செடி மரம்மூலிகை

ஆலமரம் பயன்கள்

aalamaram tree uses in tamil ஆலமரம் பயன்கள் ஆல் ஆலமரம் பெரு மரமாகும். இதன் இலைகள் அகன்று இருக்கும். இலைகளிலிருந்து விழுதுகள் வளர்ந்து தரையில் ஊன்றி பெரு மரத்தைத் தாங்கும்.

நிழலுக்காக தமிழகம் முழுவதும் வளர்க்கப்படும் மரமான இதன் இலை, மொட்டு, பழம், விதை, மரப்பட்டை, விழுது ஆகியவைகள் எல்லாம் மருத்துவச் சிறப்புடையதாகும்.

மதுமேக நோய்க்கு ஆலம் கஷாயம்

மதுமேக நோய் குணமாக இந்தக் கஷாயத்தை உபயோகப் படுத்தலாம். இந்த கஷாயத்தை நான்கு நாட்களுக்கு ஒரு முறை காய்ச்சிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆலமரப் பட்டை 250 கிராம், ஆலமர வேர்ப்பட்டை 250 கிராம் ஆகிய இரண்டையும் நன்கு இடித்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு 4 லிட்டர் சுத்தமான நீர்விட்டு அடுப்பிலேற்றி 1 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி இறக்கி வடிகட்டி கண்ணாடிப் பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.

இந்தக் கஷாயத்திலிருந்து 250 மில்லி எடுத்துக் காலையில் மட்டும் குடித்துவரவும்.

நோயின் தன்மைக்கேற்றபடி1 முதல் 4 மண்டலம் வரையில் குடித்து வந்தால் மதுமேக நோய் பூரணமாக குணமாகும் aalamaram tree uses in tamil ஆலமரம் பயன்கள்.

நாக்கு, உதடு வெடிப்பு வாய் ரணம் குணமாக

மேற்கண்ட குறைபாடுகள் குணமாக ஆலமரத்தின் பாலைக் கொண்டு வந்து காலை, மாலை இருவேளை மேல் பூச்சாக தடவி வந்தால் குணமாகும்.

விந்துவில் உயிர் அணுக்கள் உற்பத்தியாக

விந்துவில் உயிர் அணுக்கள் இல்லையென்றால் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை. ஆகையினால் ஆண்கள் விந்துவில் உயிர் அணுக்களைப் பெருக்கிக் கொள்ள ஒரு வழிமுறை.

ஆலம் பழம், கொழுந்து, விழுது ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து அம்மியில் வைத்து மெழுகாக அரைத்தெடுத்துக் கொள்ளவும்.

இதில் எலுமிச்சம் பழம் அளவு எடுத்து காலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிடவும். இது போன்று 120 நாட்கள் சாப்பிட்டால் விந்துவில் உயிர் அணுக்கள் உற்பத்தியாகும் aalamaram tree uses in tamil ஆலமரம் பயன்கள்.

வேம்பு மருத்துவ பயன்கள்

கொறுக்க நீங்க

கொறுக்கு நோயினால் மிகவும் கஷ்டப்படுகின்றவர்கள் கீழக்காணும் மருத்துவ முறையைக் கையாண்டு நலம் பெறலாம்.

ஆலம் பால் 20 துளிகள் எடுத்து அதில் சர்க்கரையைச் சேர்த்துப் பிசரி சாப்பிட வேண்டும்.

இதுபோன்று 48 நாட்கள் உட்கொண்டால் கொறுக்கு நோய் குணமாகும். இதனை உட்கொள்ளும் காலங்களில் புளி, காரம் நீக்கி உணவு உட்கொள்ள வேண்டும்.

பற்கள் உறுதியாக

பல்வலி குணமாக

பற்கள் உறுதியாக இருக்க வேண்டுமாயின் ஆலம் விழுதைக் கொண்டு பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதிபெறும். பல் சம்பந்தமான நோய்களும் வராது.

கரப்பான் அகல

ஆலம் பழுப்பிலையைக் கொண்டு வந்து தீயில் எரித்து சாம்பலாக்கி அந்தச் சாம்பலில் நல்லெண்ணெய் விட்டக் குழப்பிப் போட்டுவர கரப்பான் அகலும்.

