆவரம் பூ பொடியானது தலை முடிக்கு சிறந்த போஷாக்கை தருகிறது.
  • முடியின் வேருக்கு நல்ல சக்தியை கொடுக்கிறது. சிறந்த வலுவூட்டத்தை கொடுத்து கூந்தலை  பொலிவூற செய்கிறது 
  • ஆவாரம் பூ பொடியை தலைக்கு தேய்த்து குளிக்கும் போது தலையில் பொடுகு தொல்லை குறையும்.
  • வேர்வை தொல்லையால் தலைமுடியில் வரக்கூடிய நாற்றத்தை சரி செய்து கூந்தலுக்கு நல்ல மனத்தை தருகிறது.
  • ஆவாரம் பூவானது சூரிய வெளிச்சத்தால் வரக்கூடிய தூசிகளில் இருந்து கூந்தலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. 
  • தலைமுடி அடர்த்தியாக வளருவதற்கும் , நீளமாக வளருவதற்கும் முடியின் வேர் வரை சென்று அவற்றுக்கு வலுவூட்டதை கொடுக்கிறது. 
  • ஆவாரம் பொடியை தலைக்கு தேய்த்து குளிப்பதனால் உடல் சூடு தனித்து உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியை தருகிறது. 
  • ஆவாரம் பூ பொடியை காலையில் எழுந்தவுடன் அதனை நீரில் கலந்து குடிப்பதன் மூலமும் நன்மை ஏற்படும்.

aavaram poo benefits for health in tamil முகம் பொலிவு தரும் ஆவாரம் பூ ஆவாரம் பூ முகத்திற்கு ஆவாரம் பொடி செய்யும் முறை ஆவாரம் பூ உடல் பாதுகாப்புக்கு ஆவாரம் பூ நீரிழிவு நோயாளிகளுக்குஆவாரம் பூ பொடி – aavaram poo benefits for hair in tamil  

முடி வளருவதற்கு நாம் என்னதான் வெளிப்புறமாக அதனை பராமரிப்பதால் மட்டும் பயன் அளிப்பது இல்லை, அது வெறும் தற்காப்பு மட்டுமே. நம் எடுக்கும் உணவுக்கும் தலைமுடிக்கும் கூட சம்பந்தம் உண்டு. நம் எடுக்கும் உணவு பொருட்களை வைத்து தான் உடல் ஆரோக்கியம் தீர்மானிக்கப்படும் .

ஆவாரம் பொடியை காலையில் எழுந்தவுடன் அதனை நீரில் கலந்து சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை ஏற்படும். உடல் சருமத்தை பராமரிப்பதோடு மட்டுமில்லாமல் தலைமுடிக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்.

ஆவாரம் பூ பொடி தயாரிப்பு

ஆவாரம் பூ பொடி தயாரிக்க ஆவாரம் பூவை பறித்து அதனை வெயிலில் காயவைக்காமல் அதனை நிழலில் உலர்த்தி பின்பு அதனை  பொடி செய்வதனால் ஆவாரம் பூவின் நன்மைகள் அப்படியே நமக்கு கிடைக்கின்றன.

ஏனெனில் நேரடியாக ஆவாரம் பூவை காயவைப்பதனால் அதோட சக்தியை இழந்துவிடுகிறது.அதனை கண்டுபிடிப்பது எளிது சூரிய வெயிலில் காயவைத்த பொடியை பார்க்கும்போது அது பிரவுன் கலராக இருக்கும். நிழலில் உலர்த்திய பூவில் செய்த பொடி மஞ்சள் கலரில் இருக்கும்.

ஆலிவ் எண்ணெய் நன்மைகள் uses of olive oil in tamil olive oil for face benefits in tamil olive oil uses in tamil ஆலிவ் ஆயில் பயன்கள்

ஆவாரம் பூ எண்ணெய் – aavaram poo benefits for hair in tamil 

ஆவாரம் பூ எண்ணெய் தயாரிப்பதற்கு முதலில் ஆவாரம் பூ , செம்பருத்தி பூ , மருதாணி இலை , மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை , நறுக்கிய காட்டு நெல்லிக்காய் துண்டுகள் இவை அனைத்தையுமே உலர் வெயிலில் நன்கு காயவைக்கவேண்டும். பின்பு மரச்செக்கு தேங்காய் எண்ணெய் எடுத்து அதனை  இரும்பு  கடாயில் காயவைத்து சிறிது வெட்டி வேர் போடவும் பின்பு நாம் காயவைத்த பொருட்களை எல்லாம் சேர்த்து நன்கு காய்ச்சவும். பின்பு ஒருநாள் முழுவதும் அதனை வடிகட்டி பின்பு அந்த எண்ணெயை வாரத்தில் மூன்று நாட்கள் தலைக்கு நன்கு முடியின் வேர்க்கால்கள் முழுவதும் தேய்த்து மசாஜ் செய்து பின்பு தலைமுடியை கழுவுங்கள்.

aavaram poo benefits for health in tamil முகம் பொலிவு தரும் ஆவாரம் பூ ஆவாரம் பூ முகத்திற்கு ஆவாரம் பொடி செய்யும் முறை ஆவாரம் பூ உடல் பாதுகாப்புக்கு ஆவாரம் பூ நீரிழிவு நோயாளிகளுக்கு

ஆவாரம் பூ + ஆலிவ் ஆயில் 

ஆவாரம் பூவை காயவைத்து அதனை ஆலிவ் ஆயிலில் நன்கு சூடுபடுத்தி பின்பு அந்த எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் தலைமுடிக்கு நன்மை அளிப்பதோடு மட்டுமில்லாமல் முகத்திற்கும் அதனை பயன்படுத்தி பொலிவான தோற்றத்தை பெறலாம்.

வைட்டமின் குறைபாடும் நிவர்த்தி உணவும்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button