ஆலம் பழுப்பு இலையோடு நெற்பொரி கலந்து நீர்விட்டுக் காய்ச்சி ஆறவிட்டுக் குடித்துவர வியர்வை பெருகும் aalamaram tree uses in tamil ஆலமரம் பயன்கள்.

இரத்த பேதிக்கும் தாய்ப்பால் பெருக்கத்திற்கும்

ஆலமரத்தின் துளிர் இலைகளைக் கொண்டு வந்து மெழுகாக அரைத்து 5 கிராம் அளவு எடுத்துத் தயிரில் கலந்து உட்கொண்டால் இரத்த பேதி உடனே நின்றுவிடும்.

ஆலம் விழுது, துளிர், விதை இம்மூன்றையும் சம அளவு எடுத்து மெழுகாக அரைத்தெடுத்து 5 கிராம் அளவு பசும்பாலில் கலந்து காலையில் மட்டும் உட்கொண்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.

ஆலமரம் மருத்துவ பயன்

  1. ஆலம் துளிர் அல்லது ஆலம் விழுது சேர்த்துக் காய்ச்சிய பாலை உட்கொண்டால் கீழ்நோக்கிய இரத்தப் பித்தம் தணியும்.
  2. ஆலம் அத்தி அரச என்னும் இவற்றின் துளிர்களைக் காய்ச்சிய நீரில் ஒரிரவும், பகலும் ஊற வைத்து வடிகட்டி அதில் நெய் சேர்த்துப் பக்குவம் செய்து அதில் பாதி அளவு சர்க்கரையும், நான்கில் ஒரு பங்கு தேனும் கலந்து உகொண்டால் மலத்துடன் அல்லது மலத்திற்கு முன்பாகவோ, பிறகோ இரத்தம் வெளியேறுகின்ற இரத்த அதிகாரம் தணியும்.
  3. இலக்கட்டை சிற்றாமுட்டிவேர். ஆலம துளிர் இவற்றை மைய அரைத்து பூசினால் விரணம் ஆறும்.
  4. ஆலம் பட்டைக் கஷாயம் பாச்சோத்திப் பட்டையின் விழுதைக் கலந்து பருகினால் வெள்ளைப் பெரும்பாடுதணியும்.
  5. ஆலம் பாலில் பச்சைக் காப்புரத்தூளைக் கலந்து கண்களில் மையாக இபால்கண்நோய் தணியும்.
  6. ஆலம் பால், கோஷ்டம், ரோகமம் என்னும் உப்பு ஆகியவற்றை மைய அரைத்துப்பூச் ஆலம்பட்டை விழுதைப் பூசி ஏழு நாட்கள் கட்டினால் எலும்பு முறிவு நீங்கும்.
  7. ஆலம் துளிரையும் சிறுகடலையையும் மைய அரைத்து முகத்தில் பூசிக் கொண்டால் வங்குதிரும்.
  8. நாள்தோறும் ஆலம் பாலைக் காலையிலும், நண்பகலிலும், மாலையிலும் விரணங்களின் மேல் பூசினால் விரணங்களில் தோன்றும் கருமிகள் அழியும்.
  9. ஆலம் விழுதின் கஷாயத்தில் நெய் கலந்து பருகினால் காய்ச்சலால் தோன்றும்ளிச்சல் தணியும்.
  10. ஆலம் துளிரை சுக்லபக்ஷத்துப் பூச நன்னாளில் கொண்டு நீர்விட்டு அரைத்து மாதவிடாய் ஆன நாளில் உட்கொண்டால் மலடியும் கருவைத் தாங்கக்கூடியவள் ஆவாள்.

ஆலங்கொழுந்து

நீடித்த இந்திரிய உடைசல் குணமாக ஆலங்கொழுந்தை பசும்பால் விட்டு மைபோல அரைத்து எலுமிச்சையளவு எடுத்து ஆழாக்குப் பாலில் கலந்து காலை மாலை தொடர்ந்து 21 தினங்கள் கொடுத்துவந்தால் நீடித்த இந்திரிய உடைசல் நிற்கும். இந்திரியம் கெட்டிப்படும்.

aalamaram tree uses in tamil ஆலமரம் பயன்கள்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